பாகிஸ்தானில் 3 மனைவிகளுடன் வாழும் 20 வயது இளைஞர்: 4-வது திருமணத்துக்காக தீவிரமாக பெண் தேடல்

மூன்று மனைவிகளுடன் பாகிஸ்தான் இளைஞர்

பாகிஸ்தானில் 3 மனைவிகளுடன் வாழ்ந்து 20 வயது இளைஞர் நான்காவது திருமணத்துக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறார்.

 • Share this:
  பாகிஸ்தானின் சியால்கோட் பகுதியைச் சேர்ந்த 20 வயது இளைஞர் அட்னான். இதுவரை மூன்று திருமணங்கள் செய்துள்ள அவர் தற்போது நான்காவது திருமணத்துக்கு பெண் பார்த்துவருகிறார்.

  இதுகுறித்து தெரிவிக்கும் அவர், ‘எனக்கு 16 வயது இருக்கும்போது எனக்கு முதல் திருமணம் நடைபெற்றது. அப்போது, நான் மாணவராக இருந்தேன். அதிலிருந்து 4 ஆண்டுகள் கழித்து எனக்கு இரண்டாவது திருமணம் நடைபெற்றது. அதன்பிறகு, கடந்த ஆண்டு 3-வது திருமணம் செய்துகொண்டேன். தற்போது, நான்காவது திருமணத்துக்கு பெண் பார்த்துக் கொண்டிருக்கிறேன். என்னுடைய 3 மனைவிகளும் பெண் பார்ப்பதற்கு எனக்கு உதவி செய்துவருகின்றனர். என்னுடைய மூன்று மனைவிகளின் பெயரும் எஸ் என்ற எழுத்தில் தொடங்குகிறது. அதனால், 4-வது பெண்ணுக்கும் எஸ் என்ற எழுத்தில் தொடங்கும் பெண்ணைப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். தற்போது, நான் மாதத்துக்கு 1 - 1.5 லட்ச ரூபாய் சம்பாதித்துக்கொண்டிருக்கிறேன். என்னுடைய வருமானம் ஒவ்வொரு திருமணத்தின்போது உயர்ந்துகொண்டிருக்கிறது’ என்று தெரிவித்தார்.  மூன்று மனைவிகளும் அட்னனுடன் ஒற்றுமையாகவே இருந்து வருகின்றனர். அட்னன் குறிப்பிடத்தக்க கவனம் செலுத்துவதில்லை என்பதுதான் அவர்களின் புகாராக இருந்துவருகிறது.
  Published by:Karthick S
  First published: