’பக்கத்து வீட்டு நாயுடன் கள்ளத்தொடர்பு’ - செல்ல நாயை ரோட்டில் அனாதையாக விட்டுச் சென்ற நபர்!

’பக்கத்து வீட்டு நாயுடன் கள்ளத்தொடர்பு’ - செல்ல நாயை ரோட்டில் அனாதையாக விட்டுச் சென்ற நபர்!
  • Share this:
கேரளாவில் நாய் ஒன்று கள்ளத்தொடர்பில் இருந்ததாக கூறி, அதனை சாலையில் அனாதையாக விடப்பட்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.

மூன்றே வயதான வெள்ளை பொமேரியன் நாய் ஒன்று திருவனந்தபுரத்தில் உள்ள மார்க்கெட் பகுதியில் சாலையில் இங்கும் அங்கும் செய்வதறியாது ஓடிக்கொண்டிருந்தது.

இதைப்பார்த்த விலங்குகள் நல ஆர்வலர் ஷமீன், அந்த நாயை மீட்டார். அப்போதுதான் அவருக்கு அதிர்ச்சியான செய்தி ஒன்று கண்ணில் பட்டது.


அந்த நாயின் கழுத்தில் கட்டப்பட்டிருந்த பட்டையில் ஒரு தூண்டு தாளில் மலையாளத்தில் எழுதப்பட்டிருந்ததை ஷமீன் படித்தார்.

அதில், ”இந்த நாய் நன்றாக இருக்கும். நன்கு பழகும். அதிக உணவு எடுத்துக்கொள்ளாது. பெரும்பாலும், பால், பிஸ்கட், முட்டை சாப்பிடும். ஒரு நோயும் இல்லை. 5 நாளைக்கு ஒருமுறை குளிப்பாட்டப்படும். ஒரே குறை என்னவென்றால் குரைக்கும். ஆனால் கடந்த மூன்றாண்டில் யாரையும் கடித்ததில்லை. இந்த நாய் பக்கத்து வீட்டு நாயுடன் கள்ளத்தொடர்பு வைத்திருந்ததால் இதை கைவிடப்படுகிறது” என்று எழுதப்பட்டிருந்தது.

இது குறித்து தெரிவித்த ஷமீன், பொதுவாக நாய்கள் நோய்வாய்ப்பட்டாலோ, அடிப்பட்டாலோ அதன் எஜமானர்களால் கைவிடப்படும். ஆனால் கள்ளத்தொடர்பை காரணமாக கூறி கைவிடப்படுவது இதுதான் முதல் முறை என்கிறார்.

See Also:

First published: July 24, 2019
மேலும் பார்க்க
அடுத்து செய்திகள்