ஹோம் /நியூஸ் /ட்ரெண்டிங் /

மாலை மாற்றும் நேரத்தில் மாரடைப்பால் சரிந்த மணமகள்... உ.பி-யில் திருமண வீடு துக்க வீடாக மாறிய சோகம்!

மாலை மாற்றும் நேரத்தில் மாரடைப்பால் சரிந்த மணமகள்... உ.பி-யில் திருமண வீடு துக்க வீடாக மாறிய சோகம்!

மாலை மாற்றும் நேரத்தில் மாரடைப்பால் சரிந்த மணமகள்

மாலை மாற்றும் நேரத்தில் மாரடைப்பால் சரிந்த மணமகள்

மேடையில் மாலைகளை மாற்றிக்கொண்டு புகைப்படம் எடுப்பதற்காகக் காத்திருந்த சில நொடிகளில், ஷிவாங்கி எதிர்பாராதவிதமாக சரிந்து,மேடையிலேயே விழுந்துள்ளார்,

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Lucknow |

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோவில் மாலை மாற்றும் போது மணப்பெண் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் கடும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேச மாநிலம் லக்னோ புறநகரில் உள்ள மலிஹாபாத்தின் பத்வானா கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜ்பாலின். இவரது மகளான ஷிவாங்கி ஷர்மா என்பவருக்கும் அதே பகுதியைச்சேர்ந்த விவேக் என்ற இளைஞருக்கும் கடந்த வெள்ளிக்கிழமை மாலை திருமணம் நடைபெற்றது. அப்போது மேடையில் மணமகனும், மணமகளும் மேடையில் மாலைகளை மாற்றிக்கொண்டு புகைப்படம் எடுப்பதற்காகக் காத்திருந்தனர்.

சில நொடிகளில், ஷிவாங்கி எதிர்பாராதவிதமாக சரிந்து, மேடையிலேயே விழுந்துள்ளார். சரிந்த பெண்ணை அருகில் உள்ள சமூக சுகாதார மையத்திற்கு தூக்கிச் சென்றுள்ளனர். ஆனால் வழியிலேயே அவர் மாரடைப்பால்  உயிரிழந்ததாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இதையும் படிங்க: வீட்டுக்கு நடுவே சர்வதேச எல்லை... இரட்டைக் குடியுரிமை கொண்ட ஒரே இந்திய கிராமம்... எங்கு உள்ளது தெரியுமா..?

மணப்பெண் ஷிவாங்கி  கடந்த 15-20 நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்ததாகவும், அவருக்கு காய்ச்சல் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அவளுக்கு குறைந்த ரத்த அழுத்தமும் இருந்து சிகிச்சை பெற்று வந்துள்ளார். சில வாரங்களுக்கு முன்பு மருத்துவமனையில் மருந்து கொடுக்கப்பட்டு, ரத்த அழுத்தம் சமநிலை பெற்றதும்  வீட்டிற்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். ஆனால் திருமணத்தின்போது மீண்டும் ரத்த அழுத்தம் குறைந்ததோடு மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாக மருத்துவ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

மணப்பெண்ணின் சடலத்தை குடும்பத்தினர் சனிக்கிழமை தகனம் செய்தனர்.  மணமகன் மற்றும் மணமகன் இருவரின் குடும்பத்தினர் வழக்குகளை சந்திக்க விரும்பாததால் காவல்துறைக்கு தகவல் ஏதும் சொல்லப்படவில்லை. புகாரும் அளிக்கப்படவில்லை.

ஆனால், சமூக ஊடகங்கள் மூலம் இந்த சம்பவம் குறித்து காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. பின்னர் ஒரு போலீஸ் குழு விசாரணைக்காக பத்வானா கிராமத்திற்கு அனுப்பப்பட்டனர். சம்பவங்களை அந்த குழு விசாரித்து பதிவு செய்துள்ளனர்.  உடல்நலம் சரி இல்லாமல் ஏற்பட்ட மரணம் என்ற அடிப்படையில் இது பதிவு செய்யப்பட்டுள்ளது.

First published:

Tags: Lucknow S24p35