ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

8 வயசுல இப்படி ஒரு ஆர்வமா? வேலை கேட்டுச்சென்று அசர வைத்த சிறுவன்.. ’அடடே’ போட வைக்கும் சம்பவம்!

8 வயசுல இப்படி ஒரு ஆர்வமா? வேலை கேட்டுச்சென்று அசர வைத்த சிறுவன்.. ’அடடே’ போட வைக்கும் சம்பவம்!

விளையாட்டு பொருள் வாங்க வேலைக்கு விண்ணப்பித்த 8 வயது சிறுவன்

விளையாட்டு பொருள் வாங்க வேலைக்கு விண்ணப்பித்த 8 வயது சிறுவன்

தனக்கு வேலை கிடைத்தால், பணத்தை விரைவாகச் சேமிக்க முடியும் என்பதைக் கண்டுபிடித்தான்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

விளையாடுவதற்கு எக்ஸ்பாக்ஸ் வாங்க வேண்டும். அதற்கு நிறைய பணம் சேமிக்க வேண்டும்  என்பதற்காக  எட்டு வயது சிறுவன் வேலைக்கு விண்ணப்பித்துள்ளான். கென்டக்கியின் லெக்சிங்டனைச் சேர்ந்த நாஷ் ஜான்சன், பள்ளியில்  படித்து வருகிறான். அவனுக்கு வாரத்திற்கு $5  பாக்கெட் மணியாக பெற்றோர் கொடுத்து பழக்கியுள்ளனர். இந்திய ரூபாயில் 400. சேமிப்பு மற்றும் செலவு குறித்து கற்றுக்கொடுக்க உண்டியல்களை பயன்படுத்த கற்றுக்கொடுத்துள்ளனர்.

அந்த சிறுவனுக்கு விளையாட எக்ஸ்பாக்ஸ்  (XBOX ) வாங்கவேண்டும் என்ற விருப்பம் வந்துள்ளது. தனது உண்டியலில் இருக்கும் பணம் அதற்கு போதாது. அதேபோல் வாரம் தோறும் பெற்றோர் தரும் $5 வைத்து XBOX வாங்க நாள் ஆகும் என்பதை உணர்ந்துள்ளான். அதனால் அதிக பணத்தை பெற என்ன வழி என்று யோசித்துள்ளான். அப்போது தனக்கு வேலை கிடைத்தால், பணத்தை விரைவாகச் சேமிக்க முடியும் என்பதைக் கண்டுபிடித்தான். வேலை தேடும்போது தனது பாடி வீட்டின் அருகே ஆட்கள் தேவை என்ற நோட்டீசை பார்த்து வேலைக்கு விண்ணப்பித்துள்ளான்.

கடை உரிமையாளர் ஏன் இந்த வேலைக்கு வருகிறாய் என்று கேட்டதற்கு தனக்கு XBOX வாங்க காசு வேண்டும். எனக்கு பாத்திரம் கழுவும் வேலை நன்றாக தெரியும். அந்த பணிக்கு தான் இங்கே ஆட்கள் தேவைப்படுகிறது. அதனால் நான் அதை செய்கிறேன் என்று கூறியுள்ளான்.

16 வயது அடைந்திருந்தால் தான் வேலைக்கு சேர்த்துக்கொள்ள முடியும் 8 வயது சிறுவனை சேர்க்க முடியாது என்று கூறியுள்ளார். விண்ணப்பத்தில் பிறந்த தேதியோ, வயதோ கேட்கவில்லை. 18 வயதுக்கு குறைந்தவரா என்று மட்டுமே கேள்வி இருந்தது. அதன் அடிப்படியில் விண்ணப்பித்தேன் எனக்கு வேலை கொடுங்கள் என்று சிறுவன் கேட்டுள்ளேன்.

அவரது வயதின் காரணமாக உணவகத்தால் அவருக்கு வேலை கொடுக்க முடியவில்லை ஆனால் அவர்கள் அந்த சிறுவனை  அழைத்து அவன் முயற்சியின் பரிசாக எக்ஸ்பாக்ஸ் கொடுத்துள்ளனர். அதை மகிழ்ச்சியுடன் பெற்றுக்கொண்ட நாஷ் "என்னிடம் எக்ஸ்பாக்ஸ் உள்ளது, ஆனால் எனக்கு வேலை கிடைத்திருக்க விரும்புகிறேன்" என்றான்.இந்த சிறுவனின் செயல் இணையவாசிகளின் பாராட்டை பெற்று வருகிறது.

First published:

Tags: Child, Kids