தங்கையின் பசியை போக்க ஃபிரைட் ரைஸ் சமைத்து ஊட்டும் 5 வயது அண்ணன்..! வைரல் வீடியோ

உண்மையிலேயே அண்ணன் தங்கை பாசம் என்பது சொல்லில் அடங்கா உன்னதமானது என்பதை நிரூபிக்கிறது இந்த வீடியே.

Web Desk | news18
Updated: September 17, 2019, 5:20 PM IST
தங்கையின் பசியை போக்க ஃபிரைட் ரைஸ் சமைத்து ஊட்டும் 5 வயது அண்ணன்..! வைரல் வீடியோ
சிறுவர்கள்
Web Desk | news18
Updated: September 17, 2019, 5:20 PM IST
அண்ணன் தங்கை பாசம் என்பது இன்றைய சமூகவலைதளங்களால் அதிகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. அண்ணன் தங்கை பாசத்தைக் கொண்டாடும் பாடல்கள், காட்சிகள், படங்கள் என ஃபேஸ்புக், ட்விட்டரை ஸ்க்ரால் செய்தால் நிச்சயம் ஒரு நாளைக்கு ஒன்றையேனும் காணக் கூடும்.

உண்மையிலேயே அண்ணன் தங்கை பாசம் என்பது சொல்லில் அடங்கா உன்னதமானது என்பதை நிரூபிக்கிறது இந்த வீடியோ.

இந்த வீடியோவும் நெட்டிசன்களால் சமூகவலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. அதாவது இந்தோனேசியாவைச் சேர்ந்த ஐந்து வயது சிறுவன் தன் தங்கையின் பசியைப் போக்க ஃபிரைட் ரைஸ் சமைத்து ஊட்டி விடுகிறார்.


அந்த வீடியோவில் முதலில் கடாயில் எண்ணெய்யை ஊற்றி முட்டையை உடைத்து ஊற்றி வதக்குகிறார். பின் நறுக்கிய தக்காளியை சேர்த்து வதக்கி வேக வைத்த சாதத்தை கொட்டி பிறட்டுகிறார். பின் மசாலாக்கள் சேர்த்து உணவுக்கு சுவைக் கூட்டுகிறார்.
இறுதியாக ஒரு கிண்ணத்தில் ஃபிரைட் ரைஸை கொட்டி அருகில் அமர்ந்து பார்த்துக் கொண்டிருக்கும் தன் தங்கைக்கு ஊட்டி விடுகிறார். இதுதான் அந்த வீடியோ...

வீடியோ தற்போது வெகு வைரலாகப் பரவி வருகிறது.

Loading...

நீங்களும் காண..பார்க்க :

இருசக்கர வாகனங்களுக்கு இன்சூரன்ஸ் போடும்போது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயங்கள்!

First published: September 17, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...