ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

66% இந்திய விமானிகள் விமானம் ஓட்டும்போது தூங்குகிறார்கள் - பயணிகளை அதிரவைத்த சர்வே முடிவு!

66% இந்திய விமானிகள் விமானம் ஓட்டும்போது தூங்குகிறார்கள் - பயணிகளை அதிரவைத்த சர்வே முடிவு!

விமானிகள்

விமானிகள்

அதிகபட்சமாக 2 மணி நேர பயணத்தில் 1.40 மணி நேரம் விமானிகள் தூங்கி விடுகின்றனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Chennai, India

சமீபத்தில் ஒரு விமானத்தின் விமானிகள் தூங்கியதால் அந்த விமானம் தாமதமாக தரையிறக்கப்பட்ட செய்தி வெளியானது. இது விமான பயணிகளிடம் பெரும் பரபரப்பையும் அச்சத்தையும் ஏற்படுத்தியது. இதனை அடுத்து நடந்த ஆய்வில் இந்தியாவில் சுமார் 66% விமானிகள் தங்கள் பயணத்தின்போது தூங்குகின்றனர் என்று தெரிய வந்துள்ளது.

ஐயோ விமானிகள் பறந்தால் விமானம் சிதறி விடும் என்று நினைக்காதீர்கள். விமானத்தில் ஆட்டோ பிளாட் மோட் என்று ஒரு அமைப்பு இருக்கும். அதன் மூலம் போக வேண்டிய இடத்திற்கு சீரான வேகத்தில் விமானி இல்லாமலேயே விமானம் செல்லும். ஆபத்து நேரங்களில் நேரம் விமானி அதை கவனித்து திசை திரும்பினால் போதும்.

தூக்க ஆய்வு:

இந்தியாவின் ‘சேப்டி மேட்டர்ஸ் பௌண்டேஷன்’ எனும் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒரு ஆய்வை நடத்தியது. அதில் இந்தியாவில் உள்ள 542 உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விமானங்களின் விமானிகளிடம் ஆய்வு நடத்தப்பட்டது. எப்ஒர்த் ஸ்லீப் ஸ்கேல் அளவீட்டின்படி அவர்களின் தூக்கம் கணக்கிடப்பட்டது.

மாற்றுத்திறனாளிக்கு இஸ்ரோ வடிவமைத்த செயற்கை ’ஸ்மார்ட்’ கால் மூட்டுகள்... இதில் அப்படி என்ன ஸ்பெஷல்!

இந்த சோதனையின் மூலம், 54 % விமானிகள் நீண்ட நேர தூக்கத்திற்கும், 41 % விமானிகள் மிதமான பகல் தூக்கத்தால் பயணத்தின்போது தூங்குவது தெரியவந்துள்ளது. அசதி , சோர்வு காரணமாக குறுகியகால தூக்கத்தையும் பதிவு செய்துள்ளனர்.

சர்வதேச சிவில் ஏவியேஷன் ஆர்கனைசேஷன் (ICAO) சோர்வு என்பது தூக்கமின்மை அல்லது நீடித்த விழிப்பு, பணிச்சுமை ஆகியவற்றின் விளைவாக குறைந்த மன அல்லது உடல் செயல்திறன் திறனின் உடலியல் நிலை என வரையறுக்கிறது. விமானத்தின் பாதுகாப்பு தொடர்பான கடமைகள் செய்ய இயலாத நிலை என்று குறிப்பிடுகிறது.

பெரும்பாலான விமான விபத்துகளுக்கு இதுதான் முக்கிய காரணமாக இருக்கிறது. அதிகபட்சமாக 2 மணி நேர பயணத்தில் 1 .40 மணி நேரம் விமானிகள் தூங்கி விடுகின்றனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றது.

உலகில் மொத்தம் 20,000,000,000,000,000 எறும்புகள் உள்ளதாம்.. உங்களுக்கு தெரியுமா?

காரணங்கள்:

இதற்கு காரணம் அவர்களது அதீத வேலைப்பளுவாக கூட இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. 10 முதல் 12 மணி நேரம் வேலை செய்வதால் உடல் மற்றும் மனத்திறன் என்பது குறைந்து விடுகிறது. இதனால் அசந்து தூங்கி விடுகின்றனர்.

அதோடு காலை 5 மணி விமானத்திற்கு 3 மணிக்கெல்லாம் விமானிகள் எழுந்திருக்க வேண்டி இருக்கிறது. இதனால் அவர்களின் தூக்க சுழற்சி என்பது பாதிக்கப்படுகிறது. சரியான மற்றும் முழுமையான தூக்கம் என்பது கிடைப்பதில்லை என்று சொல்கின்றனர். இதனால்தான் அதை ஈடு கட்ட பயணத்தின்போது விமானிகள் தூங்குவதாக தெரிவிக்கின்றனர்.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Pilot cabin, Sleep