ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

18 வயது பெண்ணை திருமணம் செய்த 78 வயது முதியவர்... அதுவும் லவ் மேரேஜ்

18 வயது பெண்ணை திருமணம் செய்த 78 வயது முதியவர்... அதுவும் லவ் மேரேஜ்

18 வயது பெண்ணை திருமணம் செய்த 78 வயது முதியவர்

18 வயது பெண்ணை திருமணம் செய்த 78 வயது முதியவர்

பிலிப்பைன்ஸ் நாட்டில் 18 வயது பெண்ணை 78 வயது முதியவர் காதலித்து திருமணம் செய்துள்ள சம்பவம் தற்போது இணையத்தில் பேசுப்பொருளாக மாறியுள்ளது.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்தவர் 78 வயதான விவசாயி ரஷெட் மங்காகோப். இவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு திருமண விருந்து ஒன்றில் ஹலிமா அப்துல்லா என்ற இளம்பெண்ணை சந்தித்துள்ளார். ஹலிமா அப்துல்லாவிற்கு அப்போது 15 வயது தான். இந்த சந்திப்பு தான் இவர்கள் இடையே காதல் மலருவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

  விவசாயி ரஷெட் மங்காகோப் இதுவரை திருமணம் செய்து கொள்ளமால் இருந்துள்ளார். அவருக்கு இதற்கு முன் காதல் போன் அனுபவமும் இல்லை. ரஷெட்டின் தனிமை காரணமாக இளம்பெண் அவரை காதலித்தார் என மணமகனின் உறவுக்காரர் பென் தெரிவித்துள்ளார்.

  இவர்கள் திருமணம் குறித்து மணமகனின் உறவுக்கார் பென் கூறுகையில், மணமகன் என் தந்தையின் சகோதரர். மணமகளின் தந்தை என் மாமாவிடம் வேலை செய்வதால் அவர்கள் ஒரு திருமண நிகழ்வின் போது சந்தித்து உள்ளனர். மணமகள் ஹலிமா தான் முதலில் காதலித்துள்ளனார். என் மாமா வயதானவர். அவர் தனிமையில் இருப்பதாலும் இதுவரை திருமணம் செய்து கொள்ளவில்லை என்பதால் எங்கள் குடும்பத்தினர் இந்த திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்தனர்“ என்றார்.

  Also Read : என் கணவரின் சம்பளம் எவ்வளவு? தகவல் அறியும் சட்டத்தை பயன்படுத்திய மனைவி

  ரஷெட் மங்காகோப் - ஹலிமா அப்துல்லா இருவரும் 3 வருடம் இனிமையாக வாழ்ந்த பின்னர் திருமணம் செய்து கொண்டுள்ளனர். இவர்களுக்கு இடையே வயது வித்தியாசம் அதிகமாக இருந்தாலும் இருவீட்டார் சம்மதம் உடனே இந்த திருமணம் நடைபெற்றுள்ளது.

  பிலிப்பைன்ஸ் நாட்டின் சட்டவிதிகளின் 21 வயதிற்கு கீழ் உள்ள பெண்கள் திருமணம் செய்து கொள்ளாலம். ஆனால் அதற்கு அவர்கள் பெற்றோர் சம்மதம் தெரிவிக்க வேண்டும் என்பது விதியாகும். கார்மென் நகரில் உள்ள புதிய வீட்டில் தம்பதியர் வசித்து வருகின்றனர். கூடிய விரைவில் குடும்பம் நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

  Published by:Vijay R
  First published:

  Tags: Philippines, Trends, Viral