Home /News /trend /

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை... ரிசல்ட்டை பார்த்து ஷாக்கான உலக நாடுகள்! 

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை... ரிசல்ட்டை பார்த்து ஷாக்கான உலக நாடுகள்! 

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை

வாரத்தில் 4 நாட்கள் மட்டுமே வேலை

இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் வாரத்தில் 4 நாள் தான் வேலை செய்யும் திட்டம் குறித்த எந்த முடிவும் எடுக்காமல் உள்ள நிலையில்,  சில நாடுகள் மற்றும் நிறுவனங்கள் இதனை ஏற்கனவே பரிசோதனை செய்து வெற்றியும் அடைந்துள்ளன.

    பன்னாட்டு நிறுவனங்கள், ஐ.டி. கம்பெனிகள் பலவும் வாரத்தில் 5 நாட்கள் வேலை செய்யும் திட்டத்தை பின்பற்றி வருகின்றன. இதனையடுத்து வாரத்தில் 4 நாட்கள் வேலை, 3 நாட்கள் விடுமுறை என்ற திட்டத்தால் பணியாளர்களின் செயல்திறன் அதிகரிப்பதாக கருத்துக்கணிப்பு முடிவுகள் வெளியாகின. இதனையடுத்து சில நாடுகளில் உள்ள பெரு நிறுவனங்கள் வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டம் செயல்படுத்தின.

    இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவும் வாரத்தில் 4 நாள் தான் வேலை செய்யும் திட்டம் குறித்த எந்த முடிவும் எடுக்காமல் உள்ள நிலையில், சில நாடுகள் மற்றும் நிறுவனங்கள் இதனை ஏற்கனவே பரிசோதனை செய்து வெற்றியும் அடைந்துள்ளன. இதனையடுத்து கலிபோர்னியா மாகாணம் வாரத்தில் 4 நாள் தான் வேலை திட்டத்திற்கு விரைவில் சட்டம் இயற்றவும் உள்ளது. சிஸ்கோ மற்றும் யுனிலீவர் உள்ளிட்ட நிறுவனங்கள் இதை பரிசோதித்து வருகின்றன.

    சிஸ்கோ நிறுவனம் வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டத்தை கடந்த ஆண்டு முதலே தனது மனிதவளத் துறை ஊழியர்களைக் கொண்டு பரிசோதித்து வருகிறது. இதில் இரண்டு 8 வாரங்களை உள்ளடங்கிய சோதனை வேலை முறையை பரிசோதித்தது. அதாவது முதல் கட்டத்தில் வாரத்தில் 4 நாட்கள் மட்டும் தினமும் 10 மணி நேரம் வேலை செய்ய வேண்டும். இரண்டாம் கட்டத்தில் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் விடுமுறை அளிக்கப்படும். இந்த இரண்டு முறைகளிலும் பணியாளர்களை வேலை செய்ய வைத்து எந்த முறை சிறப்பாக செயல்படுகிறது என்பதை கண்டறிய, சிஸ்கோ நிறுவனம் ஊழியர்களிடம் வாக்கெடுப்பு நடத்த உள்ளது. 28 வாரங்கள் தொடர் பரிசோதனைக்குப் பிறகு இந்த புதிய வேலை திட்டத்துக்கு நல்ல முடிவுகள் கிடைத்துள்ளது. எதிர்பார்த்ததை விட இரண்டு மடங்கு ஊழியர்கள் நன்றாக வேலை செய்துள்ளது தெரியவந்துள்ளது.

    சிஸ்கோவின் தலைமை அதிகரி மற்றும் மக்கள், கொள்கை மற்றும் நோக்கம் அதிகாரியான ஃபிரான் கட்ஸூதாஸ் கூறுகையில், “நான் எதிர்பார்த்ததை விட இருமடங்கு பணியாளர்கள் சோதனையில் பங்கேற்றனர். அவர்களின் கருத்துக்களோடு, அனைத்து துறை தலைவர்களின் கருத்துக்களையும் கேட்டுப் பெற்று திட்டத்தை விரிவுபடுத்த உள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.

    பெல்ஜியம், ஐஸ்லாந்து, ஸ்காட்லாந்து மற்றும் வேல்ஸ், ஸ்வீடன், ஸ்பெயின் போன்ற நாடுகள் புதிய முறையைப் பரிசோதித்து வருகின்றன, மேலும் ஊழியர்களுக்கு வாரத்தில் நான்கு நாட்கள் வேலை செய்யும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன. பெல்ஜியத்தில், ஊழியர்கள் வாரத்தில் நான்கு அல்லது ஐந்து நாட்கள் வேலை செய்வதை அவர்களே தேர்வு செய்யலாம். இல்லையெல் வாரத்தில் சில நாட்கள் தேவைப்பட்டால் வேலை நேரத்தை குறைத்துக்கொள்ளலாம்.

    Also Read : கல்வி கடனை அடைக்க பெண் எடுத்த அதிர்ச்சி முடிவு... ஆனாலும் சோகம் தான்

    ஐஸ்லாந்தில் 2015 மற்றும் 2019 க்கு இடையில் வாரத்தில் 4 நாள் தான் வேலை என்ற திட்டத்தைப் பரிசோதித்தது. முதற்கட்டமாக 2500 ஊழியர்களுக்கு இத்திட்டம் செயல்படுத்தப்பட்டது. மேலும் வாரத்தின் வேலை நேரமும் 40 மணி நேரத்தில் இருந்து 35 மணி நேரமாக குறைக்கப்பட்டது. தற்போது ஐஸ்லாந்தில் இத்திட்டத்தின் கீழ் 86 சதவீத பணியாளர்கள் வேலை செய்து வருகின்றனர்.

    ஸ்காட்லாந்தில் செய்யப்பட்ட வாரத்தில் 4 நாள் தான் வேலைத் திட்ட பரிசோதனையில் சாதகமான முடிவு கிடைத்துள்ளது. விரைவில் அதை முழுமையாக அறிமுகம் செய்ய திட்டமிட்டு வருகின்றனர். ஸ்பெயின் நாடும் கடந்த 3 ஆண்டுகளாக வாரத்தில் 32 மணி நேரம் வேலை என்ற திட்டத்தை சோதனை முயற்சியாக செய்து வருகிறது. பணியாளர்களின் ஊதியத்தை குறைக்காமல் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக ஸ்பெயின் அரசாங்கம் தெரிவித்துள்ளது.

    ஐரோப்பாவிலேயே ஜெர்மனியில் தான் மிகவும் குறுகிய வேலை நேரம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, அதாவது அங்கு சராசரி வார வேலை நேரம் 34.2 மணி நேரமாகும். இருப்பினும் அங்கு வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. அங்குள்ள பல ஸ்டார்ட் அப்கள் இந்த யோசனையை பரிசோதித்து வருகின்றன. ஆனால் ஜப்பானில் உள்ள மிகப் பெரிய நிறுவனங்களும் வாரத்தில் 4 நாட்கள் வேலை திட்டத்தை அறிமுகம் செய்யலாமா என ஆலோசனை செய்து வருகிறார்கள்.
    Published by:Vijay R
    First published:

    Tags: Office, Viral

    அடுத்த செய்தி