ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

61 வயது முதியவருக்கு 88வது திருமணம் - முன்னாள் மனைவியை மீண்டும் திருமணம் செய்கிறார்!

61 வயது முதியவருக்கு 88வது திருமணம் - முன்னாள் மனைவியை மீண்டும் திருமணம் செய்கிறார்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

ஒரே ஒரு திருமணம் செய்து கொண்டே வாழ்க்கையில் அண்ணல் படும் பல்வேறு தம்பதிகளின் மத்தியில் இங்கு ஒருவர் 88 வது முறையாக திருமணம் செய்ய உள்ளார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

இந்தோனேசியாவை சேர்ந்த 61 வயதான ஒருவர் 88 வது முறையாக திருமணம் செய்ய உள்ளார். இதில் சுவாரஸ்யம் என்னவெனில் அவர் தன்னுடைய ஏற்கனவே தன்னை விட்டு பிரிந்த தன்னுடைய முன்னாள் மனைவியையே திருமணம் செய்ய இருக்கிறார் என்பதுதான் ஹைலைட்டே.

திருமண வாழ்க்கை பலருக்கு இனிமையானதாகவும் பலருக்கு விரும்பத்தகாததாகவும் இருக்கிறது சிலருக்கு திருமண வாழ்க்கையில் எப்போதும் திருப்தி ஏற்படுவதே இல்லை. ஒரே ஒரு திருமணம் செய்து கொண்டே வாழ்க்கையில் அல்லல் படும் பல்வேறு தம்பதிகளின் மத்தியில் இங்கு ஒருவர் 88 வது முறையாக திருமணம் செய்ய உள்ளார் என்ற செய்தி அனைவரையும் ஆச்சரியத்திலும் அதிர்ச்சியிலும் ஆழ்த்தியுள்ளது.

அந்த வகையில் இந்தோனேசியாவை சேர்ந்த 61 வயது உடைய மனிதர் ஒருவர் 88 வது முறையாக திருமணம் செய்யவிருக்கிறார் கால் என பெயருடைய அந்த நபர் தன்னுடைய முன்னாள் மனைவியை மீண்டும் திருமணம் செய்ய இருப்பதுதான் மிக சுவாரசிய தகவல். இவரை திருமணம் செய்யும் பட்சத்தில் 86வது மனைவியாக தனது முன்னாள் மனைவியே திருமணம் செய்யும் முதல் நபராகவும் அவரே இருப்பார்.

Read More : ஸ்டைலாக கார் கியர் மாற்றியதால் காதல்... டிரைவரை திருமணம் செய்த பணக்கார பெண்!

தன்னுடைய மனைவி திரும்பி வரும்போது என்னால் அவரை மறுக்க முடியாது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும் நாங்கள் பிரிந்து மிக நீண்ட காலம் ஆகிவிட்டது. எங்களுக்கிடையே உள்ள காதல் இன்னும் மிக வலிமையாகவே இருக்கிறது என்று 61 வயது முதியவர் தெரிவித்துள்ளார்.

இந்த மனிதருக்கு 14 வயது இருக்கும்போது இப்படி பல்வேறு திருமணங்களை செய்து கொள்ள ஆரம்பித்தார். மிக இளம் வயதில் திருமணம் செய்தது ஒருபுறம் இருக்க, தன்னை விட வயதில் மூத்த பெண்ணை திருமணம் செய்து கொண்டு இரண்டாவது தவறையும் செய்துவிட்டதாக அவர் தெரிவித்துள்ளார். தன்னுடைய முதல் திருமணம்  இரண்டு ஆண்டுகளில் நீடித்த நிலையில் முதல் மனைவியிடம் இருந்து பிரிந்து விட்டார். ஆனால் “என்னுடைய மோசமான நடத்தையினால்தான் என் மனைவி என்னை விட்டு நீங்கிவிட்டார்" என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முதல் திருமணத்தில் மிகுந்த மன உளைச்சல் அடைந்த அவர் அதன் பிறகு ஆன்மீகத்தின் பக்கம் திரும்பி பெண்கள் தன்னை தேடி வருவதற்கு உண்டான சில பயிற்சிகளை மேற்கொண்டுள்ளார். தற்பொழுது அவருக்கு 88 வது முறையாக தனது முன்னாள் மனைவியுடன் திருமணம் நடக்க இருப்பதைப் பற்றி அவர் மிகவும் மகிழ்ச்சியாகவே இருக்கிறார். மேலும் இந்த திருமணத்தின் மூலம் தங்கள் காதலை இன்னும் பலப்படுத்தி வாழ்க்கையை உற்சாகமாக வாழ போவதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார்.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Trending, Viral