Home /News /trend /

"சார்" என்று கூப்பிடாதீர்கள்..இனிமே அப்படிக் கூப்பிட்டால் ஃபைன்! - அதிரடியாக ரூல்ஸ் போட்ட பிரபல தொழிலதிபர்

"சார்" என்று கூப்பிடாதீர்கள்..இனிமே அப்படிக் கூப்பிட்டால் ஃபைன்! - அதிரடியாக ரூல்ஸ் போட்ட பிரபல தொழிலதிபர்

தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா

தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா

ஊழியர் ஒருவர் ஹர்ஷ் கோயங்காவை பெயர் சொல்லி அழைக்கமுடியாமல் தினமும் சார் என்று அழைத்து உண்டியலில் 50 ரூபாயைப் போட்டு விட்டுச் செல்கிறார்

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Mumbai, India
    இந்தியாவின் முக்கிய தொழிலதிபராக விளங்கும் ஹர்ஷ் கோயங்கா என்பவர் தன்னுடைய ஊழியர்கள் அலுவலகத்தில்  தன்னை "சார்" என்று அழைக்கக்கூடாது என்று கூறியுள்ளார். மேலும் அதனை மீறிக் கூப்பிட்டால் ஒவ்வொரு முறையும் 50 ரூபாய் அபராதமாகச் செலுத்த வேண்டும் என்று கூறியுள்ளார்.

    மும்பையிலிருந்து இயங்கும் ஆர்.பி.ஜி., என்டர்பிரைசஸ் என்ற தனியார் நிறுவனத்தின் தலைவராக விளங்கும் ஹர்ஷ் கோயங்கா அவருடைய அலுவலகத்தில் யாரும் அவரை சார் என்று அழைக்கக்கூடாது என்பதை அறிவுறுத்தி வருகிறார். மேலும் அதற்காக 50 ரூபாயை அபராதமாக வாசித்தும் வருகிறார். இதற்காக ஒரு உண்டியலையும் அவரின் மேசையில் வைத்துள்ளார்.

    அவரை ஊழியர்கள் மறந்து தவறுதலாகச் சார் என்று அழைத்து விட்டால் அதில் 50 ரூபாய் போட்டுவிட்டுச் செல்ல வேண்டும். சார் என்று அழைப்பதற்குப் பதிலாக அவரை பெயர் சொல்லி அழைக்க ஊழியர்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

    இந்த முறையில் நகைச்சுவையாக அவரின் ஊழியர் ஒருவர் ஹர்ஷ் கோயங்காவை பெயர் சொல்லி அழைக்கமுடியாமல் தினமும் சார் என்று அழைத்து உண்டியலில் 50 ரூபாயைப் போட்டு விட்டுச் செல்கிறார் என்று அவர் கூறியுள்ளார்.

    மேலும் இது குறித்து அவர் தெரிவிக்கையில், ஒரு முறை அவர் மும்பையைத் தவறுதலாக 'பம்பாய்' எனக் குறிப்பிட்டதாகவும் அதற்காக மகாராஷ்டிராவின் முன்னாள் முதலமைச்சர் மனோகர் ஜோஷி, ஹர்ஷ் கோயங்காவிடம் 50 ரூபாய் நிதியாக வசூலித்ததாகவும் கூறினார்.

    அதனைத்தொடாது அவருக்கும் நாமும் இப்படி அலுவலகத்தில் செயல்படுத்தினால் சார் என்று கூப்பிடும் பழக்கம் மாறும் என்று தொடங்கியுள்ளார். சார் என்று கூப்பிடாமல் பெயர் சொல்லிக் கூப்பிடும் போது ஊழியர்களுக்கு மத்தியில் சமத்துவமான சூழல் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    Also Read : அமைதியை தேடி 43 ஆண்டுகளில் 53 திருமணங்களை செய்த சவுதி தொழிலதிபர்!

    அப்படி உண்டியலில் சேரும் பணத்தைத் தொண்டு பணிகளுக்கு அளித்ததாகத் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தன்னை இன்னும் சில பேர் மிஸ்டர் கோயங்கா அழைக்கின்றனர். ஆனால் நான் பேரைச் சொல்லி அழைப்பதையே விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

    தற்போதைய காலத்தில் கார்ப்பரேட் நிறுவனங்களின் சார், மேடம் என்று கூப்பிடும் வழக்கம் கைவிடப்பட்டுப் பெயர் சொல்லித்தான் ஊழியர்கள் அழைக்கும் வழக்கம் பின்பற்றப்படுவது குறிப்பிடத்தக்கது.
    Published by:Janvi
    First published:

    Tags: Corporate, Viral

    அடுத்த செய்தி