முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / 78 வயதில் டிகிரி பட்டம் பெற்று 98 வயது அம்மாவிடம் அளித்த மகன்..வைரலாகும் வீடியோ..

78 வயதில் டிகிரி பட்டம் பெற்று 98 வயது அம்மாவிடம் அளித்த மகன்..வைரலாகும் வீடியோ..

78 வயதில் டிகிரி பட்டம் பெற்று 98 வயது அம்மாவிடம் அளித்த மகன்

78 வயதில் டிகிரி பட்டம் பெற்று 98 வயது அம்மாவிடம் அளித்த மகன்

78 வயது மகன் கல்லூரிப் படிப்பை முடித்து பட்டம் பெற்றதை தனது அம்மாவிடம் காட்டும் வீடியோ வைரலாக பரவி வருகிறது.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :
  • Tamil Nadu, India

78 வயதான நபர் பெற்ற பட்டத்தைத் தனது 98 வயது அம்மாவிடம் கொண்டு காட்டும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

பட்டமளிப்பு விழா என்பது இளம் வயதில் மாணவர்களுக்குக் கிடைக்கும் ஒரு அற்புதமான தருணம். கல்லூரி படிப்பை முடித்த பிறகு பட்டமளிப்பு விழா மூலம் அவர்கள் படித்த டிகிரிக்கான அதிகாரப்பூர்வ சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்த வகையில், ஒருவர் தனது முதல் பட்டப்படிப்பை 78 வயதில் படித்து பட்டத்தைப் பெற்றுள்ளார்.

இந்த சந்தோசமான தருணத்தை அவர் தனது 98 வயது அம்மாவிடம் சென்று கூறும், மனத்தைக் கவரும் வீடியோ தான் தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது. அவரின் தாயாருக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் மகனின் பட்டமளிப்பு விழாவில் பங்குபெறமுடியவில்லை. அதனால் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்ட அதே கருப்பு உடையுடன் வீட்டிற்குச் சென்று அம்மாவைச் சந்தித்துள்ளார்.


Also Read : ஓடும் கார், பைக்குகளை நாய்கள் துரத்துவது ஏன் தெரியுமா? காரணம் இதுதான்..!

அம்மா, நான் பட்டம் பெற்றுவிட்டேன் என்று தனது அம்மாவை கட்டியணைத்து மகிழ்ச்சியாகக் கூறுகிறார். அப்போது அவரின் அம்மா சிரிக்கும் சிரிப்பு கோடிக்கணக்கில் கொடுத்தாலும் கிடைக்காத ஒன்றாய் இருந்தது. இந்த வீடியோவை ரசித்த நெட்டிசன்கள் அவரை பாராட்டி வருகின்றனர். மேலும் நிதி மேலாண்மை பிரிவில் அவர் பட்டம் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

First published:

Tags: College, Graduation, Mother, Viral Video