ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

விலையைக் கேட்டா தலையை சுத்தும்.. கடலில் சிக்கிய 550 கிலோ ராட்சச அரிய வகை மீன்!

விலையைக் கேட்டா தலையை சுத்தும்.. கடலில் சிக்கிய 550 கிலோ ராட்சச அரிய வகை மீன்!

மார்லின் மீன்

மார்லின் மீன்

இந்த அறிய வகை மீன். இதன் உடலில் இருந்து எடுக்கப்படும் ஒரு ரசாயனம் மன அழுத்த நிவாரணி மருந்து தயாரிக்க பயன்படுகிறது என்று தெரிவித்தார்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Odisha (Orissa) |

மீனவர்கள் வலையில் அவ்வப்போது வித்தியாசமான பொக்கிஷங்கள் சிக்கும். பொக்கிஷம் என்றால் எதோ புதையல் இல்ல. அரியவகை மீன்கள், ஆமைகள், கொள்வாள் உயிரினங்கள் சிக்கும். அப்படி ஒடிசாவில் ஒரு சம்பவம் தற்போது நிகழ்ந்துள்ளது

ஒடிசா பாலாசோர் மாவட்டத்தில் மீனவர்கள் வலையில் அரியவகை மீன் ஒன்று மாட்டியுள்ளது. செய்லர் மார்லின் மீன் என்றழைக்கப்படும் 550 கிலோ எடை கொண்ட இந்த மீன் ரூ.1 லட்சத்துக்கு விலை போனதாம்.

இது குறித்து மீன்வளத் துறை அதிகாரி பார்த்தசாரதி ஸ்வெய்ன் கூறுகையில், இந்த அறிய வகை மீன். இதன் உடலில் இருந்து எடுக்கப்படும் ஒரு ரசாயனம் மன அழுத்த நிவாரணி மருந்து தயாரிக்க பயன்படுகிறது என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க:ஜிம் உரிமையாளரின் தனித்துவ சிவ பக்தி - டம்ப்பெல்ஸ் மற்றும் வெயிட் பிளேட்ஸால் உருவாக்கப்பட்ட சிவலிங்கம்.!

இந்த மீனை தமிழ்நாட்டில் கொப்பரக்குல்லா என்று அழைக்கின்றனர். இது இஸ்டியோபோரிடே என்ற குடும்பத்தைச் சேர்ந்த மீன் ஆகும். இதில் 10க்கும் மேற்பட்ட இனங்கள் உள்ளன என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

கொப்பரக்குல்லா மீனானது நீளமான உடலையும், ஈட்டி போன்ற கூரான மூக்கையும், தலையில் குல்லா வைத்தது போன்ற முதுகுத் துடுப்பையும் கொண்டது. இதன் முதுகுத் துடுப்பு பின்னோக்கி வரவர சிறுத்து மறையும். இதன் பொதுப் பெயரான மார்லின் என்றது மாலுமி மார்லின்ஸ்பைக் பெயரால் வந்ததாக கருதப்படுகிறது.

கொப்பரக்குல்லா மீன் வேகமாக நீந்தும் கடல் மீன்களில் ஒன்றாகும். மணிக்கு சுமார் 110 கிமீ (68 மைல்) வேகத்தில் இந்த மீன் நீந்தும் என்று சில தரவுகள் கூறுகின்றன.

இவற்றில் பெரிய இனங்களில் அட்லாண்டிக் நீல மார்லின், மகைரா நிக்ரிகன்ஸ் இனம் அடங்கும். அவை 5 மீ (16.4 அடி) நீளம் மற்றும் 818 கிலோ (1,803 எல்பி) எடைவரை வளரும். மற்றொரு வகையான கருங்கொப்பரான் 5 மீ (16.4 அடி) நீளம் மற்றும் 670 கிலோ (1,480 எல்பி) எடை வரை வளரும்.

இவை வெப்பமண்டல பகுதிகளில் பிரபலமான மீன்களாகும். அட்லாண்டிக் நீல கொப்பரான் மற்றும் வெள்ளை கொப்பரான் ஆகியவை அதிகப்படியான மீன்பிடித்தலால் அழிந்து வருகின்றன.

Published by:Ilakkiya GP
First published:

Tags: Fish, Odisha