Home /News /trend /

அசால்டாக கனரக வாகனங்களை ஓட்டும் 71 வயதான கேரள பெண் - பெண்களுக்கே பெருமை என பாராட்டும் நெட்டிசன்கள்!

அசால்டாக கனரக வாகனங்களை ஓட்டும் 71 வயதான கேரள பெண் - பெண்களுக்கே பெருமை என பாராட்டும் நெட்டிசன்கள்!

கனரக வாகனங்களை ஓட்டும் ராதாமணி.

கனரக வாகனங்களை ஓட்டும் ராதாமணி.

Trending | ஆண்களே சில வாகனங்களுக்கு மட்டும் ஹெவி லைசென்ஸ் எடுக்கும் இந்த காலக்கட்டத்தில், தன்னுடைய வயதை ஒரு பொருட்டாக நினைக்காமல் 71 வயதிலும் சாதித்துள்ளார் ராதாமணி.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Kerala, India
“ஸ்கூட்டரே ஒழுங்கா ஓட்டத்தெரியல. அதுக்குள்ள கார் ஓட்டப்பழகப் போறீயா“?.. என்ற வார்த்தைகளை நிச்சயம் நம்மில் பலர் கேட்டிருப்போம். நம்முடைய முயற்சிக்கு உறுதுணையாக இல்லாவிட்டாலும் பரவாயில்லை. தேவையில்லாத வார்த்தைகளால் நம்மை காயப்படுத்தாமல் இருந்தால் போதும் என்ற எண்ணம் அனைவருக்கும் எழக்கூடும். இதற்கேற்றால் போல் நம்முடைய சமூகமும் பெண்கள் என்றால் ஒரு சில விஷயங்களை செய்யக்கூடாது என்ற வரைமுறை வைத்துள்ளது.  ஆனால் தன்னம்பிக்கையும், விடா முயற்சியும் உள்ள பெண்கள் சமூகம் என்ன சொன்னாலும் அதன் மேல் ஏறி  முன்னேற்றத்தை அடைந்து வருகின்றனர்.  வீட்டில் முடங்கிக்கிடக்கும் சில பெண்களுக்கு உத்வேகத்தையும் அவர்கள் அளித்து வருகின்றனர்.

இதுப்போன்று ஒரு சம்பவம் தான் கேரளத்தில் அரங்கேறியுள்ளது. ஆனால் இக்கதை சற்று வித்தியாசமானது. கணவரின் விருப்பத்தின் பேரில் தன்னுடைய 30 வயதில் டிரைவிங் கற்றுக்கொண்ட பெண்மணி தற்போது அவருடைய 71 வயதில் 11 கனரக வாகனங்களுக்கான லைசென்ஸைப் பெற்றிருப்பது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. யார் இவர்? என்ன செய்து வருகிறார் என நாமும் அறிந்துக் கொள்வோம்.

கேரள மாநிலம் தோப்பும்பாடி என்ற பகுதியைச் சேர்ந்தவர் ராதாமணி. இவருடைய கணவர் லால் கடந்த
1978 ல் A-Z என்ற டிரைவிங் ஸ்கூல் ஒன்றை நடத்தி வந்துள்ளார். கணவரின் தூண்டுதலின் பேரில் வாகனங்களை ஓட்டக் கற்றுக்கொண்டபோது தான் டிரைவிங் மீதான ஆர்வம் அதிகரித்துள்ளது. சிறிய கார்களை ஓட்டி வந்த இவர், 1988ல் முதன் முதலாக பஸ் மற்றும் டிரக் வாகனங்களுக்காக லைசென்ஸை பெற்றுள்ளார். தன்னுடைய முதல் முயற்சியை தன்னம்பிக்கையோடு ஏற்றுக்கொண்ட இவர், தொடர்ந்து பல வாகனங்களை ஓட்டுவதற்கு பழகிக் கொண்டிருந்தார். அந்த சமயத்தில் தான் 2004 ல் ராதாமணியின் கணவர் விபத்தில் ஒன்றில் இறக்க நேரிடுகிறது. குழந்தைகளைக் காப்பாற்ற வேண்டும் என்பதற்காக தற்போது டிரைவிங் ஸ்கூலை நடத்தி வருகிறார்.

Read More : பயணத்தின் போது பாதியாக பிரிந்த ரயில்..! - இங்கிலாந்தில் அதிகாரிகளை பதறவிட்ட டிக் டாக் யூசரின் வீடியோ


டிரைவிங் ஸ்கூலை நிர்வகிப்பது ஒருபுறம் இருந்தாலும், தன்னுடைய கணவரின் ஆசையை நிறைவேற்ற வேண்டும் என்பதற்காக கனரக வாகனங்களை ஓட்டுவதற்கு கற்றுக்கொண்டார். 30 வயதில் டிரைவிங் பழக ஆரம்பித்த இவர், 71 வயதில் ஜேசிபி, கிரேன், பஸ், லாரி, ஆட்டோ, ரிக்ஷா உள்பட 11 கனரக வாகனங்களை ஓட்டுவதற்கான லைசென்ஸை பெற்று அசால்டாக கேரளத்தில் இந்த வாகனங்களை இயக்கி வருகிறார். சாலையில் செல்லும் போதெல்லாம் “ இங்க பாரு ஒரு பெண்ணு ஓட்டிட்டு போராங்க“ என்று பலர் கூறுவதைக் கேட்கும் போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்றும் முடியும் என்று நினைத்தால் நிச்சயம் சாதித்துக்காட்டலாம் என்றும் சில பேட்டிகளில் கூறியுள்ளார் ராதாமணி..

சில வாகனங்களுக்கு ஆண்களிலேயே சிலர் மட்டும் ஹெவி லைசென்ஸ் எடுக்கும் இந்த காலக்கட்டத்தில், தன்னுடைய வயதை ஒரு பொருட்டாக நினைக்காமல் 71 வயதிலும் சாதித்துள்ளார் இன்றைய தலைமுறைக்கு ஏற்ற அக்கால மாடல் பெண். யார் என்ன தடுத்தாலும், எத்தனை குறைகள் தெரிவித்தாலும், முயற்சி ஒன்று மட்டும் இருந்தால் போதும், ஆண்களுக்கு நிகராக இல்லை, ஆண்களுக்கு ஒரு படி மேல் சென்று ஜெயித்துவிடலாம் என்பதை நிரூபித்துக்காட்டியுள்ளார் இந்த ராதாமணி அம்மா.

கேரளத்தில் “மணியம்மா“ என்று அன்போடு அழைக்கப்படும் இவர் தற்போது களமசேரி பாலிடெக்னிக் கல்லூரியில் மெக்கானிக்கல் இன்ஜினியரிங்கிற்கான டிப்ளமோ புரோமிங் படித்து வருவது குறிப்பிடத்தக்கது. தன்னுடைய இந்த வயதிலும் அசாத்திய திறமையை வெளிப்படுத்தும் இவரை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர்.

 
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Kerala, Trending, Viral

அடுத்த செய்தி