• HOME
  • »
  • NEWS
  • »
  • trend
  • »
  • ஹைதராபாத் அருகே 1,100 ஆலமரங்களுடன் தீபாவளியை கொண்டாடும் மக்கள் - என்ன காரணம் தெரியுமா?

ஹைதராபாத் அருகே 1,100 ஆலமரங்களுடன் தீபாவளியை கொண்டாடும் மக்கள் - என்ன காரணம் தெரியுமா?

ஹைதராபாத் அருகே 1,100 ஆலமரங்களுடன் தீபாவளியை கொண்டாடும் மக்கள்

ஹைதராபாத் அருகே 1,100 ஆலமரங்களுடன் தீபாவளியை கொண்டாடும் மக்கள்

இந்த நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பதால், இந்த மரங்கள் அனைத்தும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

  • Share this:
தற்போது மாறி வரும் இயற்கை சூழலில் மரம் வளர்ப்பது முக்கியமானதாக மாறி இருக்கிறது. உலக அளவில் மரங்கள் அழிக்கப்பட்டு, உலகம் வெப்பமயமாகி வருகிறது. இதனால் தான் அதிகளவு மழை, வெயில், ஓசோன் படலத்தில் ஓட்டை, காலநிலை மாற்றங்கள், எரிமலை வெடிப்பு போன்ற பல்வேறு மறைமுகமாக பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. சுற்றுசூழலை பாதுகாப்பதில் மரங்களை வளர்ப்பது முக்கிய பங்காற்றுகிறது.

மரமானது சுற்றுசூழலை பாதுகாப்பதோடு காலநிலை மாற்றங்களையும் சரி செய்கிறது. இத்தகைய மரங்களை பாதுகாக்க வேண்டும் என்று ஹைதராபாத்தில் உள்ள சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் போராடி வருகின்றனர். ஹைதராபாத்தில் இருந்து 45 கிமீ தொலைவில் உள்ளது ‘செவெல்லா’ என்ற கிராமம். ஹைதராபாத்-மன்னேகுடா நெடுஞ்சாலையில் உள்ள இந்த கிராமத்தில் சுமார் 9,000க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளது. அதில் 1,100 க்கும் மேல் ஆலமரங்கள் உள்ளது.

இந்த நெடுஞ்சாலையில் சாலை விரிவாக்கத் திட்டத்திற்கு மத்திய அரசு அனுமதி வழங்கி இருப்பதால், இந்த மரங்கள் அனைத்தும் அழியும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மரங்களை அழிக்கும் இந்த திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்று முடிவு செய்த சுற்றுசூழல் ஆர்வலர்கள் 200க்கும் மேற்பட்டோர் செவெல்லா கிராமத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும் அக்கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் மரங்களின் முன்பு தீபம் ஏற்றி, அவற்றை பாதுகாப்போம் என உறுதிமொழி எடுத்துள்ளனர். சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் ஓவியங்கள் மற்றும் சுவரொட்டிகளை ஒட்டியுள்ளனர். இதுபற்றி பேசிய ‘நேச்சர் லவ்வர்ஸ் ஆஃப் ஹைதராபாத்' குழுவின் உறுப்பினர் சாதனா ராம்சந்தர், ‘ஏறக்குறைய ஒரு நூற்றாண்டுக்கு முன்பு நிஜாம் அரசர்களால் இந்த ஆலமரங்கள் நடப்பட்டதாக கூறுகிறார்.

இந்த மரங்களை நாம் பாதுகாக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இந்த மரங்களை வெட்டுவதால் இதில் வசிக்கும் பறவைகள் அழியும் நிலை ஏற்படும். இயற்கையை காப்பது தான் நமது கடமை. அரசாங்கம் புதிய மரக்கன்றுகளை நட்டாலும் அல்லது மரங்களை இடமாற்றம் செய்ய முன்வந்தாலும் அது சரியாக இருக்காது என்று அவர் தெரிவித்துள்ளார்.

தற்போது அனைத்து சுற்றுச்சூழல் நிலைமைகளும் மாறிவிட்டன. எனவே சுற்றுசூழலுக்கு எதிரான இந்த திட்டத்தை கைவிடுமாறு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திடம் (NHAI) நாங்கள் வேண்டுகோள் விடுத்துள்ளோம்’ என்று அவர் கூறுகிறார். மேலும் இதுகுறித்து பேசிய போராட்ட குழுவை சேர்ந்த காஜல் மகேஸ்வரி, ‘சுற்றுச்சூழல் சமநிலையின்மை பல்வேறு ஆபத்துகளை ஏற்படுத்தும். பல்வேறு அறிக்கைகளின் மூலமாக மக்களை குழப்ப முடியாது என்று அரசாங்கம் புரிந்துகொள்ள வேண்டும்.

Also read... அமேசான் வெளியிட்ட உணர்வுபூர்வமான தீபாவளி விளம்பரம் - வைரலாகும் வீடியோ!

2019 ஆம் ஆண்டிலும், சாலை விரிவாக்கத் திட்டத்தை கையில் எடுத்து மத்திய அரசு. ஆனால் நிதி பற்றாக்குறை மற்றும் ஆலமரங்களைக் காப்பாற்ற சுற்றுச்சூழல் குழுக்கள் உருவாக்கிய அழுத்தம் காரணமாக அது செயல்படுத்தப்படவில்லை. தற்போது மீண்டும் ​​மத்திய அரசு சமீபத்தில் அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது’ என்றார். ‘நேச்சர் லவ்வர்ஸ் ஆஃப் ஹைதராபாத்’ குழு மரங்களை பாதுகாத்து வருகிறது. ஆண்டுதோறும் மரங்களை நடுவது, இயற்கையை குறித்து விழிப்புணர்வு என இயங்கிக் கொண்டிருக்கிறது. சுற்றுசூழலுக்கு எதிராக எங்கு பிரச்சனை ஏற்பட்டாலும் இந்த குழு அங்கு இருக்கும் என்பது கவனிக்கத்தக்கது.

இந்த ட்விட்டர் பக்கத்தை காண…‘சேவ் பனியன்ஸ் ஆஃப் செவெல்லா’ என்ற ட்விட்டர் பக்கத்தில் இந்த செவெல்லா கிராமத்தில் உள்ள ஆலமரங்கள் குறித்த காணொளியை பார்க்கலாம். இதுவரை இந்த திட்டத்துக்கு எதிராக 43,000க்கும் மேற்பட்ட கையெழுத்துக்கள் சேகரிக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Vinothini Aandisamy
First published: