வயது வெறும் எண்தான்... வைரலாகும் 72 வயது மூதாட்டியின் உடற்பயிற்சி வீடியோ...!

70 கிலோ எடையில் பளு தூக்குதல் கருவியையும் அசால்டாக தூக்கி அசத்துகிறார்..!

வயது வெறும் எண்தான்... வைரலாகும் 72 வயது மூதாட்டியின் உடற்பயிற்சி வீடியோ...!
72 வயது மூதாட்டி
  • News18
  • Last Updated: December 13, 2019, 1:56 PM IST
  • Share this:
சாதிக்க வயது ஒரு பொருட்டே அல்ல என்று ஊக்குவிப்பதற்காக பலரும் சொல்லக் கேட்டிருப்போம். ஆனால் அப்படி நிஜத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் நபர்கள் மிகவும் அரிது. அதனால்தான் இப்படிப்பட்ட அரிதினும் அரிதான நபர்கள் தனித்துத் தெரிகின்றனர்.

ட்விட்டரில் 72 வயதான மூதாட்டி கடினமான உடற்பயிற்சிகளையும் அசால்டாக செய்து அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்துகிறார். அந்த வீடியோவை நாண்டி அறக்கட்டளையின் தலைவராக இருக்கும் மனோஜ் குமார் ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.

ஒரு நிமிடம் 28 வினாடிகள் ஓடும் அந்த வீடியோ அனைவரையும் ஊக்குவிக்கும் வகையில் அமைந்துள்ளது. அந்த வீடியோவில் 75 வயதான மூதாட்டி 70 கிலோ எடையில் பளு தூக்குதல், ஆஃப் வீல் உடற்பயிற்சி, தலைகீழாக நிற்பது என கடினமான உடற்பயிற்சி கருவிகளையும் எளிதாகத் தூக்கி பயிற்சி செய்கிறார்.


ஓய்வு பெற்ற ஆசிரியரான இவர் 10 வருடங்களாக உடற்பயிற்சி செய்து கொண்டிருக்கிராராம். இதை டிவிட்டரில் பகிர்ந்த மனோஜ் என்பவரும் ”நான் இனி உடற்பயிற்சி , யோகா ஆகியவற்றை தவிர்க்கவே முடியாத அளவிற்கு செய்துவிட்டார். மீண்டும் வயது என்பது எண்ணிக்கைதான் என்பதை நிரூபித்துவிட்டார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

First published: December 13, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்
corona virus btn
corona virus btn
Loading