இயற்கை, சுற்றுச்சூழல் பற்றிய ஆராய்ச்சிக்கு குழந்தைகளை ஊக்குவிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள 7 வயது சிறுமி.!

தன் வயது அல்லது தன்னை விட சற்று கூடுதல் வயதுடைய குழந்தைகளை சுற்றுச்சூழலை பற்றி ஆராய்ச்சி செய்ய ஊக்குவிக்கவும்

  • Share this:
ஏழு வயதாகும் குழந்தைகளுக்கு சுற்றுச்சூழல் செயல்பாட்டில் குறிப்பிடத்தக்க ஆர்வம் வரும் என்பது நாம் நம்புவதற்கு கடினமான ஒன்று. ஆனால் இந்த மிகச் சிறிய வயதில் சுற்றுச்சூழலைப் பற்றி ஆராய்ச்சி செய்ய குழந்தைகளை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியை 7 வயதான பர்னிகா என்ற சிறுமி கொண்டு வந்துள்ளார். இந்தியாவில் இயற்கை, சுற்றுச்சூழல் மற்றும் மறுசுழற்சி ஆகியவற்றிற்கான சிறிய வயது ஆர்வலர்களில் ஒருவரான பர்னிகா "ஸ்டார்ஸ் ஆஃப் மதர் நேச்சர்"(Stars of Mother Nature) என்ற முயற்சியை கொண்டு வந்துள்ளார்.

தன் வயது அல்லது தன்னை விட சற்று கூடுதல் வயதுடைய குழந்தைகளை சுற்றுச்சூழலை பற்றி ஆராய்ச்சி செய்ய ஊக்குவிக்கவும், சுற்றுச்சூழல் தொடர்பான அவர்களின் எண்ணங்கள் மற்றும் கருத்துக்களை வெளியிடவும் இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளார் சிறுமி பர்னிகா. பார்னிகாவின் இந்த முன்முயற்சி தி ஹேப்பி மாம்ஸ் கஃபே (The Happy Moms Cafe ) மற்றும் ஹேக்ளவுடி (HeyCloudy) உள்ளிட்ட பேரென்டிங் ப்ளாகுடன் (parenting blog) இணைந்து குழந்தைகளுக்கான ஸ்கிரீன் ஃப்ரீ ஆடியோ (screen free audio) கேட்பது மற்றும் லேர்னிங் ஆப் ஆகியவற்றுடன் உருவாக்கப்பட்டுள்ளது.

பர்னிகாவின் ஸ்டார்ஸ் ஆஃப் மதர் நேச்சர் முன்முயற்சியில் பங்கேற்க விரும்பும் குழந்தைகள், இயற்கை, சுற்றுச்சூழல் மற்றும் மறுசுழற்சி ஆகிய கருப்பொருள்கள் குறித்து தங்கள் சொந்த ஆராய்ச்சியில் ஈடுபட ஊக்குவிக்கப்படுகிறார்கள். மேலும் சுமார் 600 சொற்களைக் கொண்ட ஒரு சிறுகதையை எழுத போகிறார்கள்.
தனது ஸ்டார்ஸ் ஆஃப் மதர் நேச்சர் திட்டம் பற்றி பகிர்ந்து கொண்டுள்ள சிறுமி பர்னிகா, "தாய் பூமி மிக அழகாக இருக்கிறது,

இதனுள் பல பொக்கிஷங்களும் உள்ளன. அவற்றைப் பற்றி எல்லாம் நாம் கற்றுக்கொள்ள வேண்டும். கதை சொல்வதை விட இதை செய்வதற்கான சிறந்த வழி ஒன்று இருக்கிறதா என்ன? ஏனென்றால் குழந்தைகளாகிய நாங்கள் கதைகளை சொல்ல விரும்புகிறோம்"என்று தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஸ்டார்ஸ் ஆஃப் மதர் நேச்சர் 6 முதல் 14 வயது வரையிலான குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரச்சாரம் இயற்கை, இயற்கை அமைப்பின் உள்ளடக்கம், மறுசுழற்சி மற்றும் பலவற்றைப் பற்றி அறிய அவர்களை ஊக்குவிக்கும். HeyCloudy app-ல் ஆடியோ சீரிஸாக வெளியிட சுமார் 8 கதைகள் தேர்வு செய்யப்படும். தி ஹேப்பி மாம்ஸ் கஃபே நிறுவனர் பிரீத்தி சதுர்வேதி கூறுகையில், கோடைகால இடைவெளிகள் அதிக கற்றல் மற்றும் படைப்பாற்றலுக்கான நேரத்தை குழந்தைகளுக்கு வழங்குகின்றன. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அர்த்தமுள்ள செயல்களில் ஈடுபடுத்த இது ஒரு அற்புதமான யோசனையாக இருக்கும் என்று நாங்கள் நினைக்கிறோம்.

இந்த பிரச்சாரம் ஒரு போட்டி அல்ல. தேர்வு செய்யப்படும் உள்ளீடுகள் முற்றிலும் இயற்கையின் பிரதிநிதித்துவமாக இருக்கும். சுற்றுச்சூழலைப் பற்றி அதிக விழிப்புடன் இருக்க குழந்தைகளை ஊக்குவிக்கவே நாங்கள் விரும்புகிறோம் என்றார்.HeyCloudy நிறுவனர். சித்மன் கவுர் இது பற்று பேசுகையில், சிறு குழந்தைகளுக்கு சரியான கதைகளை சொல்வது எதிர்கால உலகத்தை மாற்றுவதற்கான எங்கள் வழியாக நினைக்கிறோம். இந்த பிரச்சாரம் ஒரு படி மேலே சென்று குழந்தைகள் சரியான கதைகளை சொல்ல அவர்களுக்கு உதவுகிறது எனவே இதை இன்னும் சக்தி வாய்ந்ததாக நாங்கள் கருதுகிறோம் என்றார்.
Published by:Vijay R
First published: