ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

தேள் கடித்ததால் 7 முறை மாரடைப்பு… சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.!

தேள் கடித்ததால் 7 முறை மாரடைப்பு… சிறுவனுக்கு நேர்ந்த சோகம்.!

உயிரிழந்த சிறுவன் லூயிஸ் மிகுள் ஃபுர்டாடோ பார்போசா

உயிரிழந்த சிறுவன் லூயிஸ் மிகுள் ஃபுர்டாடோ பார்போசா

பிரேசில் நாட்டில் தேள் கடித்ததால் 7 முறை மாரடைப்பு ஏற்பட்டு 7 வயது சிறுவன் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

 • News18 Tamil
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  பிரேசில் நாட்டில் தேள் கடித்ததால் 7 முறை மாரடைப்பு ஏற்பட்டு 7 வயது சிறுவன் உயிரிழந்த சோகம் நிகழ்ந்துள்ளது.

  பிரேசில் நாட்டின் சாவ் பாவ்லோ நகரில் ஒரு குடும்பம் சுற்றுலா செல்வதற்காக தயாராகிக் கொண்டிருந்தனர். அப்போது லூயிஸ் மிகுள் ஃபுர்டாடோ பார்போசா என்ற 7 வயது சிறுவன் தனது ஷூக்களை அணிந்துள்ளார். ஷூவுக்குள் காலை நுழைத்தவுடன் சிறுவனின் காலில் ஏதோ குத்தியுள்ளது. அலறியபடி காலை  வெளியே எடுத்த சிறுவன் வலியால் துடித்துள்ளான்.

  கால் உடனடியாக சிவப்பு நிறத்திற்கு மாறியுள்ளது. ஷூவுக்குள் பார்த்த போது மிகவும் நச்சுத்தன்மை வாய்ந்த டிடியுஸ் செருலட்டஸ் என்று அழைக்கப்படும் மஞ்சள் நிற தேள் இருந்துள்ளது. சிறுவன் வலியால் துடித்ததையடுத்து, அவனை சாவ் பாவ்லோ நகரில் உள்ள மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டதை தொடர்ந்து சிறுவன் ஓரளவு குணமடைந்துள்ளான்.

  Read More : ஒரு மூட்டை 10 ரூபாய் காயின்ஸ்! பைக் வாங்க நாணயங்களை கொட்டிய இளைஞர்!

  சிகிச்சைக்குப் பிறகு தனது மகன் கண் திறந்து பார்த்ததாகவும், தன்னிடம் பேச முயன்றதாகவும் கூறும் சிறுவனின் தாய் ஆங்கலிட்டா ப்ரோயங்கா, இரண்டு நாட்கள் கழித்து தனது மகன் உயிரிழந்து விட்டதாக வேதனையுடன் தெரிவிக்கிறார். தேள் கடிக்கு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்ட பிறகு ஓரளவு குணமடைந்த சிறுவனுக்கு இரண்டு  நாட்கள் கழித்து 7 முறை மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இந்த தொடர் மாரடைப்புகளால் தனது மகன் உயிரிழந்ததாக கூறுகிறார் சிறுவனின் தாய் ஆங்கலிட்டா.


  மிகவும் ஆபத்தான இந்த மஞ்சள் நிற தேள் கடித்து பிரேசில் நாட்டில் ஆயிரக் கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த ஆண்டில் மட்டும் தேள் கடித்து 54 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

  பிரேசிலில் மட்டும்  காணப்படும் இந்த வகை மஞ்சள் தேள் மிகவும் கொடிய நச்சுத்தன்மை கொண்டவை. அதன் கொடுக்குகள் கொட்டடினால் மரணம் நிச்சயம் எனக் கூறப்படுகிறது. 5 முதல் 7 சென்டி மீட்டர் நீளம் மட்டுமே இருக்கும் இந்த வகை தேள்கள். பரவலாக பிரேசல் நாடு முழுவதும் உள்ள காடுகளில் இந்த வகை தேள்கள் இருக்கும். பிரேசல் நாட்டில் காடுகள் அழிக்கப்பட்டு நகரமயமாக்கல் வேகமாக நடைபெற்று வருவதால் இது போன்ற நச்சு தேள்கள் நரகங்களுக்குள் வருவதாக கூறப்படுகிறது.

  இந்த தேள்கள் கொட்டினால் மாரடைப்பு ஏற்படுவது உறுதி என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த தேள் கொடியவுடன் கொடுக்கில் இருக்கும் விஷம் ரத்தத்தில் கலந்து நரம்டபு மண்டலத்தை உடனடியாக ஸ்தம்பிக்ச் செய்யும். தொடர்ந்து காய்ச்சல், உயர் ரத்த அழுத்தம், உடல் அதிவெப்பம் உள்ளிட்ட பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். இதனால் இதயத்துடிப்பு மிக மோசமாக பாதிக்கப்பட்டு உயிரிழப்பு ஏற்படும் என்கிறார்கள் மருத்துவர்கள்

  Published by:Lilly Mary Kamala
  First published:

  Tags: Trending, Viral