வாழ்நாள் முழுவதும் நிதி வழங்கக்கோரி பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்த 41-வயது வேலையில்லா பட்டதாரி!

வாழ்நாள் முழுவதும் நிதி வழங்கக்கோரி பெற்றோர் மீது வழக்கு தொடர்ந்த 41-வயது வேலையில்லா பட்டதாரி!

ஃபைஸ் சித்திக்

இங்கிலாந்தில் வசிக்கும் 41 வயதான நபர் “வாழ்நாள் முழுவதும் நிதி உதவிக்கோரி" தனது பெற்றோருக்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

  • News18
  • Last Updated :
  • Share this:
இந்தியாவில் ஒரு குழந்தையின் பிறப்பு முதல் அவர்களது படிப்பு, திருமணம் வரை அனைத்து நிதி சார்த்த பொறுப்புகளையும் பெற்றோர்கள் கவனித்து கொள்கின்றனர். மேலும், குழந்தைகளின் எதிர்காலத்திற்காக வீடு, நகை போன்ற சொத்துக்களை சேர்த்து வைக்கின்றனர். என்னதான் இந்தியப் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு நிதி உதவி செய்வது மிகவும் பொதுவானதாக இருந்தாலும், உலகின் பிற பகுதிகளில் உள்ள நாடுகளிலும் இதேபோல் தான் இருக்கும் என்பது அர்த்தம் இல்லை. அங்கு உங்கள் பெற்றோரின் பணம் குழந்தைகளுக்கு சொந்தமானதும் அல்ல. மகன், மகள் சம்பாரிக்கும் பணம் அவர்களின் பெற்றோருக்கு தான் எனவும் கருதப்படுவதில்லை. அந்த வகையில் தனது பெற்றோரிடமிருந்து நிதி உதவி பெறும் முயற்சியில், இங்கிலாந்தில் வசிக்கும் 41 வயதான நபர் “வாழ்நாள் முழுவதும் நிதி உதவிக்கோரி" தனது பெற்றோருக்கு எதிராக வழக்கு ஒன்றை தொடர்ந்துள்ளார்.

மேலும் பெற்றோர்கள் மீது வழக்கு தொடர்ந்தவர் ஒரு ஆக்ஸ்போர்டு பட்டதாரி, ஆனால் தற்போது அவர் வேலையில்லாமல் இருப்பது இந்த அதிர்ச்சியூட்டும் நிகழ்வை இன்னும் ஆச்சரியமாக மாற்றியுள்ளது. ஆக்ஸ்போர்டு பட்டதாரியின் பெயர் ஃபைஸ் சித்திக். பெற்றோரை நீதிமன்ற வாசலில் நிறுத்திய இவர், இந்த கோரிக்கையை வைக்க தனக்கு உரிமை உண்டு என்று கூறியுள்ளார்.

இவரது பெற்றோரின் பெயர் ரக்ஷந்தா (69) மற்றும் ஜாவேத் (71) தற்போது துபாயில் வசித்து வருகின்றனர். சித்திக்கின் கூற்றுப்படி, அவரின் பெற்றோர் செல்வந்தர்கள். அவர் தனது உடல்நலப் பிரச்சினைகள் காரணமாக வளரும் பருவத்தில் அவர் ஒரு பாதிக்கப்பட்ட குழந்தை என்றும், எனவே, அவரது பெற்றோர் அவருக்கு கடன்பட்டிருக்கிறார்கள் என்றும் அவர் கூறியுள்ளார். சித்திக் முன்னர் பல சட்ட நிறுவனங்களில் பணிபுரிந்துள்ளார். மேலும் இந்த சரியான இழப்பீட்டை அவரது பெற்றோர் தர மறுத்தால், அது மனித உரிமை மீறலாக இருக்கும் என்றும் சித்திக் கூறியுள்ளார்.

இதுகுறித்து Daily Mail வெளியிட்ட அறிக்கையின்படி, அவர் தற்போது மத்திய லண்டனில் ஹைட் பார்க் அருகே ஒரு ஆடம்பரமான பிளாட்டில் வசித்து வருகிறார். இது அவரது பெற்றோருக்கு சொந்தமானது மற்றும் அதன் மதிப்பு 1 மில்லியன் டாலர் அதாவது இந்தியா விலையில் ரூ.10,13,64,914 என மதிப்பிடப்பட்டுள்ளது. இருப்பினும் அவர் வீட்டில் தங்குவதற்கு எந்த வாடகையும் செலுத்தவில்லை. ஏற்கனவே தனது பெற்றோரிடமிருந்து £ 400 டாலர்களை (ரூ. 40,548) வாராந்திர பணமாக வாங்கி வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

பணத்திற்காக வழக்குத் தொடுப்பது இவருக்கு ஒன்றும் புதியதல்ல. முன்னதாக, இவர் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்திற்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். இதுவே அவரது வேலையின்மைக்கு வழிவகுத்தது. தூக்கமின்மை மற்றும் மனச்சோர்வின் போது பரீட்சைகளை எழுத வேண்டியிருந்ததால் தனது ஆசிரியர்களைக் குற்றம் சாட்டுவதோடு மட்டுமல்லாமல், சலிப்பான கல்வி, மோசமான மற்றும் போதாத கற்பித்தல் என சித்திக் பல்கலைக்கழகம் மீது பல குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். இந்த வழக்கில் அவர் 1 மில்லியன் டாலர் இழப்பீடு கோரிய நிலையில், அவரது கோரிக்கை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு நீதிமன்றத்தால் நிராகரிக்கப்பட்டது. மேலும் படிக்கும் காலகட்டத்தில் சித்திக் மன உளைச்சலில் இருந்ததற்கான எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை எனக்கூறி நீதிபதி வழக்கை தள்ளுபடி செய்தார்.

Also read... திருமண ஆசைக்காட்டி முதியவரை ஏமாற்றிய பெண் - ரூ.1 கோடி சுருடிக்கொண்டு தலைமறைவு!

ஆனால் பெற்றோர்கள் இப்போது தங்கள் மகன் சித்திக்கின் செயலால் மேலும் சோர்வடைந்துள்ளனர். ஏற்கனவே, மகன் செலவுகளுக்காக நிதி அளித்து வந்த நிலையில், இப்பொது வாழ்நாள் முழுவதும் நிதி செலுத்துவதை பற்றி வேதனை அடைந்துள்ளனர். மேலும் நிதி சுமையை குறைக்கவும் வலியுத்தியுள்ளனர். கடந்த ஆண்டு குடும்ப நீதிமன்றம் இந்த வழக்கை நீதிபதி நிராகரித்த பின்னர், சித்திக்கின் வழக்கு இப்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் விசாரிக்கப்பட்டு வருகிறது.

இந்த வழக்கு மிகவும் சிறப்பு வாய்ந்தது மற்றும் முதன்மையானது என்றும் இது இங்கிலாந்தில் பெற்றோரின் உரிமைகளை பாதிக்கக்கூடும் என்றும் அந்நாட்டு ஆர்வலர்கள் கூறியுள்ளனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கு ஆதரவளிக்க வேண்டிய பல குழந்தை பராமரிப்பு சட்டங்கள் இருந்தாலும், அது பெரியவர்களுக்கு பொருந்தாது என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.



உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: