Home /News /trend /

இணையத்தில் இதயங்களை வென்ற 83 வயது பெண்மணியின் வாழ்நாள் சாதனை! வீடியோ..

இணையத்தில் இதயங்களை வென்ற 83 வயது பெண்மணியின் வாழ்நாள் சாதனை! வீடியோ..

Trending

Trending

Trending | இது தான் என்னுடைய வாழ்நாள் சாதனை என்று 83 வயதான பெண்மணி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ரீல் ஒன்று இணையம் முழுவதும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

இணையத்தில் வெளியாகும் பல்வேறு செய்திகளில் ஒரு சில செய்திகள் மனதை நெகிழச் செய்யும். வசதியற்ற குடும்பத்தில் பிறந்து முதல் ரேங்க் வாங்கும் செய்தி முதல் பிராணிகளுக்கு உதவிய மனிதர்களின் செய்தி வரை பல செய்திகள் வைரலாகும். அந்த வகையில் சமீபத்தில் ஒரு முதிய பெண்மணி பற்றிய செய்தி வெளியானது. குறிப்பாக, இவருடைய கதை நம் இந்தியக் குடும்பங்கள் எவ்வளவு சிறப்பு மிக்கவை என்பதை வெளிப்படுத்துகின்றது. உங்கள் வாழ்நாள் சாதனையாக நீங்கள் எதைக் கருதுவீர்கள்? இந்த மூதாட்டி தன்னுடைய மிகப்பெரிய குடும்பத்தைத் தான் தனது வாழ்நாள் சாதனையாகக் கருதுகிறார்.

கண்ணீர் சிந்த வைக்கும், மனம் உருக்கும், நெஞ்சை நெகிழ வைக்கும், இப்படியெல்லாம் நடக்குமா என்று ஆச்சரியப்பட வைக்கும் பலரின் கதைகள் நம்மிடையே உள்ளன. அதில் சிலர் பற்றிய கதைகள் அதிர்ஷ்டவசமாக நமக்குத் தெரிய வரும்.

இதுதான் என்னுடைய வாழ்நாள் சாதனை என்று 83 வயதான பெண்மணி இன்ஸ்டாகிராமில் வெளியிட்ட இன்ஸ்டாகிராம் ரீல் ஒன்று இணையம் முழுவதும் வைரலாக பகிரப்பட்டு வருகிறது. தனது இல்லத்தில் படிக்கட்டில் இருக்கும் ஸ்டூலில் அவர் அமர்ந்திருக்கும் காட்சி தோன்றுகிறது. அதைத்தொடர்ந்து அவரின் பின்னே, அவரின் மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகள் படிக்கட்டுகளில் அமர்ந்து கொண்டு வீடியோவுக்கு கையசைக்கும் காட்சி உள்ளன.

ஹியூமன்ஸ் ஆஃப் பாம்பே என்ற மீடியாவால் வெளியிடப்பட்டு லட்சக்கணக்கான பார்வையாளர்களை சென்றடைந்துள்ளது. இந்த ரீல் மிகப்பெரிய ஹிட் ஆனதற்கு முக்கிய காரணம் இதில் உள்ள கேப்ஷன் தான். அதாவது தன்னுடைய வாழ்நாள் சாதனை என்று தனது குடும்பத்தை அவர் குறிப்பிட்டுள்ளார் என்பது இதயங்களை வென்று வருகிறது.

83 வயது மூதாட்டி பற்றிய இன்ஸ்டா ரீல் இங்கே.
இந்த பெண்மணி விவசாய குடும்பத்தில் பிறந்தவர் என்றும் 19 வயதாக இருக்கும்போது திருமணம் நடந்துவிட்டது என்று கூறியுள்ளார். மிகப் பெரிய கூட்டுக் குடும்பத்தில் மருமகளாக சென்றார் என்றும் அனைவருமே இவரை நன்றாக கவனித்துக் கொண்டனர் என்றும் இந்த மூதாட்டி தெரிவித்துள்ளார். அது மட்டுமின்றி தனக்கு தனியாக இருப்பது எப்போதுமே பிடிக்காது, அருகில் தன்னை சுற்றி நிறைய நபர் இருக்க வேண்டும் என்பதையும் விரும்புகிறார். அதற்கு ஏற்றால் போல தன்னுடைய குடும்பம் மிகவும் பெரிதாக அமைந்துள்ளது என்பதையும் தெரிவித்துள்ளார்.

Also Read : டாக்ஸி டிரைவர் பதிலால் நெகிழ்ச்சி அடைந்த வாடிக்கையாளர்!

“ஆரம்பத்தில் நாங்கள் 10 நபர்கள் கொண்ட ஒரு கூட்டு குடும்பமாக வாழ்ந்து வந்தோம். எல்லோருக்கும் இருப்பது போலவே தொடக்க காலத்தில் எனக்கும் குடும்பத்தில் இருக்கும் மூத்த சகோதரர்கள் மற்றும் அவரது மனைவிகளான எனது அண்ணிகளுடன் அட்ஜஸ்ட் செய்து கொள்வதற்கு சிறிது காலம் ஆனது. ஆனால், எனது கணவர் என்னை நன்றாகப் பார்த்துக்கொண்டார்.

Also Read : பெரிய குடும்பம் வேண்டுமென்ற கனவை நிறைவேற்றிய 113 வயது தாத்தா.. கணக்கை கேட்டால் தலைசுற்றும்

சிறப்பான உணவுகள் எல்லாம் எங்கே கிடைக்கிறது என்று என்பதை தேடி நாங்கள் கேரளா முழுவதும் பயணம் செய்துள்ளோம். எனக்கு ஐந்து குழந்தைகள் உள்ளனர், அது மட்டுமின்றி எனக்கே எனக்கான மிகப்பெரிய குடும்பமும் உருவாகியுள்ளது. குழந்தைகள் நிறைய இருந்தாலும் அனைவருக்குமே நாங்கள் சிறந்த கல்வியை வழங்கவேண்டுமென்பதில் முனைப்பாக செயல்பட்டோம். நாங்கள் வசதியானவர்கள் இல்லை ஆனால் மகிழ்ச்சியானவர்கள்” என்று தெரிவித்தார்ஐம்பத்தி மூன்று ஆண்டு காலம் திருமண வாழ்க்கைக்கு பிறகு இவரின் கணவர் இறந்து விட்டார். அவர் இறந்த காலத்தில் அந்த நேரத்தில் மட்டும் தான் மிகவும் பலவீனமாக உணர்ந்ததாக தெரிவித்தார். குடும்பம் மிகப் பெரியதாக இருந்தாலும் யாரும் ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுத்து விடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாக இருப்பதாகவும், அவ்வப்போது அனைவரும் ஒன்று சேர்ந்து நேரம் செலவிடுவதை வழக்கமாகவே கொண்டுள்ளார் என்றும் தெரிவித்தார்.

Also Read : 630 அடி ஆழத்தில் பூமிக்கு கீழே மறைந்து இருந்த காடு!

அனைவரும் வீட்டுக்கு வருவது, ஒன்றாகச் சேர்ந்து சமைப்பது, ஜாலியாக அரட்டை அடிப்பது ஆகியவற்றைப் பார்ப்பது எனக்கு சந்தோஷத்தை கொடுக்கும் என்று கூறினார். சில வாரங்களுக்கு முன் அனைவரும் ஒன்றாக இருந்ததால், வீடியோவை உருவாக்க ஆசைப்பட்டதாக கூறினார்.

தன்னுடைய வாழ்க்கையை திரும்பிப் பார்க்கும்போது, வாழ்க்கையை முழுமையாக வாழ்ந்து விட்ட திருப்தி இருக்கிறது என்று மகிழ்ச்சியுடன் கூறினார்.
Published by:Selvi M
First published:

Tags: Family, Trending, Viral Video

அடுத்த செய்தி