ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

இளமையாக இருந்த 37 வயது நபருக்கு ஆர்டர் டெலிவரி செய்ய மறுத்த சூப்பர் மார்க்கெட்!

இளமையாக இருந்த 37 வயது நபருக்கு ஆர்டர் டெலிவரி செய்ய மறுத்த சூப்பர் மார்க்கெட்!

மாதிரிப்படம்

மாதிரிப்படம்

37 வயதான நபர் ஒருவர் பார்க்க சிறுவன் போல் இருந்ததால் சூப்பர் மார்க்கெட் ஒன்று அவர் ஆர்டர் செய்த உணவு மற்றும் மளிகை பொருள்களுக்கான டெலிவரியை தர மறுத்த சம்பவம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ஆண்டுகள் பல கடந்தோடினாலும், பார்க்க என்றும் 16 போல் இருக்கும் இளமையான தோற்றம் எல்லாருக்கும் வாய்ப்பு கிடையாது. உடற்பயிற்சி, உணவு முறை, மன ஆரோக்கியம், மரபணு போன்றவற்றால் ஒருசிலருக்கு மட்டுமே அது சாத்தியமாகிறது. பொதுவாக எத்தனை வயதானாலும் என்றும் இளமையாக தோற்றமளிப்பதை வரம் என்று தான் சொல்வார்கள், ஆனால் இங்கிலாந்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு இளமையாக காட்சியளிப்பது பெரும் சங்கடத்திற்கு வழிவகுத்துள்ளது.

ஆம், இங்கிலாந்தில் உள்ள வில்லியம் வில்போர்ட் என்ற 37 வயது நபர் நீரிழிவு மற்றும் சிஸ்டிக் ஃபைப்ரோஸிஸால் பாதிக்கப்பட்டு, அதற்காக சிகிச்சை பெற்று வருகிறார். தனியாக வசித்து வரும் அவர், தனது மருத்துவம் மற்றும் பிற செலவினங்களுக்காக அரசிடம் இருந்து உதவித்தொகை பெற்று வாழ்ந்து வருகிறார். தன்னிடம் இருந்த கடைசி பணத்தை எல்லாம் வைத்து, மளிகை பொருள்களை விநியோகம் செய்யும் சைன்ஸ்பரியில் (sainsbury) என்ற சூப்பர் மார்க்கெட்டில் ஆன்லைன் மூலம் சில உணவு பொருட்களை ஆர்டர் செய்துள்ளார்.

ஆர்டர்களை எல்லாம் எடுத்துக்கொண்டு வந்த டெலிவரி ஏஜெண்ட், கதவை திறந்த வில்லியம் வில்போர்ட்டை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். ஏனெனில் அவர் பார்க்க சிறுவனைப் போல் இருந்துள்ளார். இதனால் அந்த டெலிவரி ஏஜெண்ட் வில்போட்டை அவரது வயதை அறிந்து கொள்ளக்கூடிய அடையாள அட்டை ஏதாவது இருந்தால் காண்பிக்கும் படி கேட்டுள்ளார்.

ReadMore : மின்சார ரயிலில் முடியை பிடித்து சரமாரியாக அடித்து கொண்ட பெண்கள் - வைரல் வீடியோவின் பின்னணி

டெலிவரி ஏஜெண்டின் இந்த கோரிக்கை வில்லியம் வில்போர்ட்டை கடுமையாக குழப்பியுள்ளது. ஏனெனில் அவர் “மதுபானங்கள், சிகரெட் என சட்டத்திற்கு புறம்பான எந்த பொருளையும் வாங்கவில்லையே.. அதன் பின்னர் ஏன் என் வயது சம்பந்தமான ஆவணத்தை காண்பிக்க வேண்டும்” எனக்கேட்டுள்ளார். ஆனால் வில்லியமின் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாத டெலிவரி ஏஜெண்ட் பார்க்க சிறுவன் போல் இருப்பதால் தங்களது நிறுவன கொள்கையின் படி, வயதுக்கான அடையாள சான்றிதழை காண்பித்தாக வேண்டும் என கேட்டுள்ளார்.

ஆனால் வயது சம்பந்தமான எந்த ஒருபொருளையும் தான் ஆர்டர் செய்யவில்லை என விளக்கிய வில்லியம், தனது உடல்நிலை குறித்தும் தன்னிடம் இருந்த கடைசி பணம் மொத்தத்தையும் இதற்காக செலவிட்டுள்ளதையும் எடுத்துரைத்துள்ளார். சூப்பர் மார்க்கெட் நிர்வாகம் அவருக்கு உணவுப்பொருட்களை டெலிவரி செய்ய மறுத்துள்ளது. மேலும் அவருடைய பணம் திரும்ப வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளது. இதனால் சமாதானம் அடைந்த வில்லியம் பணம் உடனே கிடைத்துவிடும், வேறு கடையில் பொருட்களை வாங்கிக்கொள்ளலாம் என நினைத்துள்ளார்.

ஆனால் சூப்பர் மார்க்கெட் பணத்தை ரீபண்ட் செய்ய மூன்று முதல் ஐந்து நாட்கள் ஆகும் என மின்னஞ்சல் மூலமாக அவருக்கு தெரிவித்துள்ளது. அரசு கொடுக்கும் உதவித்தொகையில் வாழ்ந்து வந்த வில்லியம், தன்னிடம் இருந்த கடைசி பணத்தையும் சூப்பர் மார்க்கெட் வசம் ஒப்படைத்துவிட்டதால் உணவு இல்லாமல் திண்டாடும் நிலைக்குத் தள்ளப்பட்டார். ஸ்கிராப் உணவுகளை சாப்பிடும் அளவிற்கு பரிதாபமான நிலைக்குத் தள்ளப்பட்ட வில்லியம் வில்போர்ட்டின் நிலை சோசியல் மீடியா மற்றும் ஊடகங்கள் மூலமாக வெளிச்சத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனால் கடும் விமர்சனத்திற்குள்ளான சைன்ஸ்பரி சூப்பர் மார்க்கெட் அவரிடம் மன்னிப்பு கோரி அறிக்கை ஒன்றினை வெளியிட்டுள்ளது. வில்லியம் ஆர்டர் செய்த உணவுப் பொருட்களை டெலிவரி செய்ய மறுப்பு தெரிவிக்கப்பட்டது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published by:Lilly Mary Kamala
First published:

Tags: Trending, Viral