காதலுக்கு கண்ணில்லை, வயதில்லை, அழகைப் பார்க்காது, என்று காதலைப் பற்றி பல விதமாக கூறப்படுவதுண்டு. காதலித்த நபரை / பெண்ணை திருமணம் செய்து பல ஆண்டுகள் மகிழ்ச்சியாக வாழ வேண்டும் என்பது காதலிக்கும் அனைவரின் ஆசையாக இருக்கும். ஆனால் என்னதான் காதலுக்கு வயதில்லை, வயது வித்தியாசம் பார்ப்பதில்லை என்று சொன்னால் கூட 50 வயதுக்கு மேல், வயது வித்தியாசம் இருப்பவரை திருமணம் செய்து கொண்டு மிச்சமிருக்கும் வாழ்நாளை அவருடன் வாழ யார் தான் ஆசைப்படுவார்கள்?
சமீபத்தில் 23 வயதான இளம்பெண் ஒருவர் 71 வயதான முதியவரை திருமணம் செய்து கொள்ள ஆசைப்படுவதாக ரெட்டிட் என்ற சமூக வலைத்தளத்தில் தெரிவித்து இருந்தார். ஆனால் அவருக்கு ஒரு சில விஷயங்களால் முடிவெடுக்க குழப்பமாக இருக்கிறது, எனவே யூசர்கள் அதற்கு உதவுமாறு கோரிக்கை மேற்கொண்டிருந்தார்.
முதியவரை திருமணம் செய்ய விருப்பம் தெரிவித்த இந்த இளம்பெண்ணின் வினோதமான ஆசை பற்றிய செய்தியை மிரர் வெளியிட்டிருந்தது. முதியவரும், இளம் பெண்ணும் இரண்டு ஆண்டுகள் ஒன்றாக ரிலேஷன்ஷிப்பில் இருந்து வந்திருக்கிறார்கள் என்றும், அந்தப் பெண் தன்னுடைய வயது முதிர்ந்த காதலனை அக்கறையாகவும், அன்பாகவும், கவனித்து கொண்டு வந்திருக்கிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, 71 வயதான முதியவர் அந்த பெண்ணிடம் தன்னை திருமணம் செய்து கொள்ள விருப்பமா என்று கேட்டிருக்கிறார்.
இரண்டு ஆண்டுகள் லிவின் உறவில் இருந்தபோது இல்லாத பிரச்சனை திருமணம் என்று வரும் பொழுது ஏன் வருகிறது? அதற்கு அந்தப்பெண் அளித்த விளக்கம் இங்கே.
71 வயதான நபர் மிக மிக ஆரோக்கியமாக இருப்பதாகவும், அவருடைய வாழ்க்கை முறை ஆக்டிவாக இருக்கிறது. முதியவர் உண்மையில் ஒரு இளைஞரைப் போல சுறுசுறுப்பாகவும் ஆக்டிவாக இருப்பது பிரச்சினையே கிடையாது. இவர்கள் இருவருக்கும் குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பமில்லை. இந்தத் திருமண வாழ்வு அதிகபட்சம் 10 முதல் 20 ஆண்டுகள் நீடிக்கலாம். ஆனால், என்றாவது ஒருநாள் அவரை ஒரு ‘கேர்டேக்கராக’ பார்த்துக்கொள்ள வேண்டிய சூழல் ஏற்படும் பொழுது தனக்கு ஒரு சில பிரச்சனைகள் இருப்பதாக கூறியிருக்கிறார்.
Also Read : ஸ்டைலாக கார் கியர் மாற்றியதால் காதல்... டிரைவரை திருமணம் செய்த பணக்கார பெண்!
முதியவரின் அம்மாவுக்கு அல்சைமர் அல்லது டிமென்ஷியா அறிகுறிகள் இருந்ததாகவும் மரபணு வழியாக அந்த பாதிப்பு இவருக்கு ஏற்படும் சாத்தியம் இருக்கலாம். இரண்டாவதாக, இவரின் தந்தைக்கு பக்கவாதம் ஏற்பட்டுள்ளது. இவருக்கு குழந்தைகள் இல்லை.
எனவே ஏதாவது ஒரு காலகட்டத்தில் ஞாபக மறதி நோய் பாதிப்பு ஏற்பட்டு அல்லது பக்கவாதம் ஏற்பட்டு அல்லது வயோதிகம் காரணமாக இவரை கவனிப்பதற்கு கூடுதலாக முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டியிருக்கும் என்பதே இந்த இளம்பெண்ணின் கவலை.
Also Read : மனிதரை போல் காரில் கெத்தாக அமர்ந்து சென்ற நாய் - வைரல் வீடியோ.!
எனவே வயதான ஒரு நபரை திருமணம் செய்து கொள்ளும் பொழுது, அந்த வாழ்க்கை எவ்வாறு இருக்கும் என்பது குழப்பமாக இருக்கிறது என்றும், ஏற்கனவே தான் முழு நேர வேலையில் இருப்பதால் இதனை எப்படி பேலன்ஸ் செய்வது என்று தெரியவில்லை என்றும் கூறியிருக்கிறார். இதற்கு சிலர் ஆதரவாகவும், சிலர் எதிர்ப்பு தெரிவித்தும் கருத்து தெரிவித்து வந்துள்ளனர்.
எதுவுமே இல்லாமல் இருப்பதற்கு, சில ஆண்டுகள் அவருடன் மகிழ்ச்சியாக வாழ்வது சிறந்த முடிவு என்று முதியவரின் மேல் கொண்ட காதலை வெளிப்படுத்தியிருக்கிறார்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Marriage, Tamil News, Trending