எந்த ஒரு விஷயத்தையும் சாதிக்க வயது என்றுமே ஒரு தடை இல்லை என்பதை பலரின் சாதனைகளின் மூலம் நாம் அன்றாடம் உணர்ந்து வருகிறோம். இப்படியொரு வகையை சேர்ந்த மனிதர் தான் கேராளவை சேர்ந்த 64 வயதான ஜேம்ஸ். இவரின் அசாத்திய திறமையின் மூலம், அவருக்கு உண்மையில் 64 வயதாக இருக்குமா என்கிற சந்தேகமும் நமக்கு எழ தொடங்கும். கேரளாவைச் சேர்ந்த இவர் சமீபத்தில் கால்பந்து விளையாட்டை விளையாடுவது போன்ற ஒரு வீடியோ சமூக ஊடகங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஜேம்ஸ் தனது தோள்கள் மற்றும் தலையில் கால்பந்தை சுழற்றுவது போன்ற சிறப்பான திறன்களை வெளிக்காட்டும் விதமாக வீடியோ அமைந்துள்ளது. இந்த வீடியோவை பிரதீப் ரமேஷ் என்கிற கால்பந்து வீரர் தனது இன்ஸ்டாகிராம் பக்கமான @prsoccerart என்பதில் பகிர்ந்துள்ளார். மேலும், அதில் சிறப்பான கேப்ஷன் ஒன்றையும் குறிப்பிட்டு போட்டுள்ளார்.
"இன்னமும் கால்பந்து விளையாடும் இந்த 64 வயதானவரை சந்திக்கும் பாக்கியம் எனக்கு கிடைத்துள்ளது. தனது வாழ்வாதாரத்திற்காக இவர் டிரக் ஓட்டுகிறார், மேலும் தனது கால்பந்து கிட்டை அவருடன் லாரியில் எப்போதும் எடுத்துச் செல்கிறார். இவர் வயநாடு கால்பந்து அணியில் ஒருவராக இருந்துள்ளார். இன்னும் கால்பந்து விளையாட்டை விளையாடுகிறார். இவரிடமிருந்து நான் கற்றுக்கொண்ட ஒரு விஷயம் இதுதான்- நீங்கள் ஏதாவது செய்ய விரும்புகிறீர்களா? அதை தாராளமாக செய்யுங்கள்" என்று அந்த வீடியோவிற்கு பிரதீப் கேப்ஷன் எழுதி இருந்தார்.
Also Read : அடேங்கப்பா! குதிரைகளை விட வேகமாக ஓடி சாதித்த இளைஞர்!
அவர் பதிவிட்ட வீடியோவில் சில நேர்த்தியான கால்பந்தாட்ட திறமைகளைக் காட்டுவதுடன், பின்னர் பந்தை ஜேம்ஸுக்கு அனுப்புவதுமாக தொடங்குகிறது. பின்னர், நாம் எதிர்பார்க்காத மாயாஜாலம் ஒன்று நடக்கிறது. ஜேம்ஸ் அந்த பந்தை தனது வேகத்தில் எடுத்து கொண்டு சுழற்றுகிறார். விரைவில் சில மென்மையான ஃப்ரீஸ்டைல் நகர்வுகளையும் காட்டுகிறார். 64 வயதான அவர் பந்தை உதைத்து பிறகு தனது தலையில் வைத்து சமநிலைப்படுத்துகிறார்.
இந்த வீடியோ சுமார் 8 லட்சத்திற்கும் அதிகமான லைக்குகளைப் பெற்றுள்ளது. 64 வயதான ஜேம்ஸ் அவர்களின் அசாத்திய திறமையை நெட்டிசன்கள் பாராட்டி வருகின்றனர். மேலும் பலரும் இது குறித்த தங்களின் கருத்துக்களையும் கமெண்ட்ஸில் பதிவிட்டு வருகின்றனர். "தாத்தா ஃப்ரீஸ்டைல் என்றால் என்ன தெரியுமா.?? அதற்கு தாத்தா:- என் பீரைப் பிடித்துக் கொள்ளுங்கள்" என்று பதில் கூறுவது போன்ற வேடிக்கையான கமெண்ட்ஸ்கள் வந்த வண்ணம் உள்ளன.
இன்னொரு கால்பந்தாட்ட வீரர் "அவர் என்னை விட சிறந்த பந்து கட்டுப்பாட்டைக் கொண்டிருக்கிறார்" என்று குறிப்பிட்டுள்ளார். "இதைச் சரியாகப் பயிற்சி செய்வதற்காக நான் நீண்ட காலத்திற்கு முன்பு ஒரு கால்பந்து வாங்கினேன். அதைச் செய்யத் தொடங்குவதற்கு தற்போது இந்த தாத்தா எனக்கு மற்றொரு காரணத்தைக் தந்துள்ளார்," என்று மூன்றாவதாக ஒருவர் கூறியுள்ளார்.
ஜேம்ஸ் தாத்தாவின் இந்த வீடியோ சாதிக்க வயசு ஒருபோதும் தடை இல்லை என்பதை ஆணித்தரமாக உணர்த்துகிறது.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.