பிசியான சாலையில் லேண்ட் குரூசர் காரை அசால்ட்டாக ஓட்டி சென்ற 5 வயது சிறுவன் - வைரல் வீடியோ

வீடியோ காட்சிகள்

இந்த வீடியோ குறும்புத்தனமாக இருந்தாலும் இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர்.

 • Share this:
  சமூக ஊடங்களில் வைரலாகி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் மிகவும் குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. அந்த வீடியோவில் 5 வயது சிறுவன் லேண்ட் குரூசர் காரை வேறு ஒருவரின் உதவியின்றி ஓட்டி செல்கிறான். இந்த வீடியோவை பார்த்த பலரும் திகைப்பில் ஆழ்ந்துள்ளனர்.

  பாகிஸ்தானின் முல்தான் நகரில் பரபரப்பான சாலையில் தான் இந்த வீடியோ எடுக்கப்பட்டுள்ளது. 27 வினாடிகள் இருக்கும் அந்த வீடியோவில் 5 வயது சிறுவன் கார் ஓட்டுவது எப்படி சாத்தியம் என்று பலரும் குழம்பி உள்ளனர். அந்த சிறுவனின் உயரத்திற்கு எப்படி பெடல் எட்டிருக்கும் என்பது தான் அனைவரின் சந்தேகமாக உள்ளது.  இந்த வீடியோ குறும்புத்தனமாக இருந்தாலும் இதற்கு சரியான நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தி வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை தொடர்ந்து போசன் சாலையில் பணியிலிருந்து போக்குவரத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்துள்ளனர்.

  இதை தொடர்ந்து சிறுவன் கார் ஓட்டிய சிசிடிவி காட்சிகள், வாகனத்தின் எண் மற்றும் அதன் உரிமையாளரை அடையாளம் காண நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு சம்மந்தப்பட்டவர்களுக்கு தண்டனை அளிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Published by:Vijay R
  First published: