மிக இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட்... மரணத்தின் விளிம்பைத் தொட்டு வந்த தொழிலதிபர்...!

மிக இறுக்கமான ஜீன்ஸ் பேண்ட்... மரணத்தின் விளிம்பைத் தொட்டு வந்த தொழிலதிபர்...!
மாதிரிப்படம் (Image: asos.com)
  • News18
  • Last Updated: November 24, 2019, 12:53 PM IST
  • Share this:
மிக இறுக்கமான ஜீன்ஸ் துணியிலான பேண்ட்-ஐ அணிந்து 8 மணி நேரத்திற்கும் மேலாக காரில் நீண்ட பயணம் மேற்கொண்ட தொழிலதிபர் ஒருவர் மரணத்தின் விளிம்பை தொட்டு திரும்பியுள்ளார்.

டெல்லியைச் சேர்ந்த 30 வயதான தொழிலதிபர் சவுரப் சர்மா என்பவர் கடந்த 12-ம் தேதி திடீரென அவரது நண்பர்களால் ஷாலிமரில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவரது ரத்த அழுத்தம் மற்றும் இதயத்துடிப்பு மிகவும் குறைந்த நிலையில், சிகிச்சை அளிக்கப்பட்டு பின்னர் மீண்டும் இயல்பு நிலைக்கு திரும்பினார்.

சர்மா மரணத்தின் விளிம்பை தொட்டு திரும்பியதற்கு காரணம் அவர் அணிந்திருந்த ஜீன்ஸ் பேண்ட் என்றால் நம்ப முடிகிறதா? ஆனால், அதுதான் உண்மை. ”டெல்லியில் இருந்து புதிய காரில் நண்பர்களுடன் சென்று கொண்டிருந்தேன். எங்கேயும் நிறுத்தாமல் இடைவிடாது 8 மணி நேரத்திற்கும் மேலாக பயணம் தொடர்ந்தது. அப்போது எனது காலில் ஏதோ மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தேன். கால் முட்டியின் கீழ் பகுதி மெதுவாக சுருங்குவது புரிந்தது.


எனினும், அதைப்பற்றி எதையும் சிந்திக்காமல் மறுநாளில் சில மருந்துகளை தடவிவிட்டு அலுவலகத்துக்கு புறப்பட்டுவிட்டேன். அங்கு சென்ற சில நிமிடங்களில், சுய நினைவை இழந்து கீழே விழுந்தேன். பின்னர் நண்பர்கள் மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றுள்ளனர்” என்று சவுரப் சர்மா கூறுகிறார்.

மிக இறுக்கமாக ஜீன்ஸ் பேண்ட் அணிந்து கொண்டு நீண்ட பயணத்தில் சவுரப் இருந்துள்ளார். இதனால், அவரது உடலில் வழக்கமான ரத்த ஓட்டம் தடை பட்டுள்ளது. ரத்த ஓட்டம் தடைபட்டதன் எதிர்வினையாக இதயத்திலும் திடீர் பாதிப்பு ஏற்பட்டது. இதனால், அவரின் ரத்த அழுத்தம் வீழ்ந்து, இதய துடிப்பும் குறைந்துள்ளது என்று மருத்துவர்கள் கூறியுள்ளனர்.

6 நாள் சிகிச்சைக்குப் பின்னர் சவுரப் சர்மா வீடு திரும்பியுள்ளார்.
First published: November 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்