• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • விமானத்தை இயக்கிய பார்கின்சன் நோய் பாதித்த மூதாட்டி - தாயின் விருப்பத்தை நிறைவேற்றிய மகன்!

விமானத்தை இயக்கிய பார்கின்சன் நோய் பாதித்த மூதாட்டி - தாயின் விருப்பத்தை நிறைவேற்றிய மகன்!

விமானத்தை இயக்கிய பார்கின்சன் நோய் பாதித்த மூதாட்டி

விமானத்தை இயக்கிய பார்கின்சன் நோய் பாதித்த மூதாட்டி

விமான ஓட்டி மாட்டியெல்லா, இந்த பயணத்தின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். முழு விளக்கத்துடன் அவர் இட்ட பதிவு, சமூகவலைதளங்களில் பெரும் கவனத்தை பெற்றது.

  • Share this:
அமெரிக்காவில் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ள 84 வயது மூதாட்டி, விமானத்தை இயக்கிய புகைப்படங்கள் சமூகவலைதளங்களில் வைரலாகியுள்ளது.

அமெரிக்காவைச் சேர்ந்த மிர்தா கேஜ்ஜூக்கு 84 வயதாகிறது. இளம் வயதில் விமான ஓட்டியாக இருந்த அவர் தற்போது பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். அவரின் உடல் நிலை நாளுக்கு நாள் மோசமாகி வருவதால், மிர்தா கேஜின் விருப்பத்தை நிறைவேற்ற குடும்பத்தினர் முடிவு செய்தனர். அதன்படி, அவருக்கு பிடித்தமான ஒரு பக்கெட் லிஸ்டை தயாரித்து, அதனை நிறைவேற்ற மிர்தா கேஜின் மகன் ஏர்ல் கோடி திட்டமிட்டார். அதன்படி, மிர்தா கேஜ் இளம் வயதில் விமான ஓட்டியாக இருந்ததால், விமானத்தில் அழைத்துச் செல்லவும், சிறிது நேரம் விமானத்தை இயக்கவும் உரிய ஏற்பாடுகளை அவர் செய்தார்.

இதற்காக, மாட்டியெல்லோ என்ற விமானியைத் தொடர்பு கொண்ட அவர், தனது தாயின் நிலையை எடுத்துக் கூறியுள்ளார். அவரும் மறுப்பு தெரிவிக்காமல் ஒப்புக்கொண்டு மிர்தா கேஜை விமானத்தில் அழைத்துச் சென்றார். வின்னி பெசாகி ஏரி மற்றும் மவுண்ட் கியர்சார்ஜ் ஆகிய இயற்கை எழில் சூழ்ந்த பகுதிகளில் மிர்தா கேஜை அமரவைத்து விமானத்தில் சுற்றிக்காட்டியுள்ளனர். அந்த பயணத்தின்போது விமானத்தின் முழு இயகத்தையும் மிர்தா கேஜிடம், மாட்டியெல்லா சிறிது நேரத்துக்கு ஒப்படைத்துள்ளார். இந்த அனுபவம் தாய்க்கு மிகச்சிறந்ததாக இருந்ததாகவும், அவரின் ஆசை நிறைவேறி இருப்பதாகவும் மகன் ஏர்ல் கோடி தெரிவித்தார்.



இது குறித்து பேசிய மிர்தா கேஜின் மகன் ஏர்ல் கோடி, "எனது தாய்க்கு தற்போது 84 வயதாகிறது. அவர் பார்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். நாளுக்கு நாள் அவருடைய உடல்நிலை மோசமாகி வருவதால், தாய்க்கு பிடித்தமான விஷயங்களை செய்து கொடுக்க வேண்டும் என குடும்பத்தினர் எண்ணினோம். அவர் இளம் வயதில் விமான ஓட்டியாக இருந்ததால், ஒருமுறை விமானத்தில் அழைத்துச் செல்ல முடிவெடுத்தோம். அதற்காக பைலட் மாட்டியெல்லாவைத் தொடர்பு கொண்டபோது அவரும் ஒப்புக்கொண்டார். வின்னி பெசாகி ஏரி, மவுண்ட் கியர்சார்ஜ் ஆகிய பகுதிகளை சுற்றிக் காட்டியபோது, தாய் மிகவும் மகிழ்ச்சியடைந்தார். அவருடைய ஆசையில் ஒன்றை நிறைவேற்றியிருப்பது மகிழ்ச்சியளிகிறது" எனக் கூறினார்.

Also read... மணப்பெண் அணிந்து வந்த 60 கிலோ நகை - அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்த திருமணம்!

விமான ஓட்டி மாட்டியெல்லா, இந்த பயணத்தின் புகைப்படங்களை இணையத்தில் பதிவிட்டுள்ளார். முழு விளக்கத்துடன் அவர் இட்ட பதிவு, சமூகவலைதளங்களில் பெரும் கவனத்தை பெற்றது. இது குறித்து அவர் பேசும்போது, " ஏர்ல் என்னைத் தொடர்பு கொண்டு தாயை விமானத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என்ற விருப்பத்தை தெரிவித்தார். அவருடைய தாய் மிர்தா கேஜ் பார்க்கின்சன் நோயால் பாதிக்கப்பட்டிருக்கிறார் என கூறினார். இதனால், நானும் ஒப்புக்கொண்டேன். பெசாகி ஏரி, மவுண்ட் கியர்சார்ஜ் பகுதிகளில் பயணித்தோம். அருமையான வானிலை அப்பகுதியில் நிலவியது. அவருடைய தாயின் ஆசையை நிறைவேற்றியதில் எனக்கும் மகிழ்ச்சி. சிறிது நேரம் விமானத்தின் இயக்கத்தை மிர்தா கேஜிடம் ஒப்படைத்தேன். அதுவும் மகிழ்ச்சியாக இருந்தது எனக் கூறியுள்ளார். அவரின் இந்த செயலுக்கு நெட்டிசன்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: