ஒரே நேரத்தில் 2,138 பேர் இணைந்து விநாயகர் சிலை வடிவமைத்து உலக சாதனை..!

சிலைகளில் சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக விதைகளை புதைத்து சிலைகளை வடிவமைத்துள்ளனர்.

news18
Updated: August 31, 2019, 11:06 AM IST
ஒரே நேரத்தில் 2,138 பேர் இணைந்து விநாயகர் சிலை வடிவமைத்து உலக சாதனை..!
வினாயகர் சதுர்த்தி
news18
Updated: August 31, 2019, 11:06 AM IST
விநாயகர் சதுர்த்தி நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையில் பெங்களூருவில் நிகழ்த்தியிருக்கும் கின்னஸ் சாதனையை சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் பாரட்டி வருகின்றனர்.

ஒவ்வொரு வருடமும் விநாயகர் சிலையை கரைக்கும்போதும் கடல் மட்டுமல்லாது ஏரி, குளங்கள் மாசடைகின்றன. இந்த பிரமாண்ட விநாயாகர் சிலைகள் பாரிஸ் பிளாஸ்டர் கொண்டு வடிவமைக்கப்படுகின்றன. இந்த பிளாஸ்டர் தண்ணீரில் உறையும்போது ஒட்டுமொத்த குளம், ஏரி, கடலையும் சேதப்பட்டுத்துகிறது. இதன் விளைவாக நீர் நிலைகளில் வாழ்க்கூடிய மீன் வகைகள் இறந்து கரையில் மிதக்கும் அவலம் ஒவ்வொரு வருடமும் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

அதுமட்டுமன்றி அவை எரிக்கப்பட்டாலும் அதிலிருந்து வெளியாகும் கியாஸ் கலந்த புகை ஆபத்து நிறைந்தவை. இப்படி விநாயர் சதுர்த்தி நிறைவடைவதற்குள் பல சேதங்கள், கழிவுகள்தான் மிச்சமாகின்றன.


இவற்றைக் கருத்தில் கொண்டு சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ,மக்களுக்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். இதோடு மக்களும் சில நிகழ்ச்சிகளை மேற்கொண்டு அதன் கேடு குறித்து கற்பித்து வருகின்றனர்.அந்த வகையில் பெங்களூருவில் கணேஷா உட்சவக் குழுவைச் சேர்ந்த 2,138 பேர் இணைந்து ஒரே நேரத்தில் களிமண் கொண்ட விநாயகர் சிலைகளை வடிவமைக்க ஏற்பாடு செய்தனர். அதில் அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சிலைகளை வடிவமைத்து சாதனை நிகழ்த்தியுள்ளனர். இதில் சிலர் தங்கள் கற்பனை திறனையும் காட்டியுள்ளனர். இதில் முக்கிய விஷயம் என்னவெனில் சிலைகளில் சுற்றுசூழல் பாதுகாப்பிற்காக விதைகளை புதைத்து சிலைகளை வடிவமைத்துள்ளனர். அதுதான் இந்நிகழ்ச்சியின் பெரும் பங்களிப்பாக பலராலும் பாராட்டப்படுகிறது. இந்நிகழ்ச்சியில் 800 கிலோ களிமண் பயன்படுத்தப்பட்டுள்ளது.இதற்கு முன்பும் இதே போல் 589 பேர் இணைந்து விநாயகர் சிலையை வடிவமைத்து கின்னஸில் இடம் பெற்றுள்ளனர். தற்போது இந்த சாதனை அதையே முறியடித்து சாதனை படைத்துள்ளது.

பார்க்க...

திருமணமான பெண்கள் தங்கள் உடல் நலனை எப்படி பராமரிக்க வேண்டும்

First published: August 31, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...