Home /News /trend /

29 பேரா.. சங்கடமா இருக்காது?.. கின்னஸ் சாதனைக்காக அரங்கேறிய சம்பவம்! 

29 பேரா.. சங்கடமா இருக்காது?.. கின்னஸ் சாதனைக்காக அரங்கேறிய சம்பவம்! 

வைரல் வீடியோ

வைரல் வீடியோ

Viral Video | இணையத்தில் வைரலாகி வரும் கின்னஸ் சாதனை தொடர்பான வீடியோ ஒன்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • inter, Indiachinachinachinachina
    ஒன்றுமே இல்லாத விஷயத்தை ஓவராக அலட்டிக்கொள்ளும் நபர்களை பார்த்து, “அப்படி என்ன சாதனை செஞ்சிட்ட” என கிண்டலாக கேட்டிருப்போம். தற்போது இணையத்தில் வைரலாகி வரும் கின்னஸ் சாதனை தொடர்பான வீடியோ ஒன்று அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.

    உலக சாதனை புத்தகத்தில் இடம் பெற வேண்டும் என்பதற்காக மக்கள் மெய் சிலிர்க்க வைக்கும் சாகங்கள் முதல் விநோதமான செயல்கள் வரை பலவற்றை முயற்சித்து பார்க்கின்றனர். நீளமாக மீசை மற்றும் நகம் வளர்ப்பது,மலைக்க வைக்கும் அளவிற்கு உணவு உண்பது என வினோதமான பல சாதனைகளை பார்த்திருப்போம். ஆனால் சீனாவைச் சேர்ந்த 29 பேர் ஐந்தே சீட்களைக் கொண்ட மினி வாகனத்தில் ஏறி அமர்ந்து சாதனை படைத்துள்ளனர்.

    செப்டம்பர் 5, 2014 அன்று சீனாவைச் சேர்ந்த இளம் பெண்கள் சிலர் ஒன்றிணைந்து இந்த சாதனையை நிகழ்த்திக்காட்டியுள்ளனர். 5 சீட்களை கொண்ட மினி கூப்பர் காரில் 29 பேர் அமர்ந்து கின்னஸ் சாதனை படைத்துள்ளனர். 5 பேர் உட்காரவே கஷ்டமா இருக்குமே, அதில் 29 பேர் சங்கடமாக இருக்காதா? என நீங்கள் யோசிக்கலாம். ஆனால் அவர்கள் கின்னஸ் சாதனை நிகழ்த்தியுள்ள வீடியோவில் அனைத்தும் தெளிவாக பதிவாகியுள்ளது.

    Read More : பெண்ணின் காதில் புகுந்த பாம்பு... வெளியே எடுக்க போராடும் மருத்துவர் - ஷாக் வீடியோ


    அந்த வீடியோவில் முதலில் பின் இருக்கையில் 4 பெண்கள் அமர்கின்றனர். அவர்கள் மடியில் இரண்டு பேர் ஏறி காலை நீட்டி படுத்துக்கொள்கின்றனர். பின்னால் பெட்டிகளை வைப்பதற்காக இருக்கும் இடத்தில் இரண்டு பெண்கள் மிகவும் கஷ்டப்பட்டு கால்களை குறுக்கி நீள் வாக்கில் படுத்துக்கொள்கின்றனர். முன் இருக்கையில் ஓட்டுநர் உட்பட 4 பேர் ஏறிக்கொள்கின்றனர். கார் கண்ணாடிக்கு முன்பிருக்கும் டேஷ்போர்டு ஏரியா, சீட்டுக்கு கீழே கால் வைப்பதற்காக இருக்கும் இடம் என ஒரு இடத்தைக் கூட விடாமல் கை, கால்களை மடக்கி குறுக்கி 29 பேர் மினி கூப்பர் காருக்குள் அமர்ந்து கொள்கின்றனர்.

    3 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்த வீடியோவில் ஒருவர் மற்றொருவருக்காக எப்படியெல்லாம் இடத்தை அட்ஜஸ்ட் செய்து அமர்கிறார்கள் என்பது தெளிவாக பதிவாகியுள்ளது. இந்த சாதனையை சீனாவைச் சேர்ந்த சியா லீ மற்றும் மினி சீனா ஆகியோர் அடங்கிய குழு செய்து காண்பித்துள்ளது. இதனையடுத்து கின்னஸ் உலக சாதனை அதிகாரி, சீனாவின் ஜியாமென் நகரில் அமைக்கப்பட்ட பிரத்யேக செட்டில் நடந்த சாதனையை அங்கீகரித்து வெற்றியாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கி கெளரவித்துள்ளார்.



    கின்னஸ் உலக சாதனைகள் புத்தகத்தின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் வெளியாகியுள்ள இந்த வீடியோ பார்க்கவே பிரம்மிப்பைக் கொடுக்கிறது. "இந்த வழக்கமான அளவிலான மினி கூப்பரில் எத்தனை பேர் ஏற முடியும்?" என்ற தலைப்புடன் பகிரப்பட்டுள்ள வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை இதுவரை ஆயிரக்கணக்கான மக்கள் கண்டு ரசித்துள்ளனர். நூற்றுக்கணக்கில் கமெண்ட்களும், லைக்குகளும் குவிந்து வருகிறது. ட்விட்டர் யூஸர்களில் ஒருவர் அமெரிக்காவில் இதே போன்ற சாதனையை முயற்சிக்க உள்ளதாக பதிவிட்டுள்ளார். மற்றொருவரோ “டாடா நானோ நீ தான் அடுத்தது” என பலரும் வேடிக்கையாக கமெண்ட் செய்து வருகின்றனார்.

     
    Published by:Lilly Mary Kamala
    First published:

    Tags: China, Trending, Viral Video

    அடுத்த செய்தி