குழந்தைகளை கவனித்துக் கொள்வது என்பது கொஞ்சம் சவாலானது தான். அதுவும் பள்ளி செல்லும் வயதில் இருக்கக்கூடிய குழந்தைகள் மிகவும் சேட்டை செய்வார்கள் அல்லது குறும்புத்தனமாக இருப்பார்கள். அடம்பிடிப்பது, எதற்கெடுத்தாலும் அழுவது, கத்துவது என்பதெல்லாம் எல்லா குழந்தைகளுமே செய்வது தான். ஆனால் பெற்றோர்கள் எவ்வாறு குழந்தைகளை கையாள்கிறார்கள், சமாதானப்படுத்துகிறார்கள் என்பது வேறுபடும். சமீபத்தில் தன்னுடைய 6 வயது மகனுக்கு, நிறுவனங்கள் வழங்குவது போல ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற ஒரு வேடிக்கையான வினோதமான ஒப்பந்தத்தை மேற்கொண்டுள்ளார்.
அபீர் என்பது ஒப்பந்தம் செய்து கொண்ட ஆறு வயது சிறுவனின் பெயர். இவர் தன்னுடைய தந்தையுடன் ஒரு நாளில் எப்படி எல்லாம் நடந்து கொள்ள வேண்டும், நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கான ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளார். அந்த ஒப்பந்தத்தில் தினமும் அலாரம் அடிப்பதற்கு 10 நிமிடங்களுக்கு முன்பாகவே எழுந்து விடவேண்டும் என்பதும் முக்கியமான விஷயமாக குறிப்பிடப்பட்டுள்ளது. தொலைக்காட்சி பார்ப்பதற்கும் அனுமதி உள்ளது, ஆனால் தொலைக்காட்சி பார்ப்பது என்பது எப்போதெல்லாம் சாப்பிடுகிறாரோ அந்த நேரத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் கைகளால் எழுதப்பட்டு, அந்த சிறுவன் கையெழுத்து இட்டிருக்கிறார். ஒப்பந்தத்தில் எவ்வளவு நேரம் விளையாட வேண்டும், பால் குடிப்பதற்கு அடம்பிடிக்க கூடாது, என்பது உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் கூறப்பட்டுள்ளது.
அலாரம் அடிக்கும் நேரம், எழுந்து கொள்ளும் நேரம், சரியாக உணவு சாப்பிடுவது, அதுமட்டுமில்லாமல் எத்தனை மணி நேரம் டிவி பார்ப்பது, எவ்வளவு நேரம் விளையாடுவது, சாப்பிடுவது என்று அந்த சிறுவன் செய்யக்கூடிய தனக்கான விஷயங்களைத் தவிர்த்து வீட்டு வேலைகளிலும் உதவி செய்ய வேண்டும் என்பதும் உள்ளது. இரவு நேரம் எப்போது தூங்கச் செல்ல வேண்டும், எவ்வளவு நேரம் தூங்க வேண்டும் என்று ஒரு நாள் முழுவதற்குமான முழு அட்டவணையை ஒரு ஒப்பந்தமாக தயார் செய்துள்ளனர்.
Also Read : சூட்கேசில் மறைத்து காதலியை கல்லூரி விடுதிக்கு எடுத்துச் சென்ற மாணவர்!!
இந்த ஒப்பந்தத்தின் மிகப்பெரிய ஹைலைட், நாள்முழுவதும் எதற்கும் அழக்கூடாது கோபப்படக் கூடாது என்பதுதான். அந்தச் சிறுவன் வெற்றிகரமாக செய்து முடித்தால் சிறுவனின் தந்தை அவனுக்கு வெகுமதியாக 100 ரூபாய் வழங்குவதாக கூறியிருக்கிறார்.
ஒப்பந்தம் மிகவும் வேடிக்கையாக மற்றும் ஆச்சரியமாக இருப்பதாக நெட்டிசன்கள் கருத்தை தெரிவித்து வந்துள்ளனர். அதுமட்டுமின்றி இந்த ஒப்பந்தத்தை தொடர்ச்சியாக பின்பற்ற முடியாது என்றும் கூறியுள்ளனர். இப்படி இளம் வயதிலேயே கட்டுப்பாடுகளை அட்டவணையை பின்பற்றினால், குழந்தைக்கு மனப் பதற்றம் ஏற்படும் என்றும் தெரிவித்து வருகின்றனர்.
Also Read : கணவரை ஏலத்துக்கு விட்ட பெண், ரிட்டன் கிடையாது என கன்டிஷன்...!
ஆனால், பலரும் இதை பாராட்டி வருகின்றனர். ஆறு வயது குழந்தைக்குக் கூட அட்டவணையைப் பின்பற்றி பணம் எப்படி சம்பாதிப்பது என்று தெரிந்திருக்கிறது என்று ஒருவர் வேடிக்கையாக பகிர்ந்துள்ளார். அதேபோல மற்றொருவரும், இருபத்தி ஒரு வயது குழந்தைக்கு இதைப்போல ஒரு ஒப்பந்தத்தைப் தயார் செய்து அவர்கள் போன் பயன்படுத்தும் நேரத்தை குறைக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.