திருடனுடன் குத்துச்சண்டையிட்ட77 வயது முதியவர்... சி.சி.டி.வி கேமராவில் பதிவான வீடியோ!

திருடனுடன் குத்துச்சண்டையிட்ட77 வயது முதியவர்... சி.சி.டி.வி கேமராவில் பதிவான வீடியோ!
திருடனுடன் குத்துச்சண்டையிட்ட 77 வயது முதியவர்
  • Share this:
இங்கிலாந்தின் கார்டிஃப் நகரில் உள்ள ஏடிஎம் ஒன்றிற்கு பணம் எடுத்து விட்டு வெளியில் வந்த முதியவர் ஒருவரை முகமூடி அணிந்து வந்த மர்ம நபர் ஒருவர் தாக்கும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகின்றது.

பணத்தை திருட வந்த கொள்ளையனை 77-வயது நிரம்பிய முதியவர், தைரியமாக எதிர்த்துப் போராடி குத்துச்சண்டையிடுகின்றார். ஏ.டி.எம்மில் பணம் எடுக்க தனது காரில் இருந்து இறங்கிய முதியவர் பணத்தை ஏ.டி.எம்-மில் இருந்து எடுத்த பிறகு எதிரில் முகமூடி அணிந்த மர்ம நபர் பணத்தை பிடுங்கும் இந்த காட்சிகள் அனைத்தும் அருகில் இருந்த சி.சி.டி.வி கேமராவில் பதிவாகியுள்ளது.

இதனை அந்நாட்டு போலீஸ் தங்களது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளனர். கொள்ளையனிடம் துணிச்சலாகப் போராடிய முதியவரை பலரும் பாராட்டி வருகின்றனர்.


First published: February 19, 2020
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்

Top Stories

corona virus btn
corona virus btn
Loading