Home /News /trend /

தொடர்ந்து 14 வருடங்களாகக் கர்ப்பிணியாக இருந்த பெண் - இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

தொடர்ந்து 14 வருடங்களாகக் கர்ப்பிணியாக இருந்த பெண் - இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

பேட்டி ஹெர்னாண்டஸ் குடும்பம்

பேட்டி ஹெர்னாண்டஸ் குடும்பம்

Pregnant woman : அமெரிக்க பெண்மணி ஒருவர் தொடர்ந்து 14 வருடங்களாக கர்ப்பமாக இருந்துக்கொண்டு இருகிறார்.

  • News18 Tamil
  • 3 minute read
  • Last Updated :
  • international, IndiaAmericaAmericaAmericaAmerica
    அமெரிக்காவின் நார்த் கரோலினாவில் வசித்துவரும் பேட்டி ஹெர்னாண்டஸ் என்ற 40 வயது பெண்மணி தொடர்ந்து 14 ஆண்டுகளாகக் கர்ப்பமாக இருக்கிறார். இவருக்கு தற்போது வரை 16 குழந்தைகள் உள்ள நிலையில் தற்போது 17 குழந்தை வரவுக்கு எதிர்நோக்கி இருக்கிறார். 

    ஒரு பெண்ணால் தொடர்ந்து எத்தனை குழந்தைகள் பெற்றுக் கொள்ள முடியும்? எத்தனை ஆண்டுகள் கருத்தரிக்க முடியும்? 60, 70 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு வீட்டில் ஏழெட்டு குழந்தைகள் இருந்தனர். அது படிப்படியாகக் குறைந்து, தற்பொழுது இரண்டு குழந்தைகள் அல்லது ஒரு குழந்தை என்ற நிலை ஏற்பட்டுள்ளது. ஒரு சில தம்பதிகள் குழந்தை வேண்டாம் என்ற முடிவிலும் இருக்கிறார்கள்.

    இதற்குப் பொருளாதார ரீதியான காரணங்கள் இருந்தாலும் உடல் நலக் காரணங்களும் தவிர்க்க முடியாதது. மருத்துவம் எவ்வளவு நவீனமாக மாறி இருந்தாலும் பல்வேறு வசதிகள் இருந்தாலும் பிரசவம் என்பது ஒரு பெண்ணின் உடல் மற்றும் மன நிலையில் பெரிய அளவில் மாற்றத்தை ஏற்படுத்தும். ஒரு குழந்தை பிறந்த பிறகு, குழந்தை ஓரளவுக்கு வளரும் வரை பெண்களின் உடல்நிலை தேறுவதற்கு சில மாதங்கள் ஆவது ஆகும். எனவே அடுத்தடுத்து குழந்தை பெற்றுக் கொள்வது என்பது பலரும் விரும்பத்தகாத ஒரு சூழலாக இருக்கிறது.

    இந்நிலையில், அமெரிக்காவின் நார்த் கரோலினாவில் வசித்துவரும் பேட்டி ஹெர்னாண்டஸ் என்ற 40 வயது பெண்மணி தொடர்ந்து 14 ஆண்டுகளாகக் கர்ப்பமாக இருக்கிறார். அதாவது 14 ஆண்டுகளில் இவருக்கு 16 குழந்தைகள் பிறந்துள்ளன. தற்பொழுது 17வது  குழந்தையை எதிர்பார்த்துக் காத்திருக்கிறார். எந்த இடைவெளியும் இல்லாமல், அடுத்தடுத்து தொடர்ந்து கர்ப்பமாக இருந்துள்ளார்.

    ஏற்கனவே பதினாறு குழந்தைகளுக்கு அம்மாவாக இருக்கும் ஒரு பெண்ணுக்கு தன்னுடைய நாற்பதாவது வயதில் 17வது குழந்தை பிறக்க இருக்கிறது என்ற தகவல் அதிர்ச்சி இருக்கக் கூடியதாக இருக்கிறது.

    பேட்டியின் கணவனின் பெயர் கார்லோஸ். கணவர் மட்டும் தான்  குடும்பத்தில் சம்பாதிக்கிறார் மற்றும் அவர் ஒரு கிளீனிங் கம்பெனி நடத்தி வருகிறார். இவர் தன்னுடைய எல்லா குழந்தைகளுக்குமே ஆங்கில எழுத்தான ‘C’ என்ற எழுத்தில் ஆரம்பிக்கும்படி பெயர் வைத்திருக்கிறார். இந்தத் தம்பதிக்கு ஆறு ஆண் குழந்தைகளும் 10 பெண் குழந்தைகளும் உள்ளன. இவர்களில் மூன்று ட்வின்ஸ் இருக்கிறார்கள்.

    மூத்த குழந்தையின் பெயர் ஜூனியர் கார்லஸ் மற்றும் அவரின் வயது 14. கடைசியாகக் கடந்த ஆண்டு பிறந்த குழந்தையின் பெயர் கிளேடன். தொடர்ந்து இடைவெளியே இல்லாமல் கர்ப்பமாக இருப்பது பற்றி எப்படி உணர்கிறார் என்ற கேள்விக்கு  பேட்டி, ‘எனக்கு அடுத்ததாக ஒரு ஆண் குழந்தை பிறக்க இருக்கிறது. நான் 13 வாரம் கர்ப்பமாக இருக்கிறேன் என்று தெரிந்து கொண்டது முதல் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறேன். நான் கடந்த 14 ஆண்டுகளாகத் தொடர்ந்து கர்ப்பமாக இருக்கிறேன். தொடர்ந்து குழந்தை பெற்று இருக்கிறேன்.

    Also Read : தண்ணீருக்குள் ஹை ஹீல்ஸ் கேட்வாக்.. அசத்தும் நீச்சல் வீராங்கனை - வைரலாகும் வீடியோ!

    இதன் மூலம் நான் ஆசீர்வதிக்கப்பட்டவள் என்று உணர்கிறேன். அதுமட்டுமில்லாமல் என்னுடைய 17வது குழந்தையை வரவேற்பதில் நான் மிகவும் உற்சாகமாகவும் இருக்கிறேன் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்திருந்தார். கருத்தடை பற்றி இந்த தம்பதி யோசிக்கவே இல்லையாம். அதன் மீது நம்பிக்கை இல்லை என்றும் இது கடவுள் கொடுத்த வரம் என்றும் கூறுகின்றனர். அது மட்டும் அல்லாமல் இறைவன் இவர்களுக்கு மற்றொரு குழந்தையைக் கொடுக்க விரும்பினால் அதையும் ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாகவும் தெரிவித்தனர்.

    கூட்டுக் குடும்பமாக வாழ்வதற்குப் பலவிதமான வசதிகளும் வசிப்பதற்குப் பெரிய வீடும் தேவைப்படும் என்ற நிலையில் 16 குழந்தைகள் மற்றும் அப்பா அம்மா என்று 18 நபர்கள் எப்படி வசிக்கிறார்கள் என்பது எல்லோரது மனதிலும் தோன்றக்கூடிய கேள்விதான்!

    5 படுக்கையறைகள் உள்ள பெரிய வீட்டில் வசிக்கிறார்கள். இதில் குழந்தைகளுக்கு பங்க் பெட்ஸ் மற்றும் கிரிப் தொட்டில்கள் ஆகியவையும் உள்ளன. இவ்வளவு பெரிய குடும்பத்திற்காக 20 சீட்டுகள் உள்ள பஸ்ஸை இவர்கள் வாங்கியுள்ளனர். அதில் தான் தன்னுடைய குழந்தைகளைப் பள்ளிக்கு அழைத்துச் செல்கிறார் பேட்டி. ஒரு வாரத்திற்கு இவர்கள் உணவு இவர்கள் குடும்பத்திற்கு உணவுக்காக இந்திய மதிப்பில் 72 ஆயிரம் ரூபாய் செலவாகிறது என்று கூறியிருக்கிறார்கள்.
    Published by:Janvi
    First published:

    Tags: Pregnancy, Pregnant, Viral News

    அடுத்த செய்தி