இன்றைய தகவல் தொழில்நுட்ப யுகத்தில் அசுரப் பாய்ச்சலில் வளர்ந்து வரும் துறைகளில் முக்கியமானது வீடியோ கேம். குறிப்பாக, ஸ்மார்ட் போன்கள் அனைவரின் கைகளிலும் மிக எளிதாக புழங்கத் தொடங்கிய பின்னர், சிறார்கள், இளசுகள் என பலரும் இந்த வீடியோ கேம் விளையாட்டுகளில் அதீத ஆர்வத்துடன் ஆடி வருகின்றனர்.ஒரு சிலர் ப்ரோபஷ்னல் கேமர்களாகவே தங்கள் வாழ்க்கையை மாற்றி அமைத்தும் கொள்கின்றனர்.
இளம் வயதினருக்கு தானே இந்த கேமிங் ஆர்வம் அதிகம் இருந்து பார்திருப்போம். ஆனால், 74 வயதில் ஒரு தாத்தா வீடியோ கேம் ஒன்றின் மீது மிகுந்த வெறித்தனமான ஆர்வத்தை கொண்டுள்ளார். நியாண்டிக் நிறுவனம் சார்பில் 2016ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட போக்கிமான் கோ என்ற வீடியோ கேம் சர்வதேச அளவில் பெரிய ரசிகர் பட்டாளத்தையே வைத்துள்ளது.
இந்த ரசிகர் பட்டாளத்திற்கு இவர் தான்டா தலைவர் என்று கூறும் அளவிற்கு வியட்நாம் நாட்டைச் சேர்ந்த 74 வயது முதியவர் சென் சான் யுவான் போக்கிமான் கோ விளையாட்டின் தீவிர பக்தராக உள்ளார். பொதுவாக ஒரு போனில் வீடியோ கேம் விளையாடித்தானே பார்த்திருப்போம். ஆனால், இந்த தாத்தா சென் சான் யுவான் ஒன்றல்ல இரண்டல்ல 64 மொபைல் போன்களில் போக்கிமான் கோ விளையாடுகிறார்.இவரை இந்த ஊர்க்காரர்கள் போக்கிமான் கோ தாத்தா என்றே அழைக்கத் தொடங்கியுள்ளனர்.
2016ஆம் ஆண்டில் இவரது பேரன் போக்கிமான் கோ விளையாட்டை தாத்தாவிற்கு அறிமுகம் செய்துள்ளான். விளையாட்டு பிடித்துபோகவே 2018ஆம் ஆண்டில் எட்டு போன்களை வைத்து விளையாடத் தொடங்கியுள்ளார். பின்னர், இது படிப்படியாக அதிகரித்து தனது சைக்களில் 64 செல்போன்களை ஒன்றாக கட்டி அடுக்கி வைத்து வலம் வருகிறார்.இவர் பற்றிய இன்ஸ்டாகிராம் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறு. தி வெல்த் என்ற இன்ஸ்டா பக்கம் இவரை பற்றி வெளியிட்டுள்ள பதிவை 3 லட்சத்திற்கும் மேற்பட்டோர் லைக் செய்து கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர்.
View this post on Instagram
தனது பிடித்த வாழ்க்கையை வாழ்கிறார் இந்த தாத்தா, செம மனுஷன்பா இவரு என ஆச்சரியத்துடன் இவர் 64 செல்போன்களுடன் சைக்களில் வலம் வரும் புகைப்படத்தை பகிரந்து வருகின்றனர். இத்தனை செல்போன்களை வைத்து விளையாடினால் தனக்கு எப்போதும் சாதகமாக இருக்கும் என்பதால் இவர் போக்கிமான் கோ விளையாட்டின் பேட்டில்களில் பங்கேற்பதில்லை என்று முடிவெடுத்துள்ளார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Addicted to Online Game, Taiwan, Video Game, Video Games, Viral News