Home /News /trend /

பார்வையாளர் வீசிய ரப்பர் பந்தை விழுங்கிய 25 வயதான போலார் கரடி உயிரிழப்பு!

பார்வையாளர் வீசிய ரப்பர் பந்தை விழுங்கிய 25 வயதான போலார் கரடி உயிரிழப்பு!

போலார் கரடி

போலார் கரடி

ரஷ்யாவின் யெகாடெரின்பர்க் நகரத்தில் அமைத்துள்ள உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகிறது.

  • News18
  • Last Updated :
ரஷ்யாவில் அமைத்துள்ள ஒரு உயிரியல் பூங்காவில் நெஞ்சை பதற வைக்கும் சம்பவம் ஒன்று நடந்துள்ளது. கடந்த ஏப்ரல் 19ம் தேதி காலை பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த போலார் கரடி ஒன்று அதன் சுற்றுப்புறத்தில் இருந்த ரப்பர் பந்தை விழுங்கி இறந்துள்ளது. 25 வயதான அந்த கரடியின் பெயர், உம்கா ஆகும். இது ரஷ்யாவின் யெகாடெரின்பர்க் நகரத்தில் அமைத்துள்ள உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வருகிறது. இது கடந்த திங்கட்கிழமை காலை உணவை உட்கொண்டிருந்த போது, ​​திடீரென தரையில் சரிந்து விழுந்தது.

உம்காவின் பராமரிப்பாளர் இந்த நிகழ்வைக் கண்டு அதிர்ச்சியடைத்து, உதவிக்கு மற்றவர்களை அழைத்தார். ஆனால் அதிகாரிகள் தாமதமாக வந்ததால் கரடியின் உயிரை காப்பாற்ற முடியாமல் போனது. கரடியின் உடல்நிலையை அறிந்த கால்நடை மருத்துவ குழுவினர் பத்து நிமிடங்களுக்குள் சம்பவ இடத்தை அடைந்தபோது, ​​உம்கா ஏற்கனவே உயிரிழந்துள்ளது. பின்னர் உயிரிழந்ததற்கான காரணத்தை தெரிந்து கொள்ள அதற்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. அப்போது, அதன் வயிற்றில் ஒரு ரப்பர் பந்து இருந்ததைக் கண்டு மருத்துவர்கள் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

பந்தை விழுங்கியதாலேயே கரடி இறந்தது என்ற கொடூரமான செய்தியை கேட்ட உயிரியல் பூங்கா ஊழியர்கள் பேரதிர்ச்சியும் குழப்பமும் அடைந்தனர். பின்னர், இது குறித்து விசாரித்தபோது அந்த ரப்பர் பந்து பார்வையாளர் ஒருவரால் உம்காவிற்கு தூக்கி எறியப்பட்டது கண்டறியப்பட்டுள்ளது. கரடியின் திடீர் மரணத்திற்கு ஒரு பார்வையாளரின் செயலே காரணமானது அப்பகுதி மக்களை வேதனையடைய செய்தது.

பூங்காவில் உம்காவுடன், ஐனா என்ற பெண் போலார் கரடியும் ஒரேஇடத்தில் பராமரிக்கப்பட்டு வந்தது. பராமரிப்பாளர்களின் கூற்றுப்படி, உம்காவின் மறைவுக்குப் பின்னர் ஐனா அதீத சோகத்திற்கு ஆளாகியிருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து மிருகக்காட்சிசாலையின் ஊழியர் யெகாடெரினா உவரோவா கூறுகையில், அவர்கள் இருவரும் ஒரே இடத்தில் நிறைய நேரத்தை செலவிடுவார்கள். ஒருவருக்கொருவர் அக்கறை காட்டி பொம்மைகளை பரிமாறிக்கொண்டதால், ஐனா இப்போது மிகவும் வருத்தமாக இருக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பூங்கா பராமரிப்பாளர்கள் கூறுகையில், வயது முதிர்ந்த போலார் கரடிகள் மற்றவர்களுடன் பழகுவது அரிது. இந்த துயர சம்பவத்திற்கு காரணமான நபரை பூங்கா அதிகாரிகள் தேடவில்லை என்றாலும், எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் தடுக்க அவர்கள் ஐனாவை உன்னிப்பாக கவனித்து வருவதாக தெரிவித்துள்ளனர்.

Also read... உயிரைக் காப்பாற்றிய நாய் - மனதை நெகிழவைக்கும் வீடியோ!

உம்காவின் தாயார் வேட்டைக்காரர்களால் கொல்லப்பட்ட பின்னர் அது 1998 இல் ஒரு குட்டியாக பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டது. ரஷ்யாவின் சுகோட்கா பிராந்தியத்தில் பில்லிங்ஸ் கிராமத்தில் உணவு தேட சென்ற போது நாய்களின் தாக்குதலில் இருந்து மீட்கப்பட்டதாக கூறப்படுகிறது. அதனை நாய்களிடமிருந்து மீட்ட உள்ளூர் மக்கள் எங்கள் பூங்காவில் ஒப்படைத்தனர் என்று பராமரிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் உயிரியல் பூங்காவின் செய்தித் தொடர்பாளர் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது, பல எச்சரிக்கைகள் கொடுக்கப்பட்ட போதிலும் பார்வையாளர்கள் பலர் சாத்தியமான சோகமான விளைவுகளைப் பற்றி சிந்திக்காமல் விலங்குகளுக்கு உபசரிப்புகளையும் வெளிநாட்டுப் பொருட்களையும் வீசி செல்கின்றனர். இதனால் ஏற்படும் விபரீதங்களை பற்றி அவர்கள் அறிந்திருக்கவில்லை என குறிப்பிட்டுள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published:

அடுத்த செய்தி