• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ரூபிக்ஸ் கியூப் சாதனை.. WWE வீரர் கொண்டாடிய டிஸ்லெக்சியா பாதித்த சிறுவன்.. (வீடியோ)

ரூபிக்ஸ் கியூப் சாதனை.. WWE வீரர் கொண்டாடிய டிஸ்லெக்சியா பாதித்த சிறுவன்.. (வீடியோ)

ஜான் சீனாவிற்கு ஆச்சர்யமூட்டிய சிறுவன்

ஜான் சீனாவிற்கு ஆச்சர்யமூட்டிய சிறுவன்

பெஞ்சமின் ருஸ்ஸோ எனும் 9 வயது சிறுவன் யூடியூபில் பலரது மனதையும் வென்றுள்ளார். சிறுவனின் சாதனையை கண்ட ஜான் சீனா உனது விடாமுயற்சி, தைரியம் , மிகப்பெரிய வலிமை அனைத்தையும் நான் பாராட்டுகிறேன் என தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

  • Share this:
    ரூபிக்ஸ் கியூப் குழந்தைகளின் மூளையை சுறுசுறுப்பாகவும், உற்சாகமாக உடலை வைத்துக்கொள்ளவும் உதவும். இதனை வைத்து 9 வயது சிறுவன் ஒருவன் நிகழ்த்திய சாகசம் இணையத்தில் அனைவரது பாராட்டையும் பெற்று வருகின்றது. ரூபிக்ஸ் கியூப் கொண்டு ஜான் சீனாவின் முழு உருவத்தையும் வரைந்து சாதனை படைத்துள்ளார் பெஞ்சமின் ருஸ்ஸோ.

    இது குறித்து சிறுவன் கூறுகையில், "எனக்கு டிஸ்லெக்ஸியா உள்ளது. நான் படிப்பதற்கும் எழுதுவதற்கும் சிரமப்படுகிறேன். சில சமயங்களில் நான் மிகவும் விரக்தியடைகிறேன், வருத்தப்படுகிறேன்" என்று அவர் தனது யூடியூப் வீடியோவில் பகிர்ந்துள்ளார்.



    டிஸ்லெக்ஸியா என்பது கற்கும் திறன்கள் மற்றும் மொழியைப் புரிந்துகொண்டு செயல்முறைப்படுத்துதல் ஆகியவற்றில் ஏற்படும் ஒரு கற்றல் குறைபாடு. டிஸ்லெக்ஸியா பிரச்னை கொண்ட குழந்தைகளுக்கு வாசித்தல், எழுதுதல், ஸ்பெல்லிங் சொல்லுதல் அல்லது பேசுதல் ஆகிய நடவடிக்கைகளில் சிரமங்கள் இருக்கும். இவற்றைக்கொண்டபொழுதும் 9 வயதான பெஞ்சமின் ருஸ்ஸோ தனது குறைபாட்டை பெரிதாகக் கொள்ளாமல் சாதிக்க வேண்டும் எனும் எண்ணம் கொண்டு இது போன்று உருவ படங்களை ரூபிக்ஸ் கியூப் கொண்டு வரைந்து வருகின்றார். இதன் மூலம் பலரது யூடியூபில் மனதையும் வென்றுள்ளார்.

    இதனை அறிந்த WWE வீரர் ஜான் சீனா தனது ட்விட்டர் பக்கத்தில் சிறுவனின் வீடியோவை பதிவிட்டு பாராட்டியுள்ளார்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: