Home /News /trend /

அப்பா இறந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு மகள் கைக்கு கிடைத்த கடிதம்... என்ன இருந்தது தெரியுமா?

அப்பா இறந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு மகள் கைக்கு கிடைத்த கடிதம்... என்ன இருந்தது தெரியுமா?

தந்தை எழுதிய கடிதம்..

தந்தை எழுதிய கடிதம்..

Viral Post | தனது தந்தை இறந்து 9 ஆண்டுகளுக்குப் பிறகு அவர் கைப்பட எழுதிய முக்கியமான குறிப்பு ஒன்றை அவருடைய மகள் கண்டுபிடித்துள்ள ஆச்சர்யத்தக்க சம்பவம் இணையத்தை நெகிழ வைத்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • inte, IndiaUSUSUSUSamericaamerica
  வெளி நாடுகளில் படிப்பு, வேலை, வாழ்க்கை போன்ற காரணங்களுக்காக 18 வயதிலேயே குழந்தைகள் பெற்றோரை பிரிந்து தனியாக வசிக்க ஆரம்பிக்கின்றனர். வெளிநாடுகளில் வயதான முதியர்களுடன் அவர்களது பிள்ளைகள் வசிப்பது என்பது மிகவும் அரிதான ஒன்று. எனவே தான் அங்குள்ள முதியவர்கள் தனது தோட்டத்தை பராமரிப்பு முதல் வீட்டில் உள்ள பொருட்கள், செல்லப்பிராணிகள், வாகனங்கள் ஆகியவற்றைப் பற்றியெல்லாம் குறிப்பெழுதி வைப்பது உண்டு. இதுவும் ஒருவகையில் உயில் தான், தனது மரனத்திற்கு பிறகு தனது ஆசையை நிறைவேற்ற வேண்டியோ அல்லது தான் ஆசையாய் வைத்திருந்தை பத்திரமாக பாதுகாக்கும் படியோ கேட்டிருப்பார்கள்.

  அப்படி எழுதி வைக்கப்படும் குறிப்புகள் அல்லது டைரி மகள், மகன் ஆகியோருக்கு பல தகவல்களைக் கொண்ட பொக்கிஷமாக கிடைப்பதும் உண்டு.தற்போது அமெரிக்காவில் உள்ள பேராசிரியர் ஒருவருக்கு அவரது மரணத்திற்கு 9 ஆண்டுகள் முன்பு அவரது தந்தை எழுதிய குறிப்பு ஒன்று கிடைத்துள்ளது. அமெரிக்காவில் உள்ள லூயிஸ்வில் பல்கலைக்கழகத்தின் பேராசிரியரான ஏமி க்ளூகி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு, சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

  தனது மறைந்த தந்தையின் தேனீ வளர்ப்பு உபகரணங்களை எடுக்கச் சென்ற போது, ஏமி க்ளூகி அவரது அப்பா 9 ஆண்டுகளுக்கு முன்பு எழுதிய கடிதம் கண்ணில் பட்டுள்ளது. . ஜூலை 27, 2012 தேதியிட்ட, அந்த கடிதத்தில் எமியின் தந்தை தனது பிள்ளைகள் தேனீ வளர்ப்பில் ஆர்வம் காட்ட வேண்டும் என வேண்டுகோள் வைக்கும் விதமாக எழுதியுள்ளார்.  "தேனீ வளர்ப்பில் ஆர்வமுள்ள எனது குழந்தைகளில் ஒருவரால் இந்த குறிப்பு கண்டுபிடிக்கப்பட்டிருக்கும் என்று நம்புகிறேன்" என அந்த குறிப்பில், “தேனீ வளர்ப்பு உண்மையில் மிகவும் எளிதானது மற்றும் நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தையும் ஆன்லைனில் கற்றுக்கொள்ளலாம்." என குறிப்பிடப்பட்டுள்ளது. தேனீக்கள் தேனை மட்டுமல்ல, அதனைவிட பலனுள்ள பல பொருட்களை கொடுக்கின்றன. இது ஒரு பொழுபோக்காகவும், கூடுதல் வருமானம் தரக்கூடியதாகவும் இருக்கும். எனவே பயப்படாமல், தைரியமாக செய்யுங்கள், அதிர்ஷ்டம் துணை இருக்கும். இப்படிக்கு அன்பு அப்பா” என எழுதி, அவரது கையொப்பமும் இடப்பட்டுள்ளது.

  அந்த குறிப்பின் புகைப்படத்தை ட்விட்டரில் பகிர்ந்துள்ள ஏமி, “என் அப்பாவின் குறிப்பு அவர் இறந்து ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு அவரது தேனீ வளர்ப்பு உபகரணங்களில் கிடைத்தது” என பதிவிட்டுள்ளார். இந்த ட்வீட் ஒரு லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளையும், நூற்றுக்கணக்கான கமெண்ட்களையும் குவித்துள்ளது. தனது பதிவிற்கு கிடைத்த வரவேற்பை பார்த்த ஏமி, தனது தந்தை தந்தை குவாட் பைக்கில் அமர்ந்திருக்கும் படத்தைப் பகிர்ந்துள்ளார்.

  அத்துடன் “இந்த பதிவு இவ்வளவு கவனத்தை ஈர்க்கும் என்று நான் எதிர்பார்க்கவில்லை, ஆனால் என் அப்பா அதைப் பாராட்டியிருப்பார் என்று நினைக்கிறேன். இந்த குறிப்பை எழுதிய அதே காலக்கட்டத்தில் நானும் எனது தந்தையும் கோடையில் சென்ற பைக் ட்ரிப் போட்டோவை இணைந்துள்ளேன்” என பதிவிட்டுள்ளார். இந்த பதிவும் நெட்டிசன்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.

   
  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending, Viral

  அடுத்த செய்தி