Home /News /trend /

தெரியுமா? இந்த 5 தீவு நாடுகளையும் விசா இல்லாமல் இந்திய பாஸ்போர்ட் மூலம் சுற்றி பார்க்கலாம்!

தெரியுமா? இந்த 5 தீவு நாடுகளையும் விசா இல்லாமல் இந்திய பாஸ்போர்ட் மூலம் சுற்றி பார்க்கலாம்!

இந்த 5 தீவுகளுக்கும் விசா இல்லாமல் சுற்றி பார்க்கலாம்!

இந்த 5 தீவுகளுக்கும் விசா இல்லாமல் சுற்றி பார்க்கலாம்!

ஆம்! உங்களிடம் இந்திய பாஸ்போர்ட் இருந்தால் விசா இல்லாமல் நீங்கள் பயணம் செய்யக்கூடிய சில தீவு நாடுகளின் பட்டியயல் இதோ:

  மெல்ல மெல்ல குறைந்து வரும் கோவிட்-19 தொற்றுநோய் பரவல் ஆனது டூரிஸ்ட் இண்டஸ்ட்ரி ஆனது மீண்டும் புத்துயிர் பெற வழி வகுக்கிறது என்பதில் சந்தேகமே வேண்டாம். ஒரு பெரிய இடைவேளைக்கு பிறகு எங்கே பயணிக்கலாம் என்கிற சரியான இலக்கைத் தேர்ந்தெடுப்பது ஒரு பரபரப்பான பணியாக இருக்கும் நிலைப்பாட்டில், உங்களுக்கு சில யோசனைகளை வழங்கும் நோக்கத்திலேயே இக்கட்டுரை உருவாக்கப்பட்டுள்ளது. ஆம்! உங்களிடம் இந்திய பாஸ்போர்ட் இருந்தால் விசா இல்லாமல் நீங்கள் பயணம் செய்யக்கூடிய சில தீவு நாடுகளின் பட்டியயல் இதோ:

  ஏன் "விசா இல்லாமல்"? ஏனெனில் சரியான நேரத்தில் விசா வருவதைச் சுற்றியுள்ள கவலைகள், பயணம் குறித்த நமது உற்சாகத்தை பாதி குறைத்து விடுகின்றன. உடன் விசா இல்லாத, விசா தேவைப்படாத பயணங்கள் உங்களுக்கு நிறைய நேரத்தையும் மிச்சப்படுத்தும். இப்படியாக விசா இல்லாமல் நீங்கள் செல்லக்கூடிய சுமார் 30 நாடுகள் இருந்தாலும் கூட இங்கே 5 முக்கியமான தீவு நாடுகளை பற்றி மட்டுமே நாங்கள் பேசியுள்ளோம்.

  குக் தீவுகள் (Cook Islands)  : மொத்தம் 15 தீவுகளின் குழுவைக் கொண்ட குக் தீவுகள் தென் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஒரு தேசமாகும். வெள்ளை மணல் கடற்கரைகள் மற்றும் நீல நிற தடாகங்களை தவிரத்து, இந்த மிகப்பெரிய தீவில் பசுமையான அதே சமயம் கரடுமுரடான மலைகளும் உள்ளன. நீங்கள் முன்னெப்போதும் பெற்றிறாத பயண அனுபவத்துக்கு வாய்ப்பளிக்கும் இந்த தீவில் சாகசங்கள் மிக்க நீர் விளையாட்டுகளான ஸ்நோர்கெலிங், டைவிங், சர்ஃபிங் போன்றவைகளையும் நீங்கள் முயற்சி செய்யலாம். உங்களிடம் இந்திய பாஸ்போர்ட் இருந்தால் போதும், நீங்கள் குக் தீவுகளில் ஒரு மாதம் செலவழிக்கலாம்.

  ஃபிஜி (Fiji) : ஃபிஜி, 300 க்கும் மேற்பட்ட தீவுகளைக் கொண்ட ஒரு அற்புதமான தீவுக்கூட்டமாகும், இது ஒரு தென் பசிபிக் தீவு நாடாகும். இங்குள்ள ஷாகி எரிமலை திட்டுகள், கவர்ச்சியான நீர்வீழ்ச்சிகள், அடர்ந்த மழைக்காடுகள் மற்றும் அழகிய பவளப்பாறைகள் ஆகியவைகள் இதை கட்டாயம் பார்க்க வேண்டிய ஒரு நாடாக ஆக்குகின்றன. இந்த தீவின் அமைதியான நீரில் பூர்வீக தாவரங்கள் மற்றும் விலங்கினங்களை ஆராய்வது உங்களின் பயண அனுபவத்தை அடுத்தக் கட்டத்திற்கு கொண்டு செல்லும்.

  Also Read : 3000-ம் ஆண்டு பழமையான கோவிலின் நிலத்தடி பாதையை கண்டு பிரமித்த தொல்பொருள் ஆய்வாளர்கள்

  இந்தோனேசியா : பாலி - பலருக்கும் தேனிலவுக்கான ஒரு விருப்பமான இடம் என்பது ஒருபக்கம் இருக்க, இந்தியர்கள் ஒரு மாதத்திற்கு விசா இல்லாமல் இந்தோனேஷியாவுக்குச் செல்லலாம் என்பது பற்றி உங்களுக்கு தெரியுமா? ஆம்! 17,000 க்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கிய இது ஒரு தென்கிழக்கு ஆசிய நாடு ஆகும். ஒவ்வொரு டிராவல் லவ்வரும் இதன் வளமான மற்றும் மாறுபட்ட கலாச்சாரங்கள், பழக்கவழக்கங்கள், தாவரங்கள் மற்றும் விலங்கினங்கள், கலை மற்றும் உணவு ஆகியவற்றை ஒருமுறையாவது ஆராய்ந்து பார்த்திட வேண்டும்.

  மொரிஷியஸ் : இந்தியப் பெருங்கடலால் சூழப்பட்ட மொரீஷியஸின் கடற்கரைகள், தடாகங்கள் மற்றும் திட்டுகள் ஆகியவைகள் கண்களுக்கு விருந்து என்றால் அது மிகையாகாது. இங்கே வெள்ளை மணல் கடற்கரைகள், அடர்ந்த மற்றும் பசுமையான காடுகள், தேயிலை தோட்டங்கள், நீர்வீழ்ச்சிகள், எரிமலை மலைகள் மற்றும் தீவுகள் என சுற்றிப்பார்க்க எக்கச்சக்கமான சுற்றுச்சூழல் அமைப்புகள் உள்ளன. இந்திய பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் மொரீஷியஸில் மூன்று மாதங்கள் வரை தங்கலாம்.

  பார்படாஸ் (Barbados) : அட்லாண்டிக் பெருங்கடலால் சூழப்பட்ட இந்த கரீபியன் தீவு, இந்திய சுற்றுலாப் பயணிகளை மூன்று மாதங்கள் வரை விசா இல்லாமல் சுற்றிப்பார்க்க அனுமதிக்கிறது. இது ஒரு சுதந்திரமான பிரிட்டிஷ் காமன்வெல்த் நாடாகும், மேலும் இந்நாடு வளமான கலாச்சார பன்முகத்தன்மையையும் கொண்டுள்ளது.
  Published by:Vijay R
  First published:

  Tags: Island

  அடுத்த செய்தி