‘பக்காவாக பிளான் போட்டு பெண்ணின் உள்ளாடையை திருடிய வாலிபர்கள்’ - சிசிடிவி வீடியோவால் சிக்கி சின்னாபின்னம்!

பெண்ணின் உள்ளாடையை திருடிய வாலிபர்கள்

சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது. இதனிடையே வேடிக்கையாக பல மீம்ஸ்களை நெட்டிசன்கள் பறக்க விடுகின்றனர்.

  • Share this:
வீட்டு வாசலில் துவைத்து காயப்போட்டிருந்த பெண்ணின் உள்ளாடையை வாலிபர்கள் இருவர் திருடிச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகி சமூக வலைத்தளங்களை கலங்கடித்து வருகிறது. வாலிபர்களின் விசித்திர செயலை கண்டித்து திட்டியும், கிண்டலடித்தும் நெட்டிசன்கள் மீம்ஸ்களை பறக்க விடுகின்றனர்.

உத்தரப்பிரதேசத்தின் மீரட் நகரில் சதார் காவல் நிலைய எல்லை பகுதியில் இந்த விசித்திர சம்பவம் அரங்கேறியுள்ளது.

சதார் காவல்நிலையத்தில் கடந்த மார்ச் 14ம் தேதி சஞ்சய் சவுத்ரி என்பவர் புகார் ஒன்றை அளித்திருந்தார். அதில் தன்னுடைய மைனர் வயது கொண்ட மகளின் உள்ளாடைகளை இரண்டு வாலிபர்கள் திருடிச் செல்லும் வீடியோவை எடுத்து வைத்திருப்பதாகவும். வாலிபர்கள் இருவரும் உள்நோக்கத்துடன் இதனை செய்திருப்பதாகவும் அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரினார்.

சச்சின் குப்தா என்ற ஊடகவியலாளர் இந்த வீடியோவை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.

அதில் இளைஞர்கள் இருவர் ஸ்கூட்டர் ஒன்றில் வருகின்றனர். அதில் ஒருவர் இறங்கி செல்கிற நேரத்தில் மற்றொரு வாலிபர் ஸ்கூட்டரை ஸ்டேட்டு போட்டுவிட்டு சஞ்சய் சவுத்ரியின் வீட்டு வாசலில் காயப்போட்டிருந்த உள்ளாடையை திருடி வந்து ஸ்கூட்டியின் சீட்டுக்கு கீழே வைத்து பூட்டிவிட்டு வேக வேகமாக ஸ்கூட்டியை ஸ்டார்ட் செய்து பறந்துவிடுகிறார்.

இந்த நூதன திருட்டு சம்பவம் தொடர்பாக அந்த இரண்டு வாலிபர்களையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். முகமது ரோமின் மற்றும் முகமது அப்துல் என்ற அந்த இரு வாலிபர்களும் ‘வேடிக்கைக்காக’ உள்ளாடையை திருடியதாக காவல்துறையினரிடம் கூறியிருக்கின்றனர். இருவர் மீதும் திருட்டு உள்ளிட்ட பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ வைரலாகியுள்ளது.உள்ளாடை திருட்டு சம்பவத்தை  சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கிண்டலடித்து பதிவிட்டு வருகின்றனர்.
Published by:Arun
First published: