Home /News /trend /

500 மீட்டர் நீள காகிதத்தில் கைகளால் குர் ஆன் எழுதி உலக சாதனை படைத்த காஷ்மீரி இளைஞர்!

500 மீட்டர் நீள காகிதத்தில் கைகளால் குர் ஆன் எழுதி உலக சாதனை படைத்த காஷ்மீரி இளைஞர்!

500 மீட்டர் நீள காகிதத்தில் கைகளால் குர் ஆனை எழுதி உலக சாதனை

500 மீட்டர் நீள காகிதத்தில் கைகளால் குர் ஆனை எழுதி உலக சாதனை

ஜம்மு காஷ்மீரை சேர்ந்த 27 வயதான இளைஞர் ஒருவர் 500 மீட்டர் நீளமுள்ள காகிதச் சுருளில் தனது கைகளால்  குர் ஆன் எழுதி பாராட்டத்தக்க உலக சாதனை படைத்துள்ளார்.

    27 வயதான காஷ்மீரி எழுத்தர் முஸ்தபா-இப்ன்-ஜமீல் (Mustafa-Ibn-Jameel) ஏழே மாதங்களில் 500 மீட்டர் நீளமுள்ள சுருளில் திருக்குர்ஆனை எழுதி புதிய உலக சாதனை படைத்துள்ளார். வடக்கு காஷ்மீர் மாவட்டத்தின் குரேஸின் எல்லையில் உள்ள துலைல் பகுதியில் வசிக்கும் முஸ்தபா-இப்ன்-ஜமீல், கடந்த ஆண்டு இந்த சாதனை திட்டத்தை தொடங்கினார்.

    இளைஞர் முஸ்தபா தனது இந்த சாதனை லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் (The Lincoln Book of Records) பதிவு செய்யப்பட்டுள்ளது என்று கூறி உள்ளார். இதை உறுதி செய்யும் வகையில் இத்தகவலை லிங்கன் புக் ஆஃப் ரெக்கார்ட்ஸ் தனது அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் குறிப்பிட்டுள்ளதுடன், அதற்கான பரிசையும் அவருக்கு வழங்கியுள்ளது. முஸ்தபா குர்ஆன்-ஐ எளிது சாதனை படைத்துள்ள காகிதத்தின் அகலம் 14.5 அங்குலம் மற்றும் நீளம் 500 மீட்டர் ஆகும். காஷ்மீரில் வசிக்கும் புகைப்பட பத்திரிக்கையாளர் பாசித் ஜாகர் தனது ட்விட்டர் கணக்கில் முஸ்தபாவின் சாதனை தொடர்பான வீடியோவை ஷேர் செய்து உள்ளார். அந்த வீடியோவில் புனித குர்ஆன் எழுதப்பட்ட 500 மீட்டர் நீளமூள்ள காகித சுருள் பிரிக்கப்பட்டு கொண்டே செல்ல வீடியோ எடுக்கப்படும் காட்சிகள் அடங்கி இருக்கிறது.



    இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள Basit Zagar, "27 வயதான காஷ்மீரி காலிகிராஃபர் முஸ்தபா-இப்ன்-ஜமீல், 7 மாதங்களில் 500 மீட்டர் காகித சுருளில் புனித குர்ஆனை எழுதி உலக சாதனை படைத்துள்ளார்" என்று கேப்ஷன் கொடுத்து உள்ளார். இதனிடையே தனது இந்த உலக சாதனை பற்றி பேசிய இளைஞர் முஸ்தபா, காலிகிராஃபிக்கான (calligraphy) பிரத்யேக ஆர்ட் பேப்பரைஏற்பாடு செய்யவே இரண்டு மாதங்கள் ஆனது. இந்த ஸ்பெஷல் ஆர்ட் பேப்பர் வெளியே மார்க்கெட்டில் எங்குமே கிடைக்காத நிலையில், டெல்லியில் உள்ள ஒரு தொழிற்சாலையில் ஆர்டர் செய்து பெற்றேன். பின் அதற்கான பிரத்யேக காலிகிராஃபி இங்க்-ஐ பெற்றேன் என்று தகவல் தெரிவித்து உள்ளார்.

    Also Read : ஆன்லைனில் அன்பை சம்பாதித்த மாற்றுத்திறனாளி - வைரலாகும் புகைப்படம்!

    இந்த ஆண்டு ஜூன் மாதம் முடிந்த இந்த சாதனை திட்டம் சுமார் ரூ.2.5 லட்சம் செலவில் நிறைவைடைந்ததாக முஸ்தபா கூறி இருக்கிறார். இந்த ஆர்ட் பேப்பரில் செய்யப்பட்ட பார்டர் டிசைனிங்கிற்கு சுமார் ஒரு மாதம் ஆனது. சுமார் 13 லட்சம் டாட்ஸ்களுடன் வடிவமைத்தேன். பிறகு ரோல் முழுவதையும் லேமினேட் செய்தேன் என்றார். குர்ஆன் பிரதியை கையால் எழுத வேண்டும் என்பது எனது இதயப்பூர்வமான ஆசை என்ற ஜமீல், தனித்துவமான ஒன்றை செய்ய கடவுள் கொடுத்த காலிகிராஃபி திறமையை பயன்படுத்த வேண்டும் என்று எனக்கு தோன்றியது. எனது ஆர்வத்தை குடும்பத்தினர் பாராட்டியதாகவும், சாதனை திட்டம் முழுவதும் தனக்கு ஆதரவளித்ததாகவும் முஸ்தபா கூறினார்.

    மேலும் பேசிய சாதனை இளைஞர் முஸ்தபா இந்த பணியை எடுத்து வெற்றிகரமாக செய்து முடித்ததில் மிகவும் மகிழ்ச்சி. குர்ஆன் மற்றும் எழுத்துக்கலை மீதான எனது அன்பை நான் பேப்பரில் பதித்துள்ளேன். நான் ஒரு நாளைக்கு சுமார் 18 மணிநேரம் இதற்காக செலவழித்தேன் என்பதிலிருந்து எனது ஆர்வத்தை உங்களால் அறிய முடியும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
    Published by:Vijay R
    First published:

    அடுத்த செய்தி