Marumagaley Video | புகழ் பெறுவதற்காக இப்படி செய்துவிட்டோம் - மருமகளே வைரல் வீடியோ விவகாரத்தில் சிறுமி வருத்தம்

மாதிரி படம்

சமூக வலைதளத்தில் 2K கிட்ஸ் வீடியோக்கள் என சிறுவன்,சிறுமியின் வீடியோ வைரலாக பரவிய விவகாரத்தில் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு விசாரணை நடத்தி நடவடிக்கை எடுத்துள்ளது.

  • Share this:
    சமூக வலைதளத்தில் 2k கிட்ஸ் வீடியோ என்ற 15 வயதுடைய சிறுவர் சிறுமியர் வீடியோக்கள் வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோக்களை பார்க்கும் சிறுவர், சிறுமியர் தவறான உதாரணமாக எடுத்து பாதிக்கப்படலாம் என்ற அடிப்படையில் தமிழ்நாடு குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு கடலூர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    வீடியோக்களின் ஐபி முகவரி மூலமாக சைபர் போலீசாரின் உதவியுடன் சிறுவர், சிறுமியர் இருக்கும் இடத்தை குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு அதிகாரிகள் கண்டுபிடித்தனர். கடலூரில் இருப்பதாக அறிந்து கடலூர் காவல் கண்காணிப்பாளர் உதவியுடன் சம்பந்தப்பட்ட சிறுமியின் வீட்டுக்கு சென்றுள்ளனர்.

    பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றம் பிரிவின் எஸ்பி ஜெயஸ்ரீ மற்றும் தமிழ்நாடு குழந்தை உரிமைகள் பாதுகாப்பு ஆணையம் நிர்வாகி சரண்யா மற்றும் கடலூர் மாவட்ட அதிகாரிகள் என 10 மேற்பட்டோர் சிறுமி மற்றும் சிறுமியின் பெற்றோரிடம் 3 மணி நேரமாக விசாரணை நடத்தி, அவர்களை எச்சரித்துள்ளனர்..
    மேலும் சிறுமியிடம் மேற்கொண்ட விசாரணையில் சிறுவனின் தூண்டுதல் பேரிலே புகழ் பெறுவதற்காக இதை செய்ததாகவும் தெரிவித்துள்ளார்.

    Also Read : மணமகள் கையால் தாலி கட்டிக் கொண்ட மணமகன் - கடுமையாக விமர்சித்த நெட்டிசன்கள்!

    வீடியோவில் வரும் சிறுமி பாதிப்பை உணர்ந்து, தான் செய்த தவறுக்கு மன்னிப்பு கேட்டு வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார். சிறுமி மன்னிப்பு கேட்கும் வீடியோவும் தற்போது பலராலும் வரவேற்கப்படுகிறது. அதே நேரத்தில் சிறுவன் வீட்டிலும் குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு அதிகாரிகள், காவல்துறை அதிகாரிகள் உடன் சென்று அறிவுரை வழங்கியுள்ளனர்.

    Also Read : இந்த பழைய ஒரு ரூபாய் நோட்டு வைத்திருந்தால் உங்களால் ரூ.45,000 சம்பாதிக்க முடியும்!

    ஆன்லைன் மோகத்தில் அதிக லைக்குகள் கிடைக்கும் எனவும், பிரபலமாகலாம் என்ற ஒரு ஆசையில் சிறுவர் சிறுமியர் இதுபோன்று வீடியோக்களை வெளியிட்டு வருகின்றனர். இதனை பெற்றோர்கள் கண்காணித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தைகள் உரிமை பாதுகாப்பு குழு அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர். இல்லையெனில் இதுபோன்று பாதிக்கப்படும் சிறுவர்-சிறுமியர்களை காப்பகத்தில் அழைத்து நல்வழிப்படுத்தவும் சட்ட சட்ட வழிவகை உள்ளதையும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்
    Published by:Vijay R
    First published: