பட்டம் பெற்றாலும் யாரையும் நம்பாமல் தங்கள் சொந்தக் காலில் நிற்பதைத் தான் இன்றைய இளைய தலைமுறை விரும்புகிறது என்பதற்கு டெல்லியில் ஒரு பி-டெக் பட்டதாரி உண்மை சாட்சியாய் உலா வருகிறார்.
உங்களுக்கு நீங்களே முதலாளி,.. உங்களுக்கான முகவரியை நீங்களே உருவாக்கிக் கொள்ளுங்கள். இந்த மோட்டிவேசன் வார்த்தைகளுக்குத் தான் இன்றைய இளைஞர்கள் முன்னுரிமை தருகிறார்கள். அதற்காக எந்த ரிஸ்கையும் எடுக்கத் துணிகிறார்கள் இவர்கள். அந்த வரிசையில் இணைந்துள்ளார் டெல்லியை சேர்ந்த 21 வயது பி-டெக் பட்டதாரியான டாப்ஸி.
டாப்ஸி மேற்கு டெல்லியில் ஒரு பானி பூரி விற்பனை செய்யும் சிறிய கடையை திறந்துள்ளார். சிறிய ஆனால் நல்ல லாபம் தரக்கூடிய தொழில்களை தொடங்குவதில் ஆர்வமுள்ள பட்டதாரி இளைஞர்கள் அண்மைக் காலமாக ஆர்வம் காட்டி வருகிறார்கள். டீக்கடை, பானிபூரி கடை, பலகாரக் கடை என எந்த லெவலுக்கும் இறங்குகிறார்கள். பலர் அதில் வெற்றியும் பெறுகிறார்கள். அப்படி ஒரு ஸ்டார்ட் அப்-தொழில் முனைவோராக களமிறங்கியுள்ளார் டாப்ஸி. இவர் தொடர்பான வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
இதையும் படிக்க : ஓடும் கார், பைக்குகளை நாய்கள் துரத்துவது ஏன் தெரியுமா? காரணம் இதுதான்..!
யாருக்காகவும் காத்திருக்காமல் தனக்கான காலத்தை தாங்களே உருவாக்கிக் கொள்ளும் இளைஞர்கள் கடினமாக உழைக்கவும் தயங்குவதில்லை. அப்படித் தான் டாப்ஸியும். ஒரு துறையில் கவனம் பெற்று முன்னேற வேண்டுமானால் வித்தியாசமான அணுகுமுறை அவசியம். அதன்படி டாப்ஸி பானி பூரி தயாரிப்பில் வித்தியாசத்தை புகுத்தியுள்ளார். வழக்கமான பூரியாக இல்லாமல் உடல் நலத்திற்கு நன்மை அளிக்கக் கூடிய வகையில் மைதா மாவு சேர்க்காமல் வெறும் கோதுமை மாவைக் கொண்டு பூரி தயாரிக்கிறார் டாப்ஸி.
இதனால் இவரின் தயாரிப்பு மக்களிடையே வெகுவாக பிரபலம் அடைந்து வருகிறது. அதோடு தான் தயாரித்த பானி பூரியையும் அதற்கான பொருட்களையும் புல்லட் வாகனத்தில் ஏற்றிக் கொண்டு யாருடைய விமர்சனத்தையும் பொருட்படுத்தாமல் தன் இலக்கை நோக்கி கம்பீரமாக பயணிக்கிறார். இது மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருகிறது. இந்த வீடியோவை பிரபல பாலிவுட் நடிகை டாப்ஸி பன்னு மிகவும் பெருமையாக பகிர்ந்துள்ளார். அருமையான ஸ்ட்ரீட் ஃபுட்டை புன்னகையோடு விற்பனை செய்யும் இந்த பெண் தொடர்பான விபரங்களை நாம் அனைவரும் பகிர வேண்டிய நேரமிது என்ற கேப்சனோடு வீடியோவை டிவிட்டரில் பகிர்ந்திருக்கிறார் நடிகை டாப்ஸி.
View this post on Instagram
மேலும், பானிபூரி விற்பனை செய்யும் பி-டெக் பட்டதாரி தொடர்பான வீடியோவை பிரபல புட் ப்ளாக்கர் ராஜேஷ் கியானியும் ஷேர் செய்திருக்கிறார். யாரைப் பற்றியும் கவலைப் படாமல் தன் வாழ்க்கையை அடுத்த கட்டத்திற்கு நகர்த்திச் செல்லும் முயற்சியில் நெர்மையோடு செயல்படும் யாரையும் மக்கள் கைவிட மாட்டார்கள் என்பதற்கு பானி பூரி வற்பனை செய்யும் பி-டெக் பட்டதாரி டாப்ஸி ஒரு நல்ல உதாரணம்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Delhi