முகப்பு /செய்தி /ட்ரெண்டிங் / கோவிலில் 70 வருடம் வாழ்ந்த சைவ முதலை மரணம் - ஊர் மக்கள் கூடி அஞ்சலி!

கோவிலில் 70 வருடம் வாழ்ந்த சைவ முதலை மரணம் - ஊர் மக்கள் கூடி அஞ்சலி!

பாபியா முதலை

பாபியா முதலை

கேரளாவில் ஸ்ரீ அனந்தபத்மநாப சுவாமி கோவிலில் 70 ஆண்டுகள் வாழ்ந்த சைவ முதலை மரணமடைந்துள்ளது. முதலைக்கு ஊர் மக்கள் கூடி அஞ்சல் செலுத்தி வருகின்றனர்.

  • 1-MIN READ
  • Last Updated :
  • Kerala, India

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் கும்ப்லாவில் ஸ்ரீ அனந்தபத்மநாப சுவாமி கோவிலில் சுமார் 70 ஆண்டுகள் வெறும் கோவிலில் தரும் பிரசாதங்களான சாதம் மற்றும் வெல்லத்தை மட்டும் சாப்பிட்டு முதலை ஒன்று வாழ்ந்து வந்தாக கூறப்படுகிறது.

முதலைக்கு பாபியா என்று பெயரிடப்பட்டு அழைத்து வரப்பட்டது. பாபியா முதலை கோவிலுக்கு எப்படி வந்தது சரியாகத் தெரியாத நிலையில் 1945க்கு மேல் வந்ததாகக் கூறப்படுகிறது. கோவிலில் செல்லப் பிள்ளையாக இருந்து வந்த முதலை இறந்ததையடுத்து ஐஸ் பெட்டியில் வைக்கப்பட்டு நூற்றுக்கணக்கில் ஊர் மக்கள் வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மேலும் முறைப்படி முதலைக்கு இறுதிச் சடங்குகள் நடைபெறவுள்ளது.

கோவில் குருக்களுக்கு மிகவும் பிரியமான பாபியா முதலையின் பிரிவு மிகவும் சோகம் அளிப்பதாகவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமும் பாபியா முதலைக்கு இரண்டு முறை கோவில் குருக்கள் பூஜை பிரசாதத்தை வழங்கி வந்துள்ளனர். மேலும் முதலைக்கு மத்திய மந்திரி ஷோபா கரந்த்லாஜே இறங்கல் தெரிவித்துள்ளார்.

First published:

Tags: Crocodile, Kerala