81 வயது முதியவராக வேடமிட்டு வெளிநாடு தப்ப முயற்சித்த 32 வயது இளைஞர்! டெல்லி விமானநிலையத்தில் கைது

தீவிர விசாரனையில் அம்ரிக் சிங் என்ற முதியவர் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து நியூயார்க் செல்ல திட்டமிட்டதும் அம்பலமானது.

81 வயது முதியவராக வேடமிட்டு வெளிநாடு தப்ப முயற்சித்த 32 வயது இளைஞர்! டெல்லி விமானநிலையத்தில் கைது
32 வயது இளைஞர் 81 வயது முதியவராக வேடமிட்டு விமானநிலையத்தில் பிடிபட்டார்..!
  • News18
  • Last Updated: September 10, 2019, 9:06 PM IST
  • Share this:
திரைப்படத்தில் வருவதைபோல, முதியவர்போல் வேடமிட்டு நியூயார்க் செல்ல முயன்ற இளைஞர் டெல்லியில் பிடிபட்டுள்ளார்.

டெல்லி இந்திராகாந்தி விமான நிலையத்திற்கு வந்த முதியவர் ஒருவரை, அதிகாரிகள் சோதனையிட்டனர். அப்போது பாஸ்போர்ட்டில் குறிப்பிடப்பட்டிருந்த வயதுக்கும் அவரது தோற்றத்துக்கும் வேறுபாடு இருந்ததைக் கண்டு சந்தேகம் அடைந்தனர்.

எனவே அவரை அழைத்து சென்று விசாரணை நடத்தியதில், அந்த நபர் 32 வயது இளைஞர் என்பதும், குஜராத் மாநிலம் அகமதாபாத்தை சேர்ந்த ஜெயேஷ் படேல் என்பதும், தெரியவந்தது. அவரை சோதனை செய்தபோது அணிந்திருந்த மூக்குக் கண்ணாடி பவர் இல்லாத கிளாஸாக இருந்துள்ளது. அதோடு உண்மையான உடல் அடையாளங்களும் பார்ஸ்போர்ட் அடையாளங்களும் வேறுவிதமாக இருந்ததே அவரைக் காட்டிக் கொடுத்துள்ளது.


அதன் பிறகான தீவிர விசாரனையில் அம்ரிக் சிங் என்ற முதியவர் பெயரில் போலி பாஸ்போர்ட் தயாரித்து நியூயார்க் செல்ல திட்டமிட்டதும் அம்பலமானது.முதியவர்போல தோற்றமளிக்க, வெள்ளை நிற டை அடித்து, கனமான மூக்குக் கண்ணாடி அணிந்து வீல் சேரில் விமான நிலையம் வந்துள்ளார். இதையடுத்து ஆள்மாறாட்டம் செந்து வெளிநாடு செல்ல முயன்றதாக படேல் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.பார்க்க :

காய்கறி சந்தை போல் தினமும் 30 ஆயிரம் இட்லி தயாரித்து விற்கப்படும் சந்தை குறித்து கேள்விப்பட்டதுண்டா?


First published: September 10, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்