ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மாடி வீட்டில் விவசாயம் செய்து வருடம் 70 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் நபர்!

மாடி வீட்டில் விவசாயம் செய்து வருடம் 70 லட்சம் ரூபாய் வருமானம் ஈட்டும் நபர்!

மாடி வீட்டில் விவசாயம்

மாடி வீட்டில் விவசாயம்

இயற்கை முறையில் விவசாயம் செய்யும் அந்த வீட்டில் ஸ்ட்ராபெரி, காலிஃப்ளவர், வெண்டைக்காய் மற்றும் பல விதமான காய்கறிகளும் பல வகைகளும் பயிரிடப்பட்டு வருகிறது.

 • Trending Desk
 • 2 minute read
 • Last Updated :
 • Tamil Nadu, India

  காய்கறிகளை விளைவித்து ஒருவர் வருடத்திற்கு 70 லட்சத்திற்கும் மேல் வருமானம் பெறுகிறார் என்று கூறினால் உங்களால் நம்ப முடியுமா? ஆனால் அது உண்மைதான்! உத்தரபிரதேசத்தை அந்த மனிதரின் வீடியோவானது இணையத்தில் வைரலாகி அனைவராலும் பகிரப்பட்டு வருகிறது.

  ரம்வீர் சிங் என்று பெயருடைய உத்தர பிரதேசத்தை சேர்ந்த அந்த மனிதர் தன்னுடைய மூன்றடுக்கு மாடி வீட்டில் காய்கறிகளை பயிரிட்டு விளைவித்து வருகிறார். இதில் சுவாரசியம் என்னவெனில் அவர் மண் மற்றும் பூச்சிக்கொல்லிகள் போன்ற வேதிப்பொருள்கள் இல்லாமலேயே விவசாயத்தை செய்து வருகிறார். இயற்கை முறையில் விவசாயம் செய்யும் அந்த வீட்டில் ஸ்ட்ராபெரி, காலிஃப்ளவர், வெண்டைக்காய் மற்றும் பல விதமான காய்கறிகளும் பல வகைகளும் பயிரிடப்பட்டு வருகிறது. தன்னுடைய வீட்டில் ஒட்டுமொத்தமாக பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட செடிகளை அவர் வளர்த்து வருகிறார்.

  மேலும் இவருக்கு சொந்தமாக விம்பா ஆர்கனிக்ஸ் அண்ட் ஹைட் ரோபோனிக்ஸ் என்றும் நிறுவனமும் உள்ளது அதன் மூலம் அவருக்கு வருடத்திற்கு 70 லட்சத்திற்கும் மேல் வருமானம் கிடைக்கிறது. அவர் வெளியிட்டுள்ள இந்த வீடியோவில் தன்னுடைய மூன்று அடுக்குமாடி வீடு முழுவதையும் ஹைட்ரோபோனிக்ஸ் என்னும் முறையில் விவசாயம் செய்து வருகிறார். இந்த முறையில் விவசாயம் செய்வதற்கு மண் தேவைப்படாது. மேலும் சாதாரண முறையில் விவசாயம் செய்வதை விட 90% நீரை இந்த முறையில் சேமிக்க முடியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

  இந்த முறையை பயன்படுத்தி விவசாயம் செய்ய விரும்பும் அனைவருக்கும் அவர் உதவி வருகிறார். வீடியோ வெளியிடப்பட்டு சில மணி நேரங்களிலேயே மிக அதிக அளவில் வைரல் ஆனது. வீடியோவை பதிவிட்டு அதனுடன் வாவ்! உத்திர பிரதேசத்தை சேர்ந்த இந்த மனிதர் தன்னுடைய மூன்றடுக்கு மாடி வீட்டில் காய்கறிகளை விளைவித்து வருடத்திற்கு 70 லட்சம் வருமானம் பெறுகிறார்” என்ற வாசகங்களும் இணைத்துள்ளனர். இதை பார்த்த இணையவாசிகள் பலரும் அவரை பாராட்டி கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

  நவம்பர் மூன்றாம் தேதி பதிவேற்றம் செய்யப்பட்ட இந்த வீடியோ தற்போது வரை ஒரு மில்லியனுக்கும் அதிகமான பார்வைகளை பெற்றுள்ளது. அதைப் பார்த்த இணையவாசி ஒருவர் ”அற்புதம்! மிக புதுமையான ஒரு முயற்சியாகவும் ஊக்கப்படுத்துவதாகவும் உள்ளது” என்று தனது பாராட்டை தெரிவித்துள்ளார். மற்றொருவர் ”ஓ கடவுளே இதை பார்ப்பதற்கு பெருமையாக உள்ளது. மேலும் இந்த இடம் எனது சொந்த ஊரில் தான் உள்ளது. என்னுடைய சகோதரர்கள் ஆறு நாட்களுக்கு முன் தான் இந்த இடத்தை சென்று பார்த்து வந்தனர்” என்று இரண்டாம் நபர் பதிவிட்டுள்ளார். “அந்த இடத்தை அவர்கள் பராமரிக்கும் விதத்தைப் பார்ப்பதற்கே அற்புதமாக உள்ளது” என்று தனது ஆச்சரியம் கலந்த பாராட்டை மூன்றாம் நபர் தெரிவித்துள்ளார்.

  Also Read : அடிதடி... பறந்த சூட்கேஸ்.. விமான நிலையத்தில் ரகளை செய்த பெண்.!

  இதைப் பற்றி ரம்வீர் சிங்கிடம் கேட்ட பொழுது ”தன்னுடைய மாமா ஒருவர் புற்றுநோயால் 2009 ஆம் ஆண்டு பாதிக்கப்பட்டதாகவும், அவரை பரிசோதித்ததில் வேதிப்பொருட்கள் கலந்த காய்கறிகளை உண்பதால் புற்று நோய் ஏற்பட்டதாகவும் கண்டுபிடிக்கப்பட்டது இதைக் கேட்டவுடன் அதிர்ச்சியடைந்த ரம்வீர்சிங் தன்னுடைய குடும்பத்தாருக்கு இனிமேலும் இதுபோன்று ஆபத்துக்கள் நேராமல் பாதுகாக்க எண்ணினார்.

  இதற்கு முன்னர் முழு நேர பத்திரிகையாளராக இருந்த அவர் தன்னுடைய வேலையை விட்டுவிட்டு இயற்கை விவசாயத்தில் தனது முழு கவனத்தையும் செலுத்தினார். தன்னிடம் இருந்த பூர்வீக சொத்தில் விவசாயம் செய்ய ஆரம்பித்த அவர் முழுக்க முழுக்க இயற்கை முறையில் விவசாயத்தை மேற்கொண்டு வருகிறார். இவரின் பூர்வீக நலமானது 40 கிலோமீட்டர் தொலைவில் இருப்பதாகும் தினமும் தன்னுடைய வீட்டில் இருந்து 40 கிலோமீட்டர் சென்று விவசாய நிலத்தை பார்வையிட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

  Published by:Vijay R
  First published:

  Tags: Trends, Viral