ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

390 மில்லியன் ஆண்டுகள் பழமையான உயிரினம்... நமது ஆரம்பகால மூதாதையர் என தகவல்

390 மில்லியன் ஆண்டுகள் பழமையான உயிரினம்... நமது ஆரம்பகால மூதாதையர் என தகவல்

390 மில்லியன் ஆண்டுகள் பழமையான உயிரினம்

390 மில்லியன் ஆண்டுகள் பழமையான உயிரினம்

ஆராய்ச்சியாளர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட புதைபடிவத்தின் ஸ்கேன் மூன்று அரை வட்டக் கால்வாய்களை வெளிப்படுத்தியது.

  பரிணாமம் - மனிதர்கள் தத்தம் வாழ்க்கையை தொடங்கிய இடத்திலிருந்து அவர்களை வெகுதூரம் கொண்டு வந்துள்ளது. சுருக்கமாக பரிணாமம் என்றால் - பல தலைமுறைகளாக ஒரு இனத்தின் குணாதிசயங்களில் ஏற்படும் மாற்றமே ஆகும். அப்படியான பரிமாண வளர்ச்சியின் கீழ் கிட்டத்தட்ட எல்லாமே மாறிவிட்டன. எப்படி தண்ணீரில் வாழ்ந்த மீன்கள் தரையில் நடமாடும் நான்கு கால் பாலூட்டிகளாக மாறியதோ, அப்படி!

  ஆம்! கேட்பதற்கு விசித்திரமாகத் தோன்றினாலும், இன்று நாம் பார்க்கும் பல நான்கு கால் பாலூட்டிகள் மீன்களிலிருந்து வந்தவைகளே ஆகும். இந்த உண்மையின் அடிப்படையில், இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட மற்ற நான்கு கால் விலங்குகளில் மிகவும் பழமையான ஒரு உயிரினத்தை தான் ஆராய்ச்சியாளர்கள் தற்போது கண்டுபிடித்துள்ளனர்.

  ஜப்பானில் உள்ள ரிக்கேன் க்ளஸ்டர் ஃபார் பயனீரிங் ரிசர்ச் (RIKEN Cluster for Pioneering Research - CPR) ஆராய்ச்சியாளர்கள், மனிதர்களின் ஆரம்பகால "மூதாதையர்களில் ஒருவராக" நம்பப்படும் பழங்கால மீன் போன்ற ஒரு உயிரினத்தின் முதுகெலும்புகளை கண்டறிந்துள்ளனர். 'பேலியோஸ்பாண்டிலஸ் குன்னி' (Palaeospondylus gunni) என்று அழைக்கப்படும் இந்த உயிரினம் 'ஈல்' போன்றது மற்றும் சுமார் 390 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து உள்ளது.

  Also Read : ஆயிரத்தில் ஒருவரால் மட்டுமே இந்த புகைப்படத்தில் இருக்கும் யானை கண்டுபிடிக்க பிடியும்... நீங்கள்?

  பேலியோஸ்பாண்டிலஸ், முதன்முதலில் 1890ல் ஸ்காட்லாந்தில் கண்டுபிடிக்கப்பட்டது, ஆனால் குறிப்பிட்ட உயிரினத்தின் நீளம் வெறும் 5 செமீ மட்டுமே இருந்ததால் அதை எவல்யூஷ்னரி ட்ரீ-இல் (evolutionary tree) வைப்பது ஆராய்ச்சியாளர்களுக்கு மிகவும் கடினமாக இருந்தது. இதன் விளைவாக, மீன் போன்ற இந்த உயிரினத்தின் மண்டை ஓட்டை புனரமைத்து உருவாக்குவதிலும் ஆராய்ச்சியாளர்களுக்கு சிக்கல் இருந்தது. இதற்காக இந்த ஆராய்ச்சியாளர்கள் குழு மிகவும் சக்திவாய்ந்த, ஹை ரெசல்யூஷன் கொண்ட மைக்ரோ-சிடி ஸ்கேன்களைப் பயன்படுத்தியது மற்றும் புதைபடிவத்தின் விஷூவல் ரெப்ரெசென்ட்டேஷனை செதுக்கியது.

  "மைக்ரோ-சிடி ஸ்கேன்களுக்கான சிறந்த மாடல்களைத் தேர்ந்தெடுப்பது மற்றும் புதைபடிவத்தை கவனமாக கையாள்வது போன்றவைகளின் விளைவாக ஸ்கேன்களின் ரெசல்யூஷனை எங்களால் மேம்படுத்த முடிந்தது. அதிநவீன தொழில்நுட்பமாக இல்லாவிட்டாலும் கூட, இந்த தயாரிப்புகள் நிச்சயமாக எங்கள் சாதனையில் ஒரு பங்களிப்பை வழங்கின” என்று குறிப்பிட்ட ஆய்வின் முதன்மை ஆசிரியர் ஆன தட்சுயா ஹிராசாவா ஒரு அறிக்கையில் தெரிவித்து உள்ளார்.

  ஆராய்ச்சியாளர்கள் குழுவால் உருவாக்கப்பட்ட புதைபடிவத்தின் ஸ்கேன் மூன்று அரை வட்டக் கால்வாய்களை வெளிப்படுத்தியது, அவை தாடைகளுடன் கூடிய முதுகெலும்புகளின் உள்-காது உருவ அமைப்புடன் ஒத்திருந்தன. இதன் வழியாக பேலியோஸ்பாண்டிலஸ் ஆனது தாடை மற்றும் தாடை இல்லாத மீன்களுடன் அம்சங்களைப் பகிர்ந்து கொண்டது என்ற முந்தைய நம்பிக்கையைச் சுற்றி இருந்த குழப்பம் நீங்கியது. இருப்பினும், மிகவும் இந்த கண்டுபிடிப்பின் மிகவும் மர்மமான வெளிப்பாடு என்னவென்றால், பாலியோஸ்பாண்டிலஸ் புதைபடிவமானது பற்கள் மற்றும் தோல் எலும்புகளுடன் ஒருபோதும் தொடர்புபடுத்தப்படவில்லை, இது நமது மூதாதையர் சங்கிலியின் மற்றொரு பகுதியான டெட்ராபோட் மார்ஃபில் (tetrapod morphs) உள்ள பொதுவான பண்புகளாகும்.

  இந்த மர்மமான கண்டுபிடிப்பு குறித்து உரையாற்றிய ஹிராசாவா, குறிப்பிட்ட அம்சங்கள் இல்லாதது பரிணாம வளர்ச்சிக்கான இழப்பாக இருந்திருக்கலாம் அல்லது வளர்ச்சியின் இடையிலேயே இது "உறைந்திருக்கலாம்" என்று கூறி உள்ளார். "இருப்பினும், இந்த ஹீட்டோரோக்ரோனிக் பரிணாமம் (heterochronic evolution) ஆனது மூட்டுகள் போன்ற புதிய அம்சங்களின் வளர்ச்சியை எளிதாக்கியிருக்கலாம்" என்று ஹிராசாவா குறிப்பிட்டுள்ளார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Trends, Viral