முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / ”இளமை திரும்புதே” 83 வயதில் கேரம் போர்டு..! மாஸ் காட்டும் 83 வயதான மூதாட்டி... வைரல் பதிவு..

”இளமை திரும்புதே” 83 வயதில் கேரம் போர்டு..! மாஸ் காட்டும் 83 வயதான மூதாட்டி... வைரல் பதிவு..

கேரம் விளையாடும் ஆஜி பாட்டி

கேரம் விளையாடும் ஆஜி பாட்டி

சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோவை அக்ஷய் மராத்தே ஜனவரி 8ம் தேதி பகிர்ந்துள்ளார். அந்தக் வீடியோவில், ஆஜி என்று அவர் அன்புடன் அழைக்கும் அவரது பாட்டி கேரம் விளையாடுவதைக் காணலாம்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Maharashtra, India

சாதனை படைக்க வயது ஒரு தடையல்ல, அது ஒரு எண் மட்டுமே, வயதும் முதுமையும் உடலுக்குத்தானே தவிர அறிவுக்கும் உழைப்புக்கும் இல்லை. நாம் ஒரு செயலை உண்மையாக அனுபவித்து செய்யும்போது அதற்கு வயது ஒரு தடையாக இருக்காது என்பதை நிரூபித்து காட்டியிருக்கிறார், மகாராஷ்டிராவை சேர்ந்த 83 வயதான பாட்டி. அப்படி பாட்டி என்ன சாதனை செய்திருக்கிறார் என்பதை பார்த்து நிச்சயமாக நீங்கள் ஆச்சரியமடைவீர்கள்…

90 கிட்ஸ்களுக்கு மிகவும் பிடித்த விளையாட்டுகளில் ஒன்று கேரம் போர்டு. அப்படி பொழுதுபோக்கிற்காக மட்டும் விளையாடாமல் சிலர் போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருவதும் உண்டு. கொரோனா காலங்களில் பலர் பொழுதுபோக்குக்காக விளையாடிய ஒரே இண்டோர் கேம் இந்த கேரம் போர்டுதான். 90 கிட்ஸூக்கு மட்டுமல்ல அதற்கு முன்னதாகவே கேரம் இந்தியாவின் விளையாட்டுகளில் ஒன்று. ஆனால் இந்த விளையாட்டு இளைஞர்கள் மத்தியில் ஆர்வம் குறைந்து வருவதற்கு காரணம் இன்றைய ஆன்லைன் விளையாட்டுகள் தான்.

இந்த நிலையில், மகாராஷ்டிரா மாநிலம் புனேவைச் சேர்ந்த 83 வயது மூதாட்டி இந்த கேரம் போர்டு விளையாட்டை அசால்டாக விளையாடி வருகிறார். மகாராஷ்டிராவில் உள்ள ஆல்-மகர்பட்டா சிட்டி கேரம் போட்டி சமீபத்தில் நடைபெற்றுள்ளது . இந்த போட்டியில் இரட்டையர் பிரிவில் தங்கப் பதக்கத்தையும், ஒற்றையர் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் வென்றுள்ளார் இந்த பாட்டி.

அதுமட்டும் அல்லாமல் பயிற்சி நிமித்தமாக இளம் வயது கேரம் விளையாட்டு ஆர்வலர்களுடன் இணைந்து அவர் விளையாடிய அந்தக் காட்சிகளை அவரது பேரன் அக்ஷய் தனது டிவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், புனேவின் ஆல்-மகர்பட்டா சிட்டி கேரம் போட்டியில் இரட்டையர் பிரிவில் தங்கம் மற்றும் ஒற்றையர் பிரிவில் வெண்கலம் வென்ற எனது 83 வயதான ஆஜியால் தான் ஈர்க்கப்பட்டதாக அவர் பதிவிட்டுள்ளார். இதற்கு அக்ஷயின் நண்பர்கள் மட்டும் அல்லாது நெட்டிசன்கள் பலரும் லைக்குகளையும், கமென்ட்களையும் அள்ளி வீசி வருகின்றனர்.

மேலும் 83 வயதான ஆஜி, கேரம் விளையாட்டில் ஸ்டெடியாகவும், நேர்த்தியாகவும் காயின்களை ஸ்ட்ரைக் செய்கிறார் என நெட்டிசன்கள் புகழ்ந்து வருகின்றனர். பலரும் அவரது ஆர்வத்திற்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்து வரும் நிலையில் லட்சக்கணக்கானோர் அந்த வீடியோவை பார்த்துள்ளனர். பலர் இந்த வீடியோவை ஷேர் செய்தும் வருகின்றனர். குறிப்பாக செய்திச் சேனல்களின் தலைப்புச் செய்திகளில் பாட்டியின் செய்தி இடம்பெற்றிருந்தது.

சமூக வலைதளங்களில் வைரலாகும் இந்த வீடியோவை அக்ஷய் மராத்தே ஜனவரி 8ம் தேதி பகிர்ந்துள்ளார். அந்தக் வீடியோவில், ஆஜி என்று அவர் அன்புடன் அழைக்கும் அவரது பாட்டி கேரம் விளையாடுவதைக் காணலாம்.

First published:

Tags: Maharashtra, Trending, Viral