ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ஐந்து கோள்களின் அணிவகுப்புக் காட்சி!

ஐந்து கோள்களின் அணிவகுப்புக் காட்சி!

ஐந்து கோள்களின் அணிவகுப்புக் காட்சி!

ஐந்து கோள்களின் அணிவகுப்புக் காட்சி!

String of 5 planets: நமது சூரிய குடும்பத்தில் உள்ள ஐந்து முக்கிய கோள்கள் வெள்ளிக்கிழமை முதல் வரிசையாக பிரகாசிக்கும் அரிய கோள் சேர்க்கை  காட்சி இப்போது தெரிகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :

நமது சூரிய குடும்பத்தில் உள்ள ஐந்து முக்கிய கோள்கள் வெள்ளிக்கிழமை முதல் வரிசையாக பிரகாசிக்கும் அரிய கோள் சேர்க்கை  காட்சி இப்போது தெரிகிறது.

நம் சூரியக் குடும்பத்தில் உள்ள ஒரு சில கோள்களை நம் வெறும் கண்ணாலேயே பார்க்க முடியும். பூமியின் இரட்டைக் கோள் என அழைக்கப்படும் வெள்ளியை காலை மாலைகளில் வெறும் கண்ணால் பார்க்க முடியும். வானில் தனித்து மின்னிக்கொண்டு இருக்கும். அது போல மற்ற கிரகங்களும் தெரியும். ஆனால் சூரிய ஒளியால் அது மூடப்பட்டு விடும்.அப்படி அல்லது வெறும் கண்ணால் பார்க்க எப்போதாவது சந்தர்ப்பம் அமையும். அப்படி ஒரு நிகழ்வுதான் இப்போது நடக்கிறது மக்களே.

புதன், வெள்ளி, செவ்வாய், வியாழன், சனி ஆகிய கிரகங்கள் விடியும் முன் வானில் ஒளிர்வதை வெறும் கண்களால் பார்க்க கூடிய நிகழ்வு என்றால் சீரானது தானே! வாரத்தின் நாட்களை வரிசை காட்டியது போல் வரிசையாக கோள்கள் அணிவகுத்து காட்சி கொடுக்கின்றன.

புதன் சூரியனுக்கு அருகே இருப்பதனாலும் சூரிய ஒளியால் பெரிதும் மூடப்படுவதாலும் அதை அவ்வளவு சீக்கிரம் பார்க்கும் வாய்ப்பு கிடைக்காது. அது தெரியும் சில நிமிடங்களில் சூரிய ஒளி அதை மறைத்து விடும். 

ஆனால் இப்போது 5 கோள்களையும் ஒன்றாக சேர்த்து பார்க்கும் வாய்ப்பு கிடைத்துள்ளது. இந்த காட்சியானது வெள்ளிக்கிழமையன்று காலை சிறப்பாக தெரிந்துள்ளது. ஆனால் உலகின் பெரும்பாலான பகுதிகளில் திங்கள் வரை இக்காட்சி தெரியும் என்று வானியல் அறிஞர்கள் கூறியுள்ளனர்.

கோள்கள் "அடிவானத்திற்கு அருகாமையில் இருந்து விரிக்கப்பட்ட முத்துகளின் சரம் போல்" தோன்றும் என்று விண்வெளி விஞ்ஞானியும் பிரபல வானியல் கழகத்தின் தலைமை நட்சத்திர ஆய்வாளருமான பேராசிரியர் லூசி கிரீன் விளக்குகிறார்.

சூரியனிலிருந்து கிரகங்கள் இருக்கும் வரிசையில் தோன்றும் என்பதால் இதுவும் ஒரு சிறப்பு நிகழ்வாகும். இந்த மாதிரியான காட்சி கடைசியாக 2004 இல் நடந்தது, இனி இது 2040 வரை மீண்டும் காணப்படும்.வெள்ளியன்று ஒரு பிறை நிலவும் வெள்ளி மற்றும் செவ்வாய் இடையே தோன்றும்.

வடக்கு அரைக்கோள பகுதிகளில் சூரிய உதயத்திற்கு 45 முதல் 90 நிமிடங்களுக்கு இடையில் இக்காட்சி தென்படும். மலை போன்ற உயரமான இடத்திலிருந்து கிழக்கு நோக்கி அடிவானத்தில் பார்த்தால் தெரியும். அதிகாலையில் மரங்கள் கட்டிடங்கள் மறைக்காத இடத்தில் இருந்து பார்த்தால் தெரியும். ஆனால் சூரியன் உதிக்கும் முன்னரே பார்க்க வேண்டும். சூரியன் உதித்தால் அதன் வெளிச்சத்தில் எல்லாம் மறைந்துவிடும்.

விண்கல்லை எரித்துச் சாம்பலாக்கிய சூரியன்!

அதே போல் அது வெறும் கண்ணால் பார்க்கலாம். சூரியனை நேரடியாகப் பார்க்கும் அபாயம் இருப்பதால் தொலைநோக்கிகள்  போன்ற உபகரணங்களைப் பயன்படுத்த வேண்டாம் என்று அறிஞர்கள் அறிவுறுத்துகிறார். தொலைவில் உள்ள சனியில் இருந்து தொடங்கி பிரகாசமான வெள்ளி வரை எண்ணிக்கொண்டே வந்தால் இறுதி கிரகம் புதனையும் கண்டுபிடித்துவிடலாம். 

First published:

Tags: Astronomy, MARS