காதலுக்கு கண் இல்லை என்பார்கள். ஏனென்றால் தங்கள் காதலுக்காக காதலர்கள் எந்த எல்லைக்கு வேண்டுமானாலும் செல்வார்கள். காதல் குறித்த பல்வேறு சுவாரஸ்யமான நிகழ்வுகளை நாம் கேள்விப்பட்டு இருப்போம். இதுப்போன்ற ஒரு நிகழ்வு தான் அமெரிக்காவில் அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. டிக்டாக்கில் மிகவும் ஆக்டிவாக இருக்கும் அந்த பெண் தனது காதல் மற்றும் வாழ்க்கை குறித்த சுவாரஸ்யமான நிகழ்வுகளை பகிர்ந்துள்ளார்.
தி சன் இணையதளத்தின் அறிக்கையின்படி, அமெரிக்காவின் நியூயார்க்கில் வசிக்கும் கிறிஸ்டில், டிக்டாக்கில் மிகவும் ஆக்டிவாக இருக்கிறார். அவர் சமீபத்தில் ஒரு டிக்டாக் வீடியோவைப் பகிர்ந்துள்ளார், அதில் அவர் தனது வாழ்க்கையைப் பற்றி கூறினார். வாழ்க்கையைப் பற்றி தெரிந்துகொள்வதற்கு முன், 29 வயதான கிரிஸ்டலுக்கு 19 வயது மகள் உள்ளததை பார்த்து மக்கள் ஆச்சரியப்படுகிறார்கள் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். இதை சமூக வலைதளங்களில் பார்த்து அனைவரும் திகைத்து போனார்கள்.
உண்மையில், கிரிஸ்டல் 2 குழந்தைகளின் குழந்தைகளை பார்த்து கொள்ளும் பராமரிப்பாளராக பணிபுரிந்ததாக கூறினார். ஆனால் அவர் அந்த குழந்தைகளின் தந்தையை அதாவது விவாகரத்து செய்யப்பட்ட அவர்களின் முதலாளியை காதலித்தார். அதன் பிறகு அவர் தன்னை விட 20 வயது மூத்த காதலரை திருமணம் செய்து கொண்டார், அதன் பிறகு அவர் அவர்களின் 2 குழந்தைகளுக்கும் தாயானார். அந்த நபரின் மகளுக்கு 19 வயதாகிறது, ஆனால் கிரிஸ்டல் அவளை தனது சொந்த மகளைப் போலவே நடத்துகிறார், மேலும் பல வீடியோக்களை Instagram மற்றும் Tiktok இல் பகிர்ந்து வருகிறார்.

29 வயது தாய், 19 வயது மகள்!
திருமணத்திற்கு பின் கிரிஸ்டல் தனது கணவரின் இரண்டு குழந்தைகளையும் அன்பாக பார்த்து கொள்கிறார். தற்போது இவர்கள் அனைவரும் ஒரே குடும்பாக வாழ்ந்து வருகின்றனர். இருப்பினும், மக்கள் சமூக ஊடகங்களில் கிறிஸ்டலை கேலி செய்து வருகின்றனர்.. பணத்துக்காகவே அந்த நபரை கிரிஸ்டில் திருமணம் செய்து கொண்டதாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.