ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

ட்விட்டரில் இருந்து பணி நீக்கம்.. மகிழ்ச்சியாகக் கொண்டாடும் 25 வயது இளைஞரின் வைரல் ட்வீட்.! 

ட்விட்டரில் இருந்து பணி நீக்கம்.. மகிழ்ச்சியாகக் கொண்டாடும் 25 வயது இளைஞரின் வைரல் ட்வீட்.! 

யாஷ் அகர்வால்

யாஷ் அகர்வால்

Twitter Employee Viral Post | 25 வயதான ட்விட்டர் ஊழியர் ஒருவர் தான் பணி நீக்கம் செய்யப்பட்டதை மகிழ்ச்சியாக வெளிப்படுத்தியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

உலகின் பெரும் பணக்காரரான எலான் மஸ்க் 44 பில்லியன் ஒப்பந்தத்தில் ட்விட்டரை விலைக்கு வாங்கியுள்ளார். ட்விட்டரில் போலி செய்திகள் பரவிவருவதாகவும், ஸ்பேம் கணக்குகள் அதிகரித்து விட்டதாகவும் குற்றச்சாட்டிய எலான் மஸ்க், புதுப்புது அப்டேட்கள் பற்றியும் ட்விட்டரில் அவ்வப்போது கருத்துக்கணிப்பு நடத்தி வந்தார். எனவே எலான் மஸ்க் ட்விட்டரைக் கைப்பற்றினால் நியமான ஒரு சோசியல் மீடியா அனைவருக்கும் கிடைக்கும் என பலரும் பேசி வந்தனர். குறிப்பாக ட்விட்டரில் எடிட் பட்டன் கொண்டு வரப்படும் என அனைவரும் ஆவலுடன் காத்திருந்தனர்.

ஆனால் தலைமைப் பொறுப்பேற்று ட்விட்டர் நிறுவனத்திற்குள் புகுந்த எலான் மஸ்க் முதல் நாளே அதில் பணியாற்றிக்கொண்டிருந்த சிஇஓ பராக் அகர்வால் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை பணியை விட்டு நீக்கினார். அதன் பின்னர் காஸ்ட் கட்டிங்கிற்காக 75 சதவீத ஊழியர்களை எலான் மஸ்க் பணி நீக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனால் ட்விட்டர் ஊழியர்கள் பெரும் அச்சத்தில் இருந்தனர். இருப்பினும் அனைவரும் எதிர்பார்த்தபடியே கடந்த 3ஆம் தேதி காலை முதலே ட்விட்டர் தனது ஊழியர்களை பணிநீக்கம் செய்ய ஆரம்பித்தது. “நீங்கள் அலுவலகத்தில் இருந்தால்... அலுவலகத்திற்கு சென்று கொண்டிருந்தால் தயவு செய்து வீட்டிற்கு திரும்புங்கள்” என ட்விட்டர் நிர்வாகம் தனது ஊழியர்களுக்கு அனுப்பியுள்ள மெயிலில் குறிப்பிடப்பட்டுள்ளது பெரும் சர்ச்சையை உருவாக்கி வருகிறது.

இதனிடையே ட்விட்டரில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தங்களது குமுறல்களை ட்விட்டரிலேயே கொட்டித்தீர்த்து வருகின்றனர். இந்நிலையில் 25 வயதான ட்விட்டர் ஊழியர் ஒருவர் தான் பணி நீக்கம் செய்யப்பட்டதை மகிழ்ச்சியாக வெளிப்படுத்தியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது.

யாஷ் அகர்வால் என்ற இளைஞர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இப்போது தான் பணி நீக்கம் செய்யப்பட்டேன். பேர்ட் ஆப். இந்த குழுவில், இப்படியொரு கலச்சாரத்தில் அங்கமாக இருப்பது ஒரு முழுமையான மரியாதை, மிகப்பெரிய பாக்கியம் #LoveWhereYouWorked #LoveTwitter" என பதிவிட்டுள்ளார். ட்விட்டரில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்டதற்காக கோவத்தையோ, கவலையையோ வெளிக்காட்டாமல் அந்நிறுவனத்தில் பணியாற்றிய நாட்களை நினைவு கூறும் விதமாக ட்விட் செய்துள்ளார்.

Also Read : ட்விட்டரே வேண்டாம்.. கடையை மூடும் பயனாளர்கள்.. கூட்டத்தைக் கவரும் மஸ்டோடன் செயலி!

அத்துடன் ட்விட்டரின் லோகோவைக் கொண்ட இரண்டு குஷன்களை வைத்திருக்கும் படத்தையும் அவர் பகிர்ந்துள்ளார். இந்தப் படம் ட்விட்டர் அலுவலகத்தில் எடுக்கப்பட்டதாகத் தெரிகிறது. அவரது பயோவின் படி, யாஷ் அகர்வால் ட்விட்டரில் பொது கொள்கை குழுவில் பணியாற்றியுள்ளதாக தெரிகிறது. யாஷ் அகர்வாலின் இந்த பாசிட்டிவ் பதிவிற்கு வரவேற்புகள் குவிந்து வருகிறது. இந்த ட்வீட் பதிவிடப்பட்ட சில மணி நேரங்களிலேயே 3,300 பேர் லைக் செய்திருந்தனர். தற்போதைய நிலவரப்படி 54 ஆயிரத்திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர். 1,400க்கும் மேற்பட்டோர் கமெண்ட் செய்துள்ளனர். யாஷ் அகர்வாலின் ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள பலரும் அவரது பாசிட்டிவ் எண்ணத்தை பாரட்டியதோடு, அடுத்து ஒரு சிறப்பான பணியில் அமரவும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

Published by:Selvi M
First published:

Tags: Elon Musk, Tamil News, Trending, Twitter