மலரும் நினைவுகள்' ரெஸ்டாரண்டுக்கு 2000 டாலர் டிப்ஸ் கொடுத்த தம்பதி - நெகிழ்ந்த உரிமையாளர்!

மலரும் நினைவுகள்' ரெஸ்டாரண்டுக்கு 2000 டாலர் டிப்ஸ் கொடுத்த தம்பதி - நெகிழ்ந்த உரிமையாளர்!

அமெரிக்காவில் ஒரு தம்பதி 20 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக சந்தித்த ரெஸ்டாரண்டுக்கு ஆண்டுக்கு ஒருமுறை சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரு தம்பதி 20 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக சந்தித்த ரெஸ்டாரண்டுக்கு ஆண்டுக்கு ஒருமுறை சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர்.

  • News18
  • Last Updated :
  • Share this:
அமெரிக்காவில் தாங்கள் 20 ஆண்டுகளுக்கு முன்பு சென்ற ரெஸ்டாரண்டுக்கு, அண்மையில் சென்ற தம்பதியினர் அந்த ரெஸ்டாரண்டுக்கு 2,000 அமெரிக்க டாலரை டிப்ஸாக கொடுத்து மகிழ்வித்துள்ளனர்.

ஒரு சில உணவகங்கள் அல்லது கஃபே, அங்கு கிடைக்கும் ருசியான உணவு மற்றும் கவனிப்புக்காக மட்டும் பிடித்தவையாக இருக்காது. வாழ்வின் மறக்க முடியாத நினைவு சுவடுகளை தாங்கி நிற்கும் மலரும் நினைவகங்களாக இருப்பதால்கூட அந்த உணவகத்தை மிகவும் பிடித்திருக்கும். குடும்பம், நண்பர்கள் மற்றும் தங்கள் வாழ்வில் மறக்க முடியாத நபர்களுடன் அங்கு செலவிட்ட நேரம் என்பது, ஒவ்வொரு முறை அந்த ரெஸ்டாரண்டுக்கு செல்லும்போதும் நினைவுகளில் ஊஞ்சலாடும்.

ஒருசிலர் அத்தகைய நினைவுகளையும், அந்த நிமிட உணர்ச்சிகளையும் மீண்டும் மீண்டும் அனுபவிப்பதற்காக, தாங்கள் மறக்க முடியாத இடத்துக்கு அடிக்கடி செல்வதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அமெரிக்காவில் ஒரு தம்பதி 20 ஆண்டுகளுக்கு முன்பு முதன்முதலாக சந்தித்த ரெஸ்டாரண்டுக்கு ஆண்டுக்கு ஒருமுறை சென்று வருவதை வாடிக்கையாக வைத்துள்ளனர். அண்மையில், அந்த ரெஸ்டாரண்டுக்கு சென்ற தம்பதி, அங்கு பணியாற்றும் ஊழியர்கள் மற்றும் உரிமையாளருக்கு 2 ஆயிரம் அமெரிக்க டாலரை டிப்ஸாக கொடுத்து, மகிழ்வித்துள்ளனர். இதனை அந்த ரெஸ்டாரண்ட் முகநூல் பக்கத்தில் காதலர் தினத்தையொட்டி பகிரப்பட்டுள்ளது.

அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள கிளப் லக்கி (Club Lucky) ரெஸ்டாரண்டில் 20 ஆண்டுகளுக்கு முன்பு பிப்ரவரி 12ம் தேதி 46வது பூத்தில் சந்தித்துள்ளனர். ஆண்டுக்கு ஒருமுறை அந்த ரெஸ்டாரண்டுக்கு செல்லும் அந்த தம்பதி இந்த முறையும் பிப்ரவரி 12ம் தேதி தாங்கள் சந்தித்த ரெஸ்டாரண்டுக்கு சென்று, அதே இடத்தில் அமர்ந்து மலரும் நினைவுகளை பகிர்ந்துகொண்டுள்ளனர். பின்னர் செல்லும்போது, 137 அமெரிக்க டாலர் மட்டுமே பில் செலுத்த வேண்டியிருந்த நிலையில், அதனுடன் 2 ஆயிரம் அமெரிக்க டாலரையும் டிப்ஸாக சேர்த்து கொடுத்துள்ளனர். 

Also read... காதலியை இம்ப்ரஸ் செய்த நபரை சிறையில் தள்ளிய காவல்துறையினர் - என்ன செய்தார் தெரியுமா?

அத்துடன், 20 ஆண்டுகளாக நல்ல நினைவுகளையும், உணவுகளையும் கொடுத்துவரும் கிளப் லக்கி ரெஸ்டாரண்ட் மேலும் பல்லாண்டுகள் அந்த சேவையை தொடரவேண்டும் என வாழ்த்தியுள்ளனர். மேலும், டிப்ஸை கடை ஊழியர்களுக்கு பகிர்ந்தளிக்குமாறும் அந்த தம்பதி கேட்டுக்கொண்டுள்ளது.

அவர்களின் இந்த வாழ்த்தினால் நெகிழ்ந்துபோன கடை உரிமையாளர், அந்த தம்பதியின் பில்லை முகநூலில் பதிவிட்டு மகிழ்ந்துள்ளார். மேலும், ஆண்டுதோறும் வரும் அந்த தம்பதிக்கு, அவர்கள் சந்திக்கும் 46வது பூத்தை ஒதுக்கி கொடுத்துவிடுவோம் எனவும் கடை உரிமையாளர் கூறியுள்ளார். 

கொரோனா ஏற்படுத்தியுள்ள மிகப்பெரிய தாக்கத்தால் ரெஸ்டாரண்ட் தவித்து வரும் நிலையில், அந்த தம்பதியின் மனிதநேயமிக்க செயல் கடை ஊழியர்களையும், தன்னையும் நெகிழ்ச்சியடைய வைத்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார். தங்களின் நன்றியை வார்த்தைகளால் விவரிக்க முடியவில்லை எனவும் கடை உரிமையாளர் கூறியுள்ளார். தம்பதியின் இந்த செயலுக்கு சமூகவலைதளங்களிலும் வரவேற்பு கிடைத்துள்ளது.உடனுக்குடனான செய்திகளுக்கு இணைந்திருங்கள்.
Published by:Vinothini Aandisamy
First published: