Home /News /trend /

ஒரே வீட்டிலிருந்து மீட்கப்பட்ட 4 பெரிய மலைப்பாம்புகள்: வைரலாகும் வீடியோவால் நெட்டிசன்கள் அதிர்ச்சி

ஒரே வீட்டிலிருந்து மீட்கப்பட்ட 4 பெரிய மலைப்பாம்புகள்: வைரலாகும் வீடியோவால் நெட்டிசன்கள் அதிர்ச்சி

பெரிய கார்பெட் மலைப்பாம்புகள்

பெரிய கார்பெட் மலைப்பாம்புகள்

Trending Snake Video | ஆஸ்திரேலியாவில் ஒரு குடும்பம் வசிக்கும் வீட்டிற்குள் இரண்டு, மூன்று நாட்களுக்குள்  பெரிய கார்பெட் மலைப்பாம்புகள் வருகை தந்தது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தி உள்ளது.

பாம்பு என்றால் படையும் நடுங்கும் என்பது நாம் அனைவரும் அறிந்த ஒன்று. சிறிய பாம்புக்கே இப்படி என்றால் பெரிய மலைப்பாம்புகளை பார்த்தால்.. குலை நடுங்கி போகும் அல்லவா.! நம் வீட்டிற்குள் அல்லது வீட்டிற்கு வெளியே சிறிய சைஸ் பாம்பை பார்த்தால் கூட நம் முதுகுத்தண்டு சில்லிட்டு உறைந்து போகும்.

பெரிய பெரிய மலைப்பாம்புகள் உங்கள் வீட்டிற்குள் தொடர்ந்து படையெடுத்து நுழைந்து வந்தால் எப்படி இருக்கும் என்று கற்பனை செய்து பாருங்கள். ஆஸ்திரேலியாவில் ஒரு குடும்பம் வசிக்கும் வீட்டிற்குள் இரண்டு, மூன்று நாட்களுக்குள் பெரிய கார்பெட் மலைப்பாம்புகள் வருகை தந்தது அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தி உள்ளது.

ஆஸ்திரேலியாவின் புடெரிம் (Buderim) பகுதியில் உள்ள ஒரு வீட்டில் வசிப்பவர்கள், ஒரே நேரத்தில் 4 கார்பெட் மலைப்பாம்புகளை தங்கள் வீட்டில் எதிர்கொள்ள நேர்ந்த போது மிகவும் அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து அந்த வீட்டினர் பாம்பு பிடிப்பவர்களை வரவழைத்து பாம்புகளை வீட்டிலிருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுத்தனர். இது தொடர்பான வீடியோ சோஷியல் மீடியாக்களில் தற்போது வைரலாகி வருகிறது. சன்ஷைன் கோஸ்ட் ஸ்னேக் கேட்சர்ஸ் 24/7 (Sunshine Coast Snake Catchers 24/7) பகிர்ந்த கிளிப், ஒரு கம்பள மலைப்பாம்பு அமைதியாக வீட்டின் மேல்தளத்தின் மீது படுத்திருப்பதையும், மற்றொன்று அருகில் இருக்கும் நாற்காலிகள் வழியே ஊர்ந்து செல்வதையும் காட்டுகிறது.



இது தொடர்பான வீடியோவை ஷேர் செய்துள்ள சன்ஷைன் கோஸ்ட் ஸ்னேக் கேட்சர்ஸ் கூறி இருப்பதாவது, " ஒரு குடும்பம் வசிக்கும் வீட்டில் 4 பெரிய கார்பெட் மலைப்பாம்புகள்!" .. இது போல அடிக்கடி நிகழாது, ஆனால் குறிப்பாக மலைப்பாம்புகளின் இனப்பெருக்க காலத்தில் ஒரு வீட்டில் பல பாம்புகள் நுழைந்துவிட்டதாக கூறி வரும் புகார்களை நாங்கள் அடிக்கடி பெறுகிறோம்.

Read More : அது நம்மல நோக்கி தான் வருது ஓடுங்க.. விபரீதத்தில் முடிந்த குழந்தைகளுக்கான விளையாட்டு




Buderim உள்ள இந்த குறிப்பிட்ட இடத்தில் 2 அல்லது 3 நாட்களில் 4 கார்பெட் மலைப்பாம்புகளும், 2 வார காலப்பகுதியில் மொத்தம் 6 பாம்புகளும் இருந்தன" என்று கூறப்பட்டு உள்ளது. குறிப்பிட்ட வீட்டில் இருந்தது கார்பெட் மலைப்பாம்புகளை மீட்ட சன்ஷைன் கோஸ்ட் ஸ்னேக் கேட்சர்ஸை சேர்ந்த மீட்பு வீரர் ஸ்டூவர்ட் மெக்கென்சி அந்த வீடியோவில், தற்போது இங்கே காணப்படும் பாம்புகளில் ஒன்று ஆண் மற்றும் மற்றொன்று பெண் என்று கூறுகிறார். டெக்கின் மேல் இருக்கும் அவை இனப்பெருக்கத்திற்காக இணைவதைப் போல் தெரிகிறது என்றும் கூறுகிறார்.

பின்னர் மெக்கென்சி இரண்டு பாம்புகளையும் ஒவ்வொன்றாகப் பிடித்து தரையில் வைக்கிறார். அவற்றைக் கூர்ந்து கவனித்தபின் அவற்றை நீல நிறத் துணிப் பைக்குள் மாற்றி பின் காட்டுக்குள் விடும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. இது பார்ட் 1 வீடியோ, பார்ட் 2 வீடியோவில் அதே வீட்டில் இருந்து மேலும் 2 மலைப்பாம்புகள் மீட்கப்படும் காட்சிகள் இடம் பெற்றுள்ளன. ஒரே வீட்டில் 4 பெரிய கார்பெட் மலைபாம்புகள் மீட்கப்பட்ட வீடியோவை பார்த்த நெட்டிசன்கள் அதிர்ச்சியடைந்தனர். இந்த வீடியோக்கள் இன்ஸ்டா உள்ளிட்ட சோஷியல் மீடியாக்களில் வைரலாகி வருகிறது.

 
Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Snake, Trending, Trending Video, Viral Video

அடுத்த செய்தி