Home /News /trend /

85 வயதில் இப்படி ஒரு சாதனையா! அசர வைக்கும் பாட்டி..

85 வயதில் இப்படி ஒரு சாதனையா! அசர வைக்கும் பாட்டி..

காட்சி படம்

காட்சி படம்

World;'s Oldest Squash Player : 8 வயதில் கால்பந்து விளையாட துவங்கியதன் மூலம் என் வாழ்வில் விளையாட்டு நுழைந்தது.

வயதானவர்களால் நல்ல பார்வை திறன் மற்றும் கூர்மையான விழிப்புணர்வு திறன் கொண்ட கேம்களை விளையாட முடியாது என்ற கருத்தை நம்புபவரா நீங்கள்.?ஆனால் உங்களது இந்த நினைப்பிற்கு முற்றுப்புள்ளி வைக்கிறார் 85 வயதான மார்கரெட் ஆம்ஸ்ட்ராங் என்ற பெண்மணி.

யுனைட்டட் கிங்டமை சேர்ந்த 85 வயதான மார்கரெட் ஆம்ஸ்ட்ராங், உலகின் வயதான பெண் ஸ்குவாஷ் வீராங்கனையாக கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸால் (Guinness World Records) அங்கீகரிக்கப்பட்டு உள்ளார். இந்த வயதிலும் ஒரு வாரத்திற்கு இரண்டு முறை ஸ்குவாஷ் விளையாடுகிறார். மார்கரெட் ஒரு முன்னாள் கவுண்ட்டி ஸ்குவாஷ் வீரர் என்று கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸின் வெப்சைட்டில் குறிப்பிடப்பட்டு உள்ளது.

பல ஆண்டுகளுக்கு முன் ஒரு கார் விபத்தை சந்தித்து கணுக்காலில் காயமடைந்து அறுவை சிகிச்சை செய்து கொண்ட போதும் மார்கரெட் ஆம்ஸ்ட்ராங், ஸ்குவாஷ் மற்றும் சில நேரங்களில் டென்னிஸ் விளையாடுவதை நிறுத்தவில்லை. வீராங்கனையாக இருந்த போது பல ஸ்குவாஷ் போட்டிகளில் பங்கேற்று பல பெண்கள் ஒற்றையர் சாம்பியன்ஷிப் கோப்பை வென்றுள்ளார் என்று பிபிசி வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.



ஸ்குவாஷ் எனக்கு மிகவும் பிடிக்கும் என்பதால், எனக்கு பிடித்ததை நான் செய்வதால் என்னால் இந்த வயதிலும் விளையாட முடிகிறது என்கிறார் மார்கரெட் ஆம்ஸ்ட்ராங். மேலும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்று உங்களுக்குத் தெரிந்தால் நீங்கள் அதிகம் ஓட வேண்டியதில்லை. நான்கு சுவர்களுக்குள் அடைபட்டு கிடப்பதற்கு பதில், அதே 4 சுவர்களை விளையாட்டிற்காக பயன்படுத்தி வருகிறேன் என்றும் குறிப்பிடுகிறார்.

also read : உயரமான கட்டிடத்திலிருந்து குதிக்கும் பெண்ணை இப்படி மட்டும் காப்பாத்துலன்னா அவ்ளோ தான்..




8 வயதில் கால்பந்து விளையாட துவங்கியதன் மூலம் என் வாழ்வில் விளையாட்டு நுழைந்தது. நார்த் லண்டனில் உள்ள நார்த்வுட் ஸ்குவாஷ் கிளப்பில் சேர்ந்த பிறகு, அங்கிருந்த ஒரு பயிற்சியாளர் எனது திறமையை பார்த்து மேலும் சிறப்பாக விளையாட ஊக்குவித்தார். இதனிடையே சில ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட கார் விபத்து ஒன்றில் கடுமையாக பாதிக்கப்பட்ட கால்களை சரி செய்ய 3 ஆப்ரேஷன்களை மருத்துவர்கள் செய்தனர் என்று கூறி உள்ளார்.

 

ஒரு நண்பர் ஊக்குவித்த காரணத்தால் வேர்ல்ட் ரெக்கார்ட் டைட்டிலுக்கு விண்ணப்பித்ததாக மார்கெரெட் தெரிவித்தார். வயதான பெண் ஸ்குவாஷ் வீராங்கனை என்ற டைட்டிலை பெறும் முன், மார்கரெட்டின் பிறப்பு சான்றிதழ் மற்றும் கின்னஸ் கின்னஸ் வேர்ல்ட் ரெக்கார்ட்ஸிற்கு தேவையான மற்ற ஆவணங்களை வழங்கும் வேலைகளை மார்கரெட்டின் மகள் முன்னெடுத்து செய்து உள்ளார். இதனிடையே கால்பந்து மற்றும் ஸ்குவாஷ் தவிர இங்கிலாந்து தேசிய நெட்பால் அணியில் உறுப்பினராகவும் இருந்துள்ளார் மார்கரெட் ஆம்ஸ்ட்ராங். பிரிட்டிஷ் ஓபனில் 3 முறை வெற்றி பெற்ற எகிப்திய வீரர் அபோ டலேப்பிடம் ஸ்குவாஷ் பயிற்சி பெற்றவர் மார்கரெட்.

 
Published by:Tamilmalar Natarajan
First published:

Tags: Trending

அடுத்த செய்தி